...

"வாழ்க வளமுடன்"

03 ஏப்ரல், 2011

பொன்மொழிகள் ( படித்ததில் பிடித்தது )

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
1. அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை. 2. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும். 3.அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும். 4. இளமையில் படியுங்கள்; முதுமையில் அதை பயன்படுத்துங்கள். 5.ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும். 6. மருந்தைவிட மனக்கட்டுப்பாடு நோயை விரட்டும். 7. அறிவாளிக்கு வாழ்க்கை ஒரு திருவிழா. 8. நம்பிக்கை செழிப்பை தராது; ஆனால் தாங்கி நிற்கும். 9. துன்பம் இல்லாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை. 10. நல்ல நூலைப் போன்று சிறந்த நண்பன் வேறில்லை. * ப.நிஷாந்தி, நெல்லிக்குப்பம். *** வாழ்க்கை கணக்கு தோல்வியை – கழியுங்கள் முயற்சியை – கூட்டுங்கள் வெற்றியை – பெருக்குங்கள் பலனை – வகுத்துவிடுங்கள் புரிந்ததை- விரிவுபடுத்துங்கள் புரியாததை- சுருக்குங்கள் சரித்திரங்களை- சூத்திரங்களாக்குங்கள் உங்களை நீங்களே- மதிப்பிடுங்கள் * பி.குணாளன், சிறுவாச்சூர். *** கடன், பகை, நோய் இந்த மூன்றிலும் மிச்சம் வைத்தல் கூடாது. * படைகளால் சாதிக்க முடியாததை தந்திரம் சாதித்துவிடும்! * பகைவனின் பலவீனத்தை அறிய, அவனை நண்பனாக பாவிக்க வேண்டும். * காலம் சாதகமாக இல்லாத வரை, பகைவரைத் தோளில் சுமக்கத்தான் வேண்டும்! * விதியை நம்புபவன் எதையும் சாதிக்கமாட்டான். * அழிவை நோக்கிச் செல்பவன் பிறருடைய அறிவுரைகளுக்குச் செவி சாய்க்க மாட்டான். * அளவுக்கு அதிகமானபணிவை ஒருபோதும் நம்பக் கூடாது! * தன் கையே என்றாலும், விஷம் ஏறினால் வெட்டிவிடத்தான் வேண்டும்! * எந்தச் செயலுக்கும் மனமே சாட்சி! * விதை எப்படியோ, பழமும் அப்படியே! * பகைவனே என்றாலும், அவனின் நல்ல பண்புகளும் நமக்கு ஆசான்! * பணத்தின் மிகப் பெரிய பயன், அதை இல்லாதவர் களுக்குக் கொடுத்து மகிழ முடிவதுதான்! * நம்முடைய தொழில் எதுவானாலும் அதில் நமக்குச் சில போட்டியாளர்கள் இருப்பது நல்லதுதான். * தடைகளைக் கூட, நம்மை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளாகப் பார்க்க வேண்டும்! * மற்றவர்கள் முடியாது என்று நினைக்கிற ஒரு விஷயத்தை முடித்துக் காட்டுவதுதான், நல்ல தலைமைப் பண்பின் அடையாளம். * உயர்பதவி என்பது நிரந்தர சிம்மாசனம் அல்ல. அது நமக்குச் சரிப்படாவிட்டால், மற்றவர்களுக்கு இடம் தந்து விலகிவிட வேண்டும். * உங்களிடம் பணி புரிகிறவர்களை, மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்துங்கள். அவர்கள்தான் உங்களுடைய மிகப் பெரிய சொத்து. * உலகம் வெகுவேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு விஷயத்தை முடியவே முடியாது என்று சொல்லி முடிப்பதற்குள், வேறொருவன் அதைச் செய்து முடித்து, உங்கள் வாக்கைப் பொய்யாக்கி விடுகிறான். * இருக்கிற செல்வத்தைப் பகிர்ந்து கொடுத்தால், நம்முடைய நாட்டின் வறுமை எப்போதும் தீராது. இந்த வறுமையை ஒழிப்பதற்கு ஒரே வழி, நியாயப்படியும் தர்மப்படியும் நிறைய செல்வம் சேர்ப்பதுதான்! * தயாராக இருக்கிறவர்களுக்குத்தான் வாய்ப்புகள் கிடைக்கின்றன! * எப்போதும், எதற்காகவும் உங்களுடைய அக சந்தோஷத்தை விட்டுக் கொடுக்காதீர்கள். * கோழையின் அச்சம்கூட சில சமயங்களில் அவனை வீரனாக்கிவிடுவது உண்டு. * இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். * நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள், ஒவ்வொரு கண்ணும்தங்களையே பார்ப்பதாக எண்ணுவர். * உள்ளத்தின் ஒழுங்குமுற்றிலும் குலைந்திருந்தால், நாம் புறத்தில் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது. * அறியாமை, ஆண்டவனின் சாபம். அறிவோ, விண்ணை நோக்கி நாம் விரிக்கும் இறக்கை. * உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும். * உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம். * நன்மையென்றும் தீமையென்றும் எதுவும் இல்லை. அவ்விதம் ஆக்குவது அவரவர் மனமே. * உங்களைத் தவிர வேறு எந்த மனிதரையும் கண்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லை. * பிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட, தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை. * ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது. * தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளாத பெண்ணை வேறு யாரும் காப்பாற்ற முடியாது. * சிப்பாய் தன் துப்பாக்கியைப் போற்றுவது போலவும் இசைக் கலைஞன் வீணையைப் போற்றுவது போலவும் ஒரு பெண் தன் காதலனைப் போற்றுகிறாள். * சிலர் அளவுக்கதிகமான செல்வத்தில் திளைக்க, மற்றவர்கள் வறுமையில் வாடும்படியாக இருக்கும் நாடு சீர்குலைந்து அழிந்துவிடும். * நூறு விதமாக கூறினாலும், விவாதித்தாலும், விளக்கினாலும் மதம் ஒன்றுதான். * நமக்குப் பாரமாய் இருக்கும் மனிதர்களை மன்னித்துவிடலாம். நாம் பிறருக்கு பாரமாய் இருப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றமாகும். * அதிகம் ஊக்கம் உடையவர்களாகவும் குறைந்தவேலை உடையவர்களாகவும் இருக்கும் மனிதர்களே பெரும்பாலும் சண்டைக்காரர்களாகவும் இருக்கிறார்கள். * வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம். பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். * நல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக்கொள்ளும் நன் மதிப்பாகும். * திட்டமோ கவனமோ இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குபவர்கள்தான் தடுமாறுகிறார்கள். * நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மையறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் மூலகாரணமாகவும் இருக்கிறார். * எளிமையாகவும், இயல்பாகவும் இருப்பதையும் பேசுவதையும் மக்கள் அபூர்வமாகப் பார்க்கிறார்கள். * நம்மையும், நமது திறமையையும் நாமே மதிப்பதும் நம்பிக்கை கொள்வதும் மிகவும் அவசியம். * வாழ்த்தைக் கேட்டு வானத்தைத் தலைநிமிர்ந்து பார்க்கவும் வேண்டாம். வசவைக் கேட்டு தரை பார்த்துத் தலைகுனியவும் வேண்டாம். * சினிமா என்பது உலகின் சக்தி வாய்ந்த ஊடகம். இப்பேர்ப்பட்ட சினிமாவில் அவரவர் நாட்டு நாகரிகம் காப்பாற்றப்பட வேண்டும். * லட்சியம் ஏதுமின்றி அன்றாடத் தேவைகளுக்காக ஒரு வேலையில் சேர்ந்துவிட்டால், அதிலேயே மூழ்கி மங்கிவிடுவோம். * காலடிச் சுவடுகள் பதிகிற ஈரமணல் போல்தான் படைப்பாளியின் மனம். * பிரபலமில்லாத மனிதனாக வாழ்வது ஒன்றும் குறைச்சலான காரியமில்லை. * எவன், எந்தெந்த அளவு பாத்திரத்தை என்னென்ன முறையில் வைத்திருக்கிறானோ… அந்தந்த அளவு அவனுக்குகடவுளின் கருணை கிடைக்கிறது. * உயர்வு, தாழ்வுக்கு இடமற்றதுதான் உலகம். அவ்விரண்டும் மனிதனாகக் கற்பித்துக் கொண்டவை. * சாவுக்குப் பயப்படாத ஒருவன், எதையும் சாதிக்கும் சக்தி பெற்றவனாகி விடுகிறான். * வைராக்கியம் எங்கே தவறுகிறதோ, அப்போது துறவறம் தவறிப் போகும். * கல்லூரிகளும் சர்வ கலாசாலைகளும் பட்டதாரிகளைத் தான் உண்டாக்கும். புத்திசாலிகளை உண்டாக்கா! * ஒதுங்கிவாழ்வதே சந்நியாசம். ஊருடன் வாழ்வதே இல்லறம். * மனிதனுடைய ஆசை மேலோங்கி விட்டால் ஆண்டவனையே ஏமாற்ற முனைந்து விடுகிறான். * தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமின்றி நடந்து கொள்கிறவன், பொது வாழ்வில் ஒழுக்கமுடன் நடப்பான் என்பது வடிகட்டிய புரட்டு. * தனியாக இருக்கும்போது சிந்தனையிலும் கூட்டத்தில் இருக்கும்போது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும். * நாம் எவ்வளவு அறியாமையில் இருந்தோம் என்பதை நமக்கு அளந்து கொடுக்கிற கருவிதான் அறிவு. * எல்லார் இடத்திலும் தெய்வம்உண்டு. ஆனால் எல்லாரும் தெய்வத்திடம் இல்லை. * தேசபக்தனுக்கு தேசமே குறி. அரசியல்வாதிக்கு தேர்தலே குறி. * அதிகாரத்தில் இருப்பவனுக்கு அடக்க உணர்ச்சியும், அரசியல்வாதிக்கு நாவடக்கமும், தேசபக்தனுக்கு சேவா நோக்கமும் தவிர்க்க முடியாத தேவைகள். லட்சியத்தில் சுத்தம் இருக்கிறபோது எவ்வளவு பெரிய சக்தி எதிர்த்தாலும் அதை எதிர்க்க வேண்டியதுதான். * மக்கள் புரட்சி செய்தால், அது எப்போதும் நியாயமாகத்தான் இருக்கும். * உறுதி… உறுதி… இது இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பதுகூட கடினம். * உங்கள் எண்ணங்கள் எப்படியோ அப்படிதான் வாழ்க்கையும் அமையும். எனவே சிறந்ததையே எண்ணுங்கள். * அதிர்ஷ்டம் வந்தாலும் வராவிட்டாலும் துரதிர்ஷ்டத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய துணிச்சலால் எதையும் சாதித்துவிடலாம்! * குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைத்த பிறகும் கூண்டைவிட்டுத் தாண்டக்கூடாது என்றால், அது ஆகக்கூடிய காரியமில்லை. * தன்னால் ஏற்படுகிற தவறுகளை ஒப்புக்கொள்ள ஒருவர் என்றுமே பின்வாங்கக் கூடாது! * நாளை என்பது மிகமிகத் தாமதமாகும். இன்று முதலே வாழ்க்கையைச் சிறப்பாக நடத்திக்காட்டுங்கள். * எந்த வேலையைச் செய்யத் தனக்குத் தகுதி உள்ளது என்பதை ஒவ்வொரும் முதலில் கண்டுபிடித்தாக வேண்டும். * காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும். * தகுதி இல்லாதவர்களே பிறரை அவதூறு செய்து பொழுது போக்குகின்றனர். * தொகுப்பு கண்ணா *** எதிர்கொள்ளாமல் எதுவும் வெற்றி பெறுவதில்லை. * தோல்வி என்பது மீண்டும் முயற்சிக்க நல்ல வாய்ப்பு. * பொருளை தவிர வேறு செல்வங்கள் கிடைக்கப் பெறாதவனும் ஏழைதான். * இதயக் கண்ணாடி உடையும் போதும் அதன் சில்லுகள் பிறர் காலை கீறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். * வாதாட பலருக்கு தெரியும்; உரையாட சிலருக்குத்தான் தெரியும். * அமைதி மட்டுமல்ல புயலும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. * எம்.லூர்து ராஜ், சவேரியார்பாளையம்- *** அறிஞர்களின் அமுதமொழிகள் * பொய் சொல்வது கேவலம் அல்ல. அது மனித இயல்புதான். ஆனால், அந்தப் பொய்யை நம்புவதுதான் கேவலம் – தோரோ. * அறிவாளி தன் தவறை உணர்ந்து மனதை மாற்றிக் கொள்வான். முட்டாள் அதனை எப்போதுமே செய்ய மாட்டான் – நிக்கோபானி. * ஒரு மனிதன் நிமிர்ந்து நிற்க வேண்டும். மற்றவர்கள் அவனை நிமிர்த்தும்படி இருக்கக் கூடாது – சிம்மன்ஸ். * மரியாதைக்கு விலை இல்லை. ஆனால் அது எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடுகிறது – வில்லியம்டே. * இதயம் ரோஜா மலராக இருக்கும் போது நினைவும் நறுமணமாகத்தான் இருக்கும் – மெஹர்பாபா. * இருட்டை சபித்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு ஒரு சிறு மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள் – கான்பூசியஸ். * பல விஷயங்களை ஒரே சமயத்தில் தொடங்குபவன் எதையும் முடிக்க மாட்டான் – தாமஸ் கார்னல். * ஒருவனை மனிதனாக ஆக்குபவவை பதவிகளும், வசதிகளும் அல்ல. அவனுக்கு ஏற்படும் இடைïறுகளும், துன்பங்களுமே ஆகும் – மாத்ïஸ். *** காலண்டரில் கண்ட முத்துக்கள் திங்கள்- எழுதுவது அருமை. எழுதுவதை பலதடவை வாசிப்பது அதைவிட அருமை. செவ்வாய்- திருவிளக்கு இட்டாரை தெய்வம் அறியும்.நெய் ஊற்றி உண்டாரை நெஞ்சு அறியும். புதன்- கடுமையாக உழைப்பதைத் தவிர வெற்றிக்கு வேறு வழியே இல்லை. வியாழன்- எல்லோரும் பல்லக்கில் ஏறினால், பல்லக்கை யார்தான் தூக்குவது? வெள்ளி- நல்ல அறிவு எந்த மூலையில், எவ்வளவு தூரத்திலிருந்தாலும் அதனைச் தேடிச் செல். சனி- நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதென்பது எளிது. ஆனால், உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பதுதான் அரிது. ஞாயிறு- காலத்தின் மதிப்பு உனக்குத் தெரியுமா?…அப்படியானால் வாழ்வின் மதிப்பு உனக்குத் தெரியும். *** "வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "