...

"வாழ்க வளமுடன்"

06 ஏப்ரல், 2011

கிச்சன் டிப்ஸ் !!!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

* பூண்டு, வெங்காயம் போன்றவற்றை முதல் நாளே ப்ரிட்ஜில் வைத்து மறுநாள் உரித்தால், சுலபமாக தோல் உரிக்க வரும்.


* உணவில் காரம் அதிகமாகி விட்டதா? கவலையை விடுங்கள். அதில், சிறிது எலுமிச்சம் பழச்சாறை சேர்த்தால் காரம் குறைந்துவிடும்.


* பிரியாணி செய்யும் போது அதில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டால், சாதம் ஒன்றுடன் ஒன்று ஓட்டாமல் இருக்கும்.



* எலுமிச்சம் பழம் வாடாமல் இருக்க, தினசரி ஒரு மணி நேரம் நீரில் போட்டு எடுத்து வைக்கலாம். இப்படி செய்தால் ஒரு வாரம் வரை வாடாமல் இருக்கும்.


* வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.



* கீரையின் வேர்பகுதி தண்ணீரில் இருக்குமாறு வைத்திருந்தால், கீரை மறுநாள் வரை வாடாமல் இருக்கும்.



* மாங்கொட்டையின் உள்ளே உள்ள பருப்பை வெதுவெதுப் பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பித்தளை பாத்திரங்களை துலக்கினால், அவை பளிச்சிடும். அதே போல், காபி போட்ட பின், அந்த காபி தூளை காயவைத்து பாத்திரம் துலக்கினால், பாத்திரங்கள் மின்னும்.



* பட்டாணியுடன் சிறிது சர்க்கரை சேர்த்து வேக வைத்தால், வெந்ததும் வாசனை நன்றாக இருக்கும்.



* சாம்பார் செய்யும் போது அதில் ஒரு நெல்லிக் காயை சேர்த்தால், சாம்பாரின் சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.



* உளுத்தம் வடை செய்யும் போது, சிறிது இட்லி மாவு சேர்த்து செய்தால், வடை எண்ணெய் குடிக்காது. சுவையும் நன்றாக இருக்கும்.



* முட்டை ஓட்டில் விரிசல் இருந்தால் வேக வைக்கும் போது, அதில் உள்ள திரவம் தண்ணீரில் கலந்து விடும். இதை தடுக்க தண்ணீரில் சிறிது வினிகர் ஊற்றி வேக வைக்கலாம்.



* அப்பளம், வடாம் போன்றவை வைத்திருக்கும் டப்பாவில், சிறிது பெருங்காயத்தை போட்டு வைத்தால், அவை அதிக நாட்கள் கெடாமல் இருக்கும்.



* மைக்ரோ ஓவனில் அரிசியால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை மீண்டும் சூடாக்கும் போது, சிறிது நெய் கலந்து சூடாக்கினால், வேகமாக சூடாகும்.



* முகத்திற்கு பூசும் மஞ்சள் கிழங்கு நீண்ட நாட்கள் இருந் தால், உளுத்துப் போகிறதா? மஞ்சள் கிழங்குடன், கற்பூரத் தையும் சேர்த்து டப்பாவில் போட்டு மூடி வைத்தால் உளுத்து போகாமல் இருக்கும்.



* கலந்த சாதம் செய்ய, சாதத் ஆற வைக்கும் போது அதில் சிறிது நல்லெண் ணெய் ஊற்றி ஆறவைத்தால், உதிராக இருக்கும்.



* தேங்காய் சாதத்தில் சிறிதளவு வேர்கடலையை சிறிது சிறிதாக உடைத்து போட்டால், சுவை பிரமாதமாக இருக்கும்.


* மைக்ரோ ஓவனில் சமைக்கும் போது காய்கறிகளை ஒரே அளவாக நறுக்க வேண்டும்; இல்லையென்றால், சில வெந்தும், சில வேகாமலும் இருக்கும்.


* ரவா லட்டு செய்யும் போது சர்க்கரையுடன், சிறிது பால் பவுடர் சேர்த்து செய்தால், சுவை சூப்பராக இருக்கும்.



* தக்காளி சாதம் செய்யும் போது, தண்ணீருக்கு பதில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால், சுவை கூடுதலாக இருக்கும்.



* தேங்காய் துருவலை பால் சேர்த்து அரைத்து பர்பி செய்தால், கூடுதல் வெண்மை நிறமாக இருக்கும்.



* பக்கோடா செய்யும் போது சிறிது ரவை கலந்து செய்தால், மொறுமொறுவென்று சுவையாக இருக்கும். இதில் ரவைக்கு பதில் வேர்க்கடலையை பொடி செய்து கலந்தும் பக்கோடா செய்யலாம்.




* முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்றவைகளை வேக வைக்கும் பொழுது ஒரு சொட்டு எலுமிச்சை சாறு ஊத்தி வேக வைத்தால் வேண்டாத வாசம் போய் விடும்.



* தேங்காய் துருவும் பொழுது ஓட்டையும் சேர்த்து துருவி பயன்படுத்தினால் குடல் புண் உண்டாகும். அதனால் வெள்ளைப் பகுதியை மட்டும் பயன்படுத்தவும்.



* மிளகாய் வத்தலை வறுக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் ஹச்...... ஊச்......... என்று தும்மல் ஏற்பட்டு பாடாய்படுத்தாது.



* வடகத்தை வெறும் வாணலியில் வறுத்த பின் எண்ணெயில் வறுத்தால் நன்றாக பொறிந்து மொறு, மொறுப்பாக இருக்கும்.



* வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது. வேப்பம்பூவிற்கு எங்கே போவது என நினைக்க வேண்டாம். கடைகளில் கிடைக்கிறது.



* அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது. தாது உப்புக்களும், வைட்டமீன்களும் அருகம்புல்லில் அதிகம்.



* ஓமப்பொடி செய்யும் பொழுது கடலைமாவு, மூன்று பங்கு, அரிசி மாவு ஒரு பங்கு சிறிது மைதா கலந்து செய்தால் எண்ணெய் குடிக்காமலும், தூள் அதிகமாகமலும், நன்றாக எடுக்க வரும். கறிவேப்பிலைச் செடி நன்கு வளர புளித்த மோருடன் நீர் கலந்து ஊற்றி வரலாம்.



* மைசூர் பாகு செய்வதற்குக் கடலை மாவை டால்டாவில் கரைத்து பின் சர்க்கரைப் பாகில் கிளறினால் கட்டியில்லாமல் மென்மையாக வரும்.



* ஜாடியில் ஊறுகாயைப் போடும் முன் கொதிக்கும் எண்ணெயில் நனைக்கப்பட்ட துணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்த பின் ஊறுகாயைப் போட்டு மூடி வைத்தால் பூசனம் பிடிக்காமல் இருக்கும்.. *** thanks google ***

"வாழ்க வளமுடன்"


4 comments:

பெயரில்லா சொன்னது…

//எலுமிச்சம் பழம் வாடாமல் இருக்க, தினசரி ஒரு மணி நேரம் நீரில் போட்டு எடுத்து வைக்கலாம். இப்படி செய்தால் ஒரு வாரம் வரை வாடாமல் இருக்கும். //

எங்கள் ஊரில் பிரிஜ்ட் கொஞ்ச வருடங்களுக்கு முன் தான் வந்தது. அதற்கு முன்னர், இப்படித்தான் செய்வார்கள். காரட்டையும் இப்படித் தான் போட்டு வைப்பார்கள்.

ஒரு சாடியில் மண் போட்டு தண்ணீர் தெளித்து ஓரிரண்டு கிலோ எலுமிச்சம் பழங்களை புதைத்து வைப்பார்கள். நீண்ட நாட்களுக்கு இருக்கும்.

பெயரில்லா சொன்னது…

இங்கே சொன்ன பலவற்றை வீட்டில் அம்மா செய்து இருக்கிறார். நம்பி நீங்களும் செய்து பார்க்கலாம். நான் காரன்டி

prabhadamu சொன்னது…

//// அனாமிகா துவாரகன் கூறியது...
//எலுமிச்சம் பழம் வாடாமல் இருக்க, தினசரி ஒரு மணி நேரம் நீரில் போட்டு எடுத்து வைக்கலாம். இப்படி செய்தால் ஒரு வாரம் வரை வாடாமல் இருக்கும். //

எங்கள் ஊரில் பிரிஜ்ட் கொஞ்ச வருடங்களுக்கு முன் தான் வந்தது. அதற்கு முன்னர், இப்படித்தான் செய்வார்கள். காரட்டையும் இப்படித் தான் போட்டு வைப்பார்கள்.

ஒரு சாடியில் மண் போட்டு தண்ணீர் தெளித்து ஓரிரண்டு கிலோ எலுமிச்சம் பழங்களை புதைத்து வைப்பார்கள். நீண்ட நாட்களுக்கு இருக்கும்.
////



நன்றி அனாமிகா :)

prabhadamu சொன்னது…

//// அனாமிகா துவாரகன் கூறியது...
இங்கே சொன்ன பலவற்றை வீட்டில் அம்மா செய்து இருக்கிறார். நம்பி நீங்களும் செய்து பார்க்கலாம். நான் காரன்டி
/////


நன்றி அனாமிகா :)

உங்கள் வீட்டில் செய்யும் அனுபவத்தையும் எங்களுடன் பகிர்ந்துக் கொண்டத்துக்கு மிக்க நன்றி.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "