...

"வாழ்க வளமுடன்"

24 ஜனவரி, 2011

செதில் உதிர் நோய் - Psoriasis

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மீன் செதில்கள் போல உடலில் அங்காங்கே தோன்றும். சொறிந்தால், உதிரும். தானேயும் உதிர்வது உண்டு. இதற்கு செதில் உதிர் நோய் என்று பெயர். ஆங்கிலத்தில் சொரியாஸ் (Psoriasis) என்பார்கள்.


இது தொல்லை தரும் நோய். பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். அரிப்பு எடுக்கும். சொறிந்தால், இரத்தம் கசிந்து புண்ணாகும். உரிய நேரத்தில் மருத்துவம் செய்துகொள்ளாவிட்டால், மூட்டுவலி ஏற்படும். எலும்புகள் பலவீனம் அடையும்.

*

செதில் உதிர் நோய் எப்படி ஏற்படுகிறது?

மனக் கவலை

மனக் கவலையால் ஏற்படும் நோய்களில் இந்த செதில் உதிர் நோயும் ஒன்று. மனதில் எந்நேரமும் கவலை. ஏதாவது சிந்தனை. நெருக்கடி. இதனால் சரியான தூக்கமின்மை. இதைத் தொடர்ந்து செதில் உதிர் நோய் வரும்.


உடலில் புரதச்சத்து குறைந்தாலும் இந்நோய் வரும். ஊக்கிகள் (ஆர்மோன்) சரியாக வேலை செய்யாத போதும் இந்த நோய் வரும்.


ஊக்கிகள் ஒழுங்காக இல்லாத பெண்களுக்கு மாதவிலக்கு ஒழுங்காக இருக்காது. இப்படிபபட்ட பெண்களையும் இந்த நோய் பற்றிக் கொள்ளும்.

*

பரவக்கூடியது

இது தொற்று நோய் அல்ல. ஒருவரிடமிருந்து ஒருவருக்குப் பரவாது. ஆனால், கட்டிலில் படுத்திருக்கும்போது செதில் உதிரும்.

நம் உடம்பிலேயே இது பரவக்கூடியது. முதலில் முழங்கையில், கை அக்குளில், கை நகத்துள், உச்சந்தலையில் ஒரு பொட்டுப் போல வரும். அந்த இடத்தைச் சுற்றிப் பரவும். பிறகு அங்கங்கே வரும். இந்நோயின் ஒரு தனித்தன்மை என்றால், வலக்காலில் வந்தால் இடக்காலிலும் அதே இடத்தில் வரும். இடக்கையில் வந்தால், வலக்கையிலும் வரும். உடலில் எந்த இடமாக இருந்தாலும் சரி, வலம் - இடம் இருபுறமும் வரும்.


ஆண், பெண் குறிகளில் வரக்கூடும். பெண்களுக்கு தொடை அக்குள், கை அக்குள்களில் வந்து வெளியே சொல்ல முடியாமல் செய்துவிடும்.

*

பால் குடியுங்கள்

உடலில் உள்ள சுண்ணாம்புச்சத்துதான் செதிலாக உதிர்கிறது. இதனால் எலும்பு, பற்கள் பலவீனம் ஆகும். மூட்டுவலியும் ஏற்படும். இதைத் தடுக்க காலை மாலை இருவேளையும் பால் குடிக்க வேண்டும்.


சாப்பாட்டில் புரதச்சத்தை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு, கொட்டை, விதைகளில் இந்தச் சத்து இருக்கிறது. நிலக்கடலை, பொரிகடலை, முந்திரி சாப்பிடலாம். பச்சைத் தக்காளி, எலுமிச்சை சாறு, ஆரஞ்சுப் பழங்களை ஒதுக்க வேண்டும். எந்த குளிர்பானமும் குறிப்பாக கோலாக்கள் குடிக்கக்கூடாது. மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.


செதில்கள் மீது இரவில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளவும். காலையில் அரப்புத்தூள் தேய்த்துக் கழுவவும்.


தமிழ், ஆங்கில மருந்துகள் இருக்கின்றன. மருத்துவரை சந்தித்து, ஆலோசனை பெறுங்கள்.

***
thanks iநியம்
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "