...

"வாழ்க வளமுடன்"

04 ஜூலை, 2011

வெள்ளெருக்குவின் மருத்துவப் பயன்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


தரிசு நிலங்களிலும், ஆற்றங்கரைகளிலும் காணப்படும் வெள்ளெருக்கு புதர்செடி வகையைச் சேர்ந்தது.
கருஞ்சிவப்பு அல்லது வெண்மை நிற மலர்கள் நெடியுடன் கூடிய மணம் கொண்டவை. இந்த செடியின் இலைகள், மலர்கள், லேடக்ஸ்பால், வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.


இலைகளின் பொடியை எண்ணெயில் கொதிக்க வைத்து தோல்வியாதிகள், படை, கொப்புளங்களுக்கு பூச்சாகப் பயன்படுகிறது. வதக்கிய இலைகள் வீக்கமடைந்த மற்றும் வலியுள்ள மூட்டுக்களின் மேல் வைத்து கட்டப்படுகிறது.


செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

எருக்கின் மருத்துவ குணங்களின் அடிப்படையாக உள்ள சைகுளோ சேடால், புரோசெஸ்டிரால், கலோடிரோஃபின், கைகேன்சியோல் சைரியோ ஜெனின் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.


பால்வினை நோய்கள் தீரும்

இலைகளின் கலவை காய்ச்சலை குணப்படுத்தக்கூடியது. வெள்ளைநிறப் பால்போன்ற லேடக்ஸ் கருச்சிதைவினை தூண்டக்கூடியது. சிறுகுச்சியினை லேடக்ஸ் பாலில் தேய்த்து கருப்பை வாயில் தடவினால் கருப்பை சுருக்கம் அடைந்து கருச்சிதைவு ஏற்படுகிறது.

மலர்கள் ஜீரணத்தை தருபவை, வயிற்று வலியினை போக்கக் கூடியவை. பசியின்மை, ஆஸ்துமா, சளி, இருமல் ஆகியவற்றினை போக்கும் திறன்கொண்டவை. உலர்த்தப்பட்ட மலர்கள் சர்க்கரையுடன் சேர்க்கப்பட்டு தொழுநோய், பால்வினை நோய்களுக்கு மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.


வேர்ப்பட்டை

வேர்ப்பட்டை உடலின் சுரப்பிகளை ஊக்கப்படுத்தும். தோல்வியாதிகள், யானைக்கால் வியாதி, அடிவயிறு வீக்கம், வயிற்றுப் புழுக்கள், தோலடி நீர்கோர்வை ஆகியவற்றிர்க்கும் மருந்தாகிறது. வேர்ப்பட்டையின் மேல் உள்ள கார்க் போன்ற பகுதியைப் பிரித்தெடுத்துவிட்டு பட்டையினை அரைத்து பழைய கஞ்சியுடன் பசையாக்கி யானைக்கால் நோயினால் பாதிக்கப்பட்ட கால் மற்றும் விரைப் பகுதிகளின் மீது தடவப்படுகிறது.

வேர்ப்பட்டையினால் தயாரிக்கப்பட்ட மருந்துகள் தொழுநோய், பால்வினை நோய், பால்வினை நோயின் புண்கள், வயிற்றுப்போக்கு, நாள்பட்ட மூட்டுவலி ஆகியவற்றை குணப்படுத்தும். பால்போன்ற சாறு தலையின் படை மற்றும் மூல வியாதியினை போக்கும். தேனுடன் கலந்து வாய்ப்புண்ணுக்கும், பஞ்சில் தோய்த்து சொத்தை பல் வலிக்கும் மருந்தாகப் பயன்படு்ததப்படுகிறது.


மஞ்சள் காமாலை குணமாகும்

வேர்ப்பட்டையின் பொடி வாந்தியினைத் தூண்டக்கூடியது. நாள்பட்ட மூட்டுவலிக்கு, மஞ்சள் காமாலைக்கு மிளகுடன் சேர்த்து இருவேளை கொடுக்கப்படுகிறது. பால் திரிந்தபின் மேலே காணப்படும் நீருடன் சோடியம் கார்பனேட் கலந்து கொடுக்கப்பட்டால் ஒரே வாரத்தில் மஞ்சள் காமாலை குணமாகும்.

மருந்து தயாரிப்பதற்கு மிக வயதான தாவரத்தின் வேரினை வெப்பமான அல்லது உலர் காலத்தில் பிரித்தெடுக்க வேண்டும். வேரினை தோண்டியதும் பட்டையினை பிரித்தெடுக்காமல் ஒரு நாள் கழித்தே எடுக்க வேண்டும். வேர்ப்பட்டை தூளினை தயாரிப்பதற்கு முன் பட்டையின் மேல் புறத்தில் உள்ள தடித்த கார்க் போன்ற பகுதியினை சுரண்டி எடுத்துவிட வேண்டும்.


***
thanks gnanamuthu
***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "