...

"வாழ்க வளமுடன்"

12 ஜூன், 2011

கிழமைகள் ஏற்பட்டது எவ்வாறு?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


நாட்களுக்குப் பெயர் வந்த வரலாறு ஒரு சுவையான கதை. மனிதனின் வரலாறு ஆரம்பமான காலத்தில், நாட்களுக்குப் பெயர் கிடையாது. அதற்குக் காரணம் என்ன? மனிதன், வாரத்தைக் கண்டுபிடிக்கவில்லையா?

பண்டைய நாட்களில் காலத்தை மாதங்களாகவே பிரித்திருந்தனர். ஒவ்வொரு மாதத்திலும் பல நாட்கள் இருந்தன. அத்தனை நாட்களுக்கும் பெயர் வைப்பதற்குச் சாத்தியப்படவில்லை.

மனிதர்கள் நகரங்களை அமைத்தபிறகு வாணிபம் செய்வதற்கு, அதாவது சந்தை கூடிப் பொருட்களை வாங்கவும், விற்பனை செய்யவும் தனியாக ஒருநாள் அவர்களுக்குத் தேவைப்பட்டது. அதற்காக அவர்கள் 10 நாட்களுக்கு 1 நாள் ஒதுக்கினார்கள். சிலசமயங்களில் 7 நாட்களுக்கு 1 நாள் ஒதுக்கப்பட்டது. அதாவது 7-வது நாளே வணிக நாளாக அமைந்தது.

பண்டைக் காலத்துப் பாபிலோனியர் ஒவ்வொரு 7-வது நாளையும் வணிகத்துக்கும், மத விஷயங்களுக்கும் ஒதுக்கினர். அந்த நாட்களில் அவர்கள் இந்த இரண்டு அலுவல்களைத் தவிர வேறு எந்த வேலையையும் செய்யவில்லை.

யூதர்களும் பாபிலோனியர்களின் உதாரணத்தைப் பின்பற்றினர். ஒவ்வொரு 7-வது நாளையும் மத விஷயங்களுக்கு மட்டுமே அவர்கள் ஒதுக்கினர். இவ்வாறு வாரம் பிறந்தது. வாரம் என்பது இரு வாணிப நாட்களுக்கு இடைப்பட்ட காலம். வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் அவர்கள் பெயர் வைத்தனர். ஆனால் அந்தப் பெயர்கள் எண்களாகவே அமைந்திருந்தன. சனிக்கிழமைக்குப் பிறகுஅவர்கள் நாட்களை எண்ணிக்கொண்டு வந்து சனிக்கிழமையுடன் முடித்தனர். அவர்களுடைய திட்டப்படி ஞாயிறு முதல் நாளாகவும், சனிக்கிழமை ஏழாவது நாளாகவும் அமைந்தன.

வாரத்துக்கு 7 நாட்கள் என்ற முறையை எகிப்தியர்களும் கடைப்பிடித்தனர். அத்துடன் அவர்கள் நிற்கவில்லை. வாரத்தின் நாட்களுக்கு அவர்கள் 5 கிரகங்களின் பெயர்களைச் சூட்டினர்.


எகிப்தியர்கள் வைத்த பெயர்களை ரோமானியர்கள் பின்பற்றினர். சூரியனின் பெயர் ஞாயிறு. சந்திரனின் பெயர் திங்கள். மார்ஸ் அல்லது டியூ, ரோமானியர்களின் போர்த் தெய்வம். அந்தப் பெயர் செவ்வாய்க்கிழமை ஆயிற்று. `மெர்க்குரி’ தெய்வத்தின் மற்றொரு பெயர் (ஓடன்) புதன்கிழமை ஆயிற்று. `தர்’என்பது ரோமானியர்களின் இடித்தெய்வம்.

அது `தர்ஸ்டே’ ஆயிற்று. அதாவது வியாழக்கிழமை. மறுநாள் வெள்ளிக் கிழமை. அந்தப் பெயர் எப்படி வந்தது? `ப்ரிக்’ என்பது ரோமானியர்களின் மற்றொரு தெய்வத்தின் மனைவி. அந்தப் பெயர், `ப்ரைடே’, அதாவது வெள்ளிக்கிழமை ஆயிற்று. சனிக்கிரகத்தின் பெயர் சனிக்கிழமைக்கு வந்தது.


***
thanks vayall
***

"வாழ்க வளமுடன்"

2 comments:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

பொது அறிவுப் பதிவு பகிர்வுக்கு நன்றி சகோ

prabhadamu சொன்னது…

/// தோழி பிரஷா( Tholi Pirasha) கூறியது...
பொது அறிவுப் பதிவு பகிர்வுக்கு நன்றி சகோ
////
thanks தோழி பிரஷா :)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "