இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
1. அசீரணம்கறிவேப்பிலையுடன் சுட்டு புளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் பித்த வாந்தி, ஜீரணக் கோளாறுக்ள போன்றவை சரியாகும்.
2. ஆண்மை
A, பொன்னாங்கண்ணிக் கீரையுடன் மிளகு, சாம்பார் வெங்காயம் ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு பிரச்னை சரியாகும்.
*
B, கொடிப்பசலைக் கீரைச் சாறில் பாதாம் பருப்பை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
*
C, கானாம்வாழைக் கீரை (உலர்த்தியது – 100 கிராம்) மற்றும் தென்னம்பாளை, கொட்டைப்பாக்கு, முருங்கைப் பிசின் வகைக்கு 100 கிராம் எடுத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். விந்து முந்துதல் பிரச்னையும் தீரும்.
*
D, துத்திக்கீரையுடன், கற்கண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ஆண்மைக் குறைவு நீங்கும்.
*
E, பாலக் கீரையுடன் குடை மிளகாய், பூண்டு கசாகசா ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு குணமாகும்.
*
F, பாலக் கீரையுடன் முளை கட்டிய பச்சைப் பயிரைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
*
G, முள்ளிக் கீரை சாறில் கொள்ளை கொண்டைக் கடலையை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி சாப்பிட்டால், ஆண்மை பெருகும். நரம்புகள் இறுகும்.
*
H, பாற்சொரிக் கீரையைத் தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால், விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
*
I, சுக்குக் கீரைச் சாறில் முந்திரிப்பருப்பை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.
*
J, சுக்குக் கீரையுடன் குடை மிளகாயைச் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் விந்து விரைந்து வெளியேறுதல் பிரச்னை சரியாகும்.
***
3, ஆஸ்துமா
1, தூதுவளைக் கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிசபத்திரி ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து சாப்பிட்டால், மூச்சுத்திணறல், ஆஸ்துமா, குளிர்க்காய்ச்சல் போன்றவை குணமாகும்.
2, முசுமுசுக்கைக் கீரை சாறு எடுத்து அதில் திப்பிலியை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, மூன்று சிட்டிகை அளவு பொடியை ஒரு வெற்றிலையில் வைத்து, தேனில் குழைத்து, வெற்றிலையோடு சாப்பிட்டால் ஆஸ்துமா குணமாகும்.
3, முசுமுசுக்கைக் கீரை சாறில் சிறிது கோரோசனை கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு குணமாகும்.
4, துயிலிக் கீரை சாறில் சித்தரத்தையை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் மூச்சிரைப்பு, ஆஸ்துமா குணமாகும்.
***
4. இடுப்பு வலி
நச்சுக் கொட்டைக் கீரையை தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால் இடுப்பு வலி, கழுத்து வலி குணமாகும்.
***
5, இதய நோய்கள் குணமாக
1. மணத்தக்காளி கீரையோடு, பூண்டு 4 பல், நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.
2. கொத்தமல்லிச் சாறு, பூண்டுச் சாறு, வெங்காயச் சாறு மூன்றையும் சம அளவில் எடுத்து, தேன் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 30 மிலி அளவுக்குச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.
3. பிரண்டைத் தண்டுடன், வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.
4. வல்லாரை இலை (4), அக்ரூட் பருப்பு (1), பாதாம் பருப்பு (1), ஏலக்காய் (3), மிளகு (3) ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும்.
5, ஆரைக்கீரை, தாமரைப் பூ இரண்டையும் சம அளவு எடுத்து, ஏலக்காயை (4) தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால் இதய நோய்கள் அனைத்தும் குணமாகும்.
6, வாதநாராயணன் கீரையுடன் சுக்கு, ஓமம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.
7, வங்கார வள்ளைக் கீரைச் சாறில் பூண்டை (ஒரு பல்) அரைத்துச் சாப்பிட்டால் இதய நோய்களும், இரத்த அழுத்தமும் குணமாகும்.
***
6. இரத்த அழுத்தம்
1. முருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் இரத்த அழுத்தம், இதய நோய்கள் குணமாகும்.
*
2. பொன்னாங்கண்ணிக் கீரைச் சாற்றில் 5 கிராம் சீரகத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்பும்.
*
3. முசுமுசுக்கைக் கீரைச் சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை, மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராகும்.
*
4. ஆரைக்கீரைச் சாறில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால், இரத்த அழுத்த நோய் குணமாகும்.
*
5. மணலிக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராகும்.
*
6. சுக்குக்கீரையுடன் ஒரு கைப்பிடி அளவு துளசியைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குணமாகும்.
***
7. இரத்த ஓட்டம்
தூதுவளைக் கீரையை பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த ஓட்டம் சீராகும்.
***
8. இரத்தக் குறைவு
இரத்தக் குறைவால் சிலருக்கு மயக்கம் வருவதுண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரையைக் கொண்டு வந்து காய வைத்து இடித்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு, தினசரி காலை மாலை ஒரு ஸ்பூன் தேனில், ஒரு ஸ்பூன் பொடியைக் குழைத்துச் சாப்பிட்டு வரவும்.
***
9. இரத்தம் சுத்தம்
1. இரத்தம் சுத்தமில்லாவிட்டால் சில கோளாறுகள் உடம்மில் ஏற்படுகின்றன. இரத்தத்தைச் சுத்தப்படுத்த, பூசணிக்காயை இடித்துச் சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சுத்தமான தேனைக் கலந்து காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வரவும். இரத்தம் சுத்தமாகும். பூசணிக்காய் ஒத்துக்கொள்ளாதவர்கள் இதனைச் செய்ய வேண்டாம்.
*
2. அரை கீரைச் சாறில் ஒரு கிராம் ஏலரிசியை (ஏலக்காய் விதை) சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.
*
3. புதினா இலை மற்றும் வேப்பிலை இரண்டையும் சம அளவு சேர்த்து அரைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தம் தூய்மையாகும்.
*
4. வெந்தயக் கீரையுடன் சிறிது வாழைப்பூ, மிளகு சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் இரத்தம் தூய்மையாகும். தோல் நோய்களும் குணமாகும்.
*
5. தூதுவளைக் கீரையுடன் சம அளவு வேப்பந்துளிர் சேர்த்து கஷாயமாக்கி, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், இரத்தம் தூய்மையாகும். கிருமிக் கோளாறுகள் நீங்கும்.
*
6. பொடுதலைக் கீரையுடன் கடுக்காய் (1), நெல்லிக்கனி (1), தான்றிக்காய் (1) மூன்றையும் தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால், இரத்தம் சுத்தமாகும். உடல் வலிமை உண்டாகும்.
*
7. அம்மான் பச்சரிசி கீரையுடன் மிளகு (3), வேப்பிலை (3) இரண்டையும் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.
*
8. புளியாரைக் கீரையுடன் சிறிது வேப்பந்துளிர், மிளகு (3), மஞ்சள் தூள் ( 2 சிட்டிகை) ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் இரத்தம் தூய்மையாகி, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
*
9. சுக்காங் கீரையுடன் வேப்பிலை (இரண்டு), சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்களும் குணமாகும்.
*
10. பாற்சொரிக் கீரையுடன் சிறிது சோம்பு சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.
***
10. இரத்த சோகை
1. ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையுடன் 10 மிளகைச் சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் இரத்த சோகை முழுமையாகக் குணமாகும்.
*
2. கல்யாண முருங்கை இலை, முருங்கை இலை, மிளகு, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இரத்த சோகை குணமாகும்.
*
3. பாலக் கீரையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
***
11. இரத்த விருத்தி
பாற்சொரிக் கீரையைப் பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் இரத்த விருத்தி உண்டாக்கும்.
***
12. இருமல்
1. முளைக்கீரை, அதிமதுரம் (ஒரு துண்டு) மஞ்சள் (3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.
*
2. புளிச்சக்கீரையை அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
*
3. வெந்தயக் கீரையுடன், உலர்ந்த திராட்சை (10), சீரகம் அரை ஸ்பூன் இரண்டையும் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.
*
4. கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறில் அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் இருமல், புகைச்சல் ஆகியவை சரியாகும்.
*
5. தூதுவளைக் கீரையுடன் அதிமதுரம், தனியா, உலர்ந்த திராட்சை ஆகியவற்றைச் சேர்த்துக் காய்ச்சி கஷாயமாக்கி வடிகட்டிச் சாப்பிட்டால், இருமல், விடாத தும்மல், புகைச்சல் போன்றவை குணமாகும்.
*
6. முசுமுசுக்கைக் கீரைச் சாறில் அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, 2 கிராம் அளவுப் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல், புகைச்சல் போன்றவை குணமாகும்.
*
7. பண்ணைக் கீரைச் சாறில் அதிமதுரத் தூளை கலந்து சாப்பிட்டால், எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.
*
8. வங்கார வள்ளைக் கீரை, கற்பூரவல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் இருமல், சளி, ஆஸ்துமா குணமாகும்.
*
9. மணலிக் கீரைச் சாறில் உலர்ந்த திராட்சையைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.
***
13. உடல் சூடு
1. அகத்திக்கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும். இளநரை ஏற்படுவதையும் தடுக்கும்.
*
2. கொத்தமல்லியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்கு மென்று தின்றால் உடல் சூடு குறையும். நன்கு பசி எடுக்கும்.
*
3. வெங்காயத் தாளை அரைத்து, அதில் வெந்தயத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
*
4. வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
*
5.கல்யாண முருங்கை இலையுடன் ஊற வைத்த வெந்தயத்தை ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், உடல் சூடு, வெள்ளைப்படுதல், வெட்டைச்சூடு போன்ற குறைபாடுகள் தீரும்.
*
6. கொடிப்பசலைக் கீரையை உளுந்து ஊற வைத்த தண்ணீர் சேர்த்து அரைத்துக் குடித்தால், உடல் சூடு, வெட்டைச் சூடு வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.
*
7. கொடிப்பசலைக் கீரைக் கீரையை அரைத்து தலையில் கட்டிக்கொண்டால், வெட்டைச்சூடு, கண் எரிச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் தீரும்.
*
8. குப்பைக் கீரையுடன் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
*
9. கானாம் வாழைக் கீரையைக் கைப்பிடி அளவு அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். அடிக்கடி சாப்பிட்டால் வெட்டைச் சூடு குறையும்.
*
10. பொடுதலைக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு, குடல் புண் ஆகியவை தீரும்.
*
11. புளியாரைக் கீரையை சிறுபருப்பு சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தீரும்.
*
12. பிண்ணாக்குக் கீரைச் சாறில் நெல்லிக்காய், சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, பிறகு கால வைத்துப் பொடியாக்கி தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
*
13. முக்குளிக் கீரையுடன் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
*
14. முருங்கைக்கீரையை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு தணியும்.பொடுகுப் பிரச்னையும் இருக்காது.
*
15. பாற்சொரிக்கீரை, முளைக்கீரை இரண்டையும் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
***
"வாழ்க வளமுடன்"
1 comments:
நீர்முள்ளி 100 கிராம்
ஓரிதழ்தாமரை 200 கிராம்
ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
50 கிராம்
அஸ்வஹந்தா 50 கிராம்
பூனைக்காலி 100 கிராம்
முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123
கருத்துரையிடுக