...

"வாழ்க வளமுடன்"

20 மே, 2011

அறியா தகவல்களையும் அறிவோம் !!!!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


கொடைக்கானல் பகுதிகளில் காணப்படும் குறிஞ்சிப் பூ, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். அதுபோல, Phyllos- tachys bambusoides என்னும் மூங்கில் வகை, 120 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூக்குமாம்.

*

உலகின் மிகச்சிறிய பசு, இங்கிலாந்தில் ‘மார்டின் ரைடகர்’ என்பவர் வீட்டில் வளர்கிறது. ‘டெக்ஸ்டா’ இனத்தைச் சேர்ந்த இந்தப் பசுவின் உயரம் 84 செ.மீ.தான். கின்னஸிலும் இடம் பெற்றுள்ளது இந்தப் பசு.

*

‘மூடன், மட்டி, மடையன்...’ ஆகிய சீடர்களைக் கொண்ட பரமார்த்த குரு கதை, அனைவருக்கும் தெரியும். இதை எழுதியவர் - இத்தாலியில் இருந்து வந்து, தமிழ் பயின்ற வீரமாமுனிவர்.

*

ஜப்பான் நாட்டில் குழந்தைகளுக்கு இரண்டு கைகளாலும் எழுதுவதற்கு பயிற்சி கொடுக்கிறார்கள்.

*

சுவையான பழங்களைத் தரும் மரம் என்றாலும், இலந்தை மரத்தில் பறவைகள் எதுவும் கூடு கட்டுவதில்லை.

*

திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய துதிகளை தமிழ்நாட்டில் மட்டும் பாடுவதில்லை. தாய்லாந்து நாட்டில் மன்னர் முடிசூடும் போதும் பாடுகிறார்கள்.

*

உலகின் முதலாவது சுரங்க ரயில் பாதை, 1863ஆம் ஆண்டு லண்டனில் அமைந்தது. இந்தியாவில் - 1984ஆம் ஆண்டு கல்கத்தாவில் அமைந்தது.

*

உலகம் முழுவதும் 3000 மொழிகள் பேசப்படுகின்றன. என்றாலும் 31 மொழிகள்தான் ஐந்துகோடிக்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுவதாக தெரிவிக்கிறது ஓர் ஆராய்ச்சி.

*

கேள்விக்குறியை இப்போது நாம் வாக்கியங்களில் பயன்படு த்துகிறோம். முதன்முதலாக இலத்தீன் மொழியில்தான் இது பயன்படுத்தப்பட்டது.

*

பசுமைப்புரட்சி என்றால் விவசாயப் பெருக்கம்: வெண்மைப்புரட்சி என்றால், பால் உற்பத்தி; மஞ்சள் புரட்சி என்றால் எண்ணெய் வித்துக்களில் உற்பத்தி; நீலப்புரட்சி என்றால், மின் உற்பத்தி. இளஞ்சிவப்பு புரட்சி என்றால் என்ன தெரியுமா? மருத்து வகை உற்பத்திப் பெருக்கம்!

*

உலகின் அதிக எடை கொண்ட பெரிய மரம், கலிஃபோர்னியாவில் உள்ள ‘ஜெனரல் ஷெர்மன்’ என்ற மரம் என்கிறார்கள். ஒரே நேரத்தில் 2.5 லட்சம் பேர், இதன் நிழலில் இருக்கலாம் என்றால், அதன் பிரம்மாண்டம் எப்படியிருக்கும்?!

*

காய்ந்த நிலத்தில் மழை பொழிந்த உடன் ஒரு மணம் வெளிப்படுகின்றது. இதனை மண் வாசனை என்பர். இது எப்படி ஏற்படுகின்றது?

நிலத்தில் ஸ்ட்ராப்டோமைசிஸ் (Stretomyces),, ஆக்டினோமைசிஸ் (Actinomyces) போன்ற எண்ணற்ற பாக்டீரியாக்களும், பிற நுண்ணுயிர்களும் உள்ளன. இவை வறண்ட நிலத்தில் அதிக அளவு உள்ளன. ஒரு கிராம் நிலத்தில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட நுண்ணுயிர்கள் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.


வறண்ட நிலத்தில் மழை பொழிந்தவுடன் இந்த நுண்ணுயிர்கள் ஜியோஸ்மின் (Geosmine) மற்றும் டை - மிதைல் ப்ரோமியால் போன்ற எளிதில் ஆவியாகக் கூடிய வேதியல் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இந்த வேதியல் பொருட்கள் காரணமாகவே, காய்ந்த நிலத்தில் மழை பொழிந்தவுடன் மணம் கிளம்புகின்றது.


*

தண்ணீர் மேலிருந்து கீழ்நோக்கிப் பாய்கின்றது. அதேபோன்று, மேல்நோக்கி எறியப்படும் பொருட்களும் கீழ்நோக்கியே விழுகின்றன. ஆனால் தீப்பிழம்பு மேல் நோக்கி எரிகின்றது. ஏன் இந்த வேறுபாடு?

உலகில் உள்ள அனைத்துப் பொருட்களுமே, புவி ஈர்ப்பின் காரணமாக பூமியின் மையம் நோக்கி இழுக்கப்படுகின்றன. மேலும் நீரின் அடர்த்தி காற்றின் அடர்த்தியைவிட மிக அதிகம். இதன் காரணமாக, தண்ணீர் மேல் நிலையிலிருந்து கீழ் நோக்கிப் பாய்கின்றது.


ஆனால், தீப்பிழம்பு என்பது ஒளிவீசுகின்ற சூடாக்கப்பட்ட வாயுக்களால் ஆனது. சூடாக்கப்பட்ட வாயுக்களின் அடர்த்தி, சாதாரண காற்றின் அடர்த்தியைவிட மிகக் குறைவு. இதன் காரணமாகவே தீப்பிழம்பு மேல்நோக்கி எரிகின்றது.

*

நாய், உட்கார அல்லது படுக்கும் முன் அந்த இடத்தை இரண்டு அல்லது மூன்றுமுறை சுற்றி வந்த பிறகே, அவ்விடத்தில் அமர்கின்றது. இந்த வினோதமான நிகழ்ச்சியின் காரணம் என்ன?

நாய் ஒரு இடத்தைச் சுற்றும்போதே காற்று எந்த திசையிலிருந்து வீசுகிறது என்பதை உணர்கிறது. அதைத் தொடர்ந்து காற்று வீசும் திசைக்கு எதிராக உட்கார்கிறது; அல்லது படுக்கிறது.

இச்செயல் மூலம், நாய் தன் அற்புதமான முகரும் திறன் காரணமாக தன் எதிரிகளின் நடமாட்டத்தை விரைவில் உணர்ந்து கொள்கிறது. அதனால் எதிரியின் தாக்குதலில் இருந்து எளிதில் தப்பிக்கவும் முடிகிறது.

*

நண்பனா?எதிரியா?

உயிர் வாழ தண்ணீர் அவசியம். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. தாகத்தை தண்ணீரால் மட்டும்தான் தீர்க்க முடியும்.

தண்ணீரைப்போல, மின்சாரமும் இன்றைய உலகில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றுதான். மின்சாரத்தை நம்மால் பார்க்க முடியாவிட்டாலும், அதன் பயன்பாடு நம்முடன் கலந்திருக்கிறது.

*

ஆனால், தண்ணீரும் மின்சாரமும் ஒன்றாகக் கலந்தால்? அது ஆபத்தோ ஆபத்து.

வேடிக்கை என்னவென்றால், தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஒருபுறம் அணைக்கட்டுகளிலிருந்து; மறுபுறம் கடலிலிருந்து. ஆனாலும் தண்ணீரும், மின்சாரமும் எதிரிகள்தான். மின்சாரம் பாய்ந்து இருவர் பலி என்பதுபோன்ற செய்திகளை நாம் அவ்வப்போது படிக்கிறோம்.

மழைக் காலங்களில், அறுந்து தொங்கும் மின்சாரக் கம்பிகளைத் தவறுதலாகத் தொடும்போது, மின்சாரம் பாய்ந்து இறப்பு ஏற்பட்டு விடுகிறது.

மின்சாரத்தைக் கடத்துவதில் தண்ணீர் ரொம்ப வேகம். தண்ணீர்த் தொட்டிளில், ஷவர் பாத்தில், குளியல் அறையில் மின்சாரத்தால் ஏற்படும் பாதிப்புகள் அநேகம். அதிலிருந்து காத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.


அமெரிக்காவில் விற்கப்படும் HAIR DRYERகளில், பெரிய எச்சரிக்கை வாசகங்கள் - ‘தண்ணீர் அருகில் இதைப் பயன்படுத்தாதீர்கள்’ என்று.

*

எல்லாவிதமான தண்ணீரிலும் மின்சாரம் பாயுமா?

தண்ணீரில் மின்சாரம் பாயத்தான் செய்யும். அதற்காக கடலில், ஒரு சிறிய மின் ஒயரைப் போட்டால், கடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து, அதில் இருப்பவர்கள் பாதிக்கப்படுவார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குறைந்த அளவிலான தண்ணீரில் மின்சாரம் பாயும்போது, மின்சாரத்தை அந்தத் தண்ணீர் கடத்தும். குறைந்த சக்தியிலான மின்சாரம், ஒரு கடலளவு தண்ணீரில் பாயாது.

தவிர, மிகவும் சுத்தமான தண்ணீரில் மின்சாரம் பாயாது. அதாவது, பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீரைப் போல, பலமடங்கு சுத்தமான தண்ணீரில் மின்சாரம் பாயாது.

*

ஏன் தெரியுமா?


இரு மடங்கு ஹைட்ரஜனும் ஒரு மடங்கு ஆக்சிஜனும் என்ற விகிதத்தில் உள்ளது தண்ணீர். சாதாரண தண்ணீரில், அயனிகள் எனப்படும் மின்காந்தத் துகள்கள் இருக்கும். மேலும், அதில் எலக்ட்ரான்களும் இருக்கும். அணுத்துகள்களில் உள்ள எலக்ட்ரான்கள், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு பாயும்போது, மின்சாரம் ஏற்படும்.


மிகவும் சுத்தப்படுத்தப்பட்ட தண்ணீரில், எலக்ட்ரான்கள் இருப்பதில்லை என்பதால், அவை மின்சாரத்தைக் கடத்துவதில்லை. அத்தகைய சுத்தமான தண்ணீரில் சிறுதுளி உப்பைக் கலந்தால் அது மின்சாரத்தைக் கடத்தும்.


எனவே தண்ணீர் படும் இடங்களில், மின்சாதனப் பொருட்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். தவறுதலாக, மின்சாரம் தண்ணீரில் பாய்ந்தால், மின் ஒயரையோ, பிளக்கையோ, அந்தத் தண்ணீரையோ தொடக்கூடாது. வேகமாகச் சென்று, மெயின் ஃப்யூஸ் கேரியரை பிடுங்கிவிட வேண்டும்.

*

சாப்பிடாமல் ஒரு மாதம் வரை கூட உயிர் வாழலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு வாரம் தாண்டி உயிர்வாழ முடியாது.

*

உறைந்த நீர் சாதாரண நீரை விட ஒன்பது சதவிகிதம் குறைவான எடை கொண்டது. அதனால்தான் தண்ணீரில் ஐஸ் கட்டி மிதக்கிறது.

*

மனித மூளையில் 75 சத விகிதம் தண்ணீர்தான். எலும்புகளில் உள்ள நீரின் அளவு 25 சதவிகிதம்.

*

ஒரு லிட்டர் தண்ணீரின் எடை 1.01 கிலோ கிராம்.

*

உலகம் தொடக்கத்தில் எவ்வளவு தண்ணீரைக் கொண்டிருந்ததோ அதே அளவு தண்ணீரைத்தான் இப்போதும் கொண்டிருக்கிறது.***
thanks malaikakitham
***

"வாழ்க வளமுடன்"

2 comments:

Lakshmi சொன்னது…

உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன். நேரம்
கிடைக்கும் போது பாருங்கோ.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_9552.html

prabhadamu சொன்னது…

/// Lakshmi கூறியது...
உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன். நேரம்
கிடைக்கும் போது பாருங்கோ.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_9552.html
////நன்றி அம்மா :)

இந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "