இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
மயில்கள், பசியானிடே குடும்பத்தின், பேவோ இனத்திலுள்ள இரண்டுவகைகளைக் குறிக்கும். மயில்கள், ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது.
ஆண்மயில் பெண்ணைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. தோகையில் வரிசையாகக் ‘கண்’ வடிவங்கள் உள்ளன.
தோகையை விரிக்கும் போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன. பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது.
மயில் இந்தியாவின் தேசியப்பறவை ஆகும்.
ஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம் :
தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து மயில் தோகையை இறக்குமதி செய்து வந்தனர் அரேபியர். தமிழ் தோகை, அரபிய மொழியில் tawus ஆகியது.
அங்கிருந்து கிரேக்கத்திற்கு சென்ற மயில் தோகை, அங்கு pfau ஆக மாறியது. அது லத்தீன் மொழியில் பேவோ ஆக மாறியது.
அதிலிருந்து ஆங்கிலத்தில் பேவ் எனவும், பின்னர் Peacock எனவும் மருவியது.
***
thanks pu.u
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக