...

"வாழ்க வளமுடன்"

23 மே, 2011

அறியா விஷயம் அறிந்துக் கொள்வோம் !!!!‏ part - 3

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மனித உடல் பற்றிய அபூர்வ தகவல்கள்!

நமது ம‌னித உட‌ல்க‌ள் ப‌ற்‌றிய பல தகவ‌ல்க‌ள் த‌ற்போது‌ம் ஆராய‌ப்ப‌ட்டு பல உ‌ண்மைக‌ள் வெ‌ளி வ‌ந்து கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கி‌ன்றன. அ‌தி‌ல் பல நம‌க்கு ஆ‌ச்ச‌ரி‌ய‌த்தையு‌ம் ஏ‌ன் அ‌தி‌ர்‌ச்‌சியையு‌ம் கூட ஏ‌ற்படு‌த்து‌ம்.

அதுபோ‌ன்று நமது உட‌ல் ப‌ற்‌றிய ‌சில தகவ‌ல்க‌ள் இ‌ங்கே...

* பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.

* ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

* மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

* மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

* ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்.

* நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது.

* நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது.

* நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

* மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

* உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

* ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

* கைரேகையை‌ப் போலவே நா‌க்‌கி‌ல் உ‌ள்ள வ‌ரிகளு‌ம் ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் வேறுபடு‌ம்.

* ம‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அ‌திக‌‌ம் உ‌ள்ள பகு‌தி நா‌க்கு.

* க‌ண் தான‌த்‌தி‌ல் கரு‌ப்பு ‌வி‌ழிக‌ள் ம‌ட்டுமே அடு‌த்தவரு‌க்கு பொரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.

* 900 பெ‌‌ன்சில்களை தயாரிக்கும் அளவிற்கு ம‌னித உட‌லி‌ல் கார்பன் சத்து இருக்கிறது.

* மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.


*உலகத்தில் மிகநீளமான புத்தகம்


மிங் (Ming) அரச பரம்பரை காலத்தில் சுமார் 1403ம் காலப்பகுதியில் 3000 கல்விமான்கள் ஒன்றிணைந்து 4 ஆண்டுகள் செலவு செய்து சீன மொழியில் எழுதி முடிக்கப்பட்ட Yongle Dadian அல்லது Yung-lo ta-tien என்ற கலைக்களஞ்சியம் தான் உலகிலேயே மிக நீண்ட புத்தகமாகும். இப்புத்தகம் சுமார் 11,095 பகுதிகளையும், 22,877 அத்தியாயங்களையும் கொண்டுள்ள இக்கலைகளஞ்சியம்


*


உலகில் கரை இல்லாத கடற்கரை!


கரையே இல்லாத கடற்கரையா?…. ஆமாங்க…. சர்காசோ கடல்தான் இந்த சிறப்புக்குக்குரிய கடலாகும். சர்காசோ கடலானது வட அத்திலாண்டிக் சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள பிராந்தியமாகும். இந்தக் கடலானது சமுத்திர நீரோட்டங்களினால் சூழப்பட்டு, கரையினைக் கொண்டிராத ஒரே கடலாக விளங்குகின்றது.இதன் எல்லைகளாக மேற்கே வளைகுடா சூடான சமுத்திர நீரோட்டமும் , வடக்கே வட அத்திலாண்டிக் சமுத்திர நீரோட்டமும், கனேரி சமுத்திர நீரோட்டமும், தெற்கே வட அத்திலாண்டிக் பூமத்தியரேகை சமுத்திர நீரோட்டமும் விளங்குகின்றன.சர்காசோ கடலானது, அத்திலாண்டிக்கில் ஒரு பாகமாக 20o – 35o வட அகலாங்கிலும், 30o – 70o மேற்கு நெட்டாங்குக்கும் இடையே விசாலமாக பரந்து காணப்படுகின்றது. இந்தக் கடலின் மேற்கு எல்லைக்கு அண்மையில் பெர்முடா முக்கோணப் பிராந்தியம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சர்காசோ கடலானது 700 கடல்மைல்கள்(1100கி.மீ) அகலமானதுடன், 2000 கடல்மைல்கள்(3200கி.மீ) நீளமானதுமாகும்.15ம் நூற்றாண்டளவில் போர்த்துக்கேய கடற்படையினரால் முதன்முதலில் இந்த பிராந்தியம் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாரியளவில் சர்காசோம் கடல் தாவரங்கள் மிதந்தவண்ணம் காணப்படுகின்றமை இந்தக் கடலின் சிறப்பம்சமாகும்.
தென் அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து இனவிருத்திக்காகவும், முட்டை இடுவதற்காகவும் சர்காசோ கடலினை நோக்கி ஈல்கள் நீந்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். பின்னர் இந்த ஈல்கள் தமது நீண்ட தூர கடற்பயணத்தினை தமது பழைய வாழிடங்களான தென் அமெரிக்கா, ஐரோப்பாவினை நோக்கி சென்றுவிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.பெர்முடா முக்கோணப் பிராந்தியத்தினைப்போல சர்காசோ கடலிலும் பல படகுகள் காணாமல்போனதாக வரலாற்றுச் சம்பவங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


*
முத்து உருவாகுவது எப்படி???


இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து. எங்கோ கடலடியில் விளையும் முத்து, அழகுப்பெண்களின் கழுத்தை அலங்கரிக்கிறது. முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு?முத்துச்சிப்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக்கிறது. அந்த உயிரினத்தில் இருந்து முத்து கிடைப்பது வியப்பூட்டும் விஷயம்.கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்று வதாகத் தெரிவிக்கப்படுகிறது.சிப்பியினுள் முத்து சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு, தன்னிடம் உள்ள நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை அதன் மீது சுரந்து மூடிவிடும். அதைத் தெரிந்துகொண்ட சீனர் கள், சிப்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள், ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப் புகுத்தினார்கள்.
சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து பார்க்கும்போது, முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும். ஜப்பானியர்கள், சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே தள்ளிவிடுவார்கள்.
அவ்வாறு தள்ளப்பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம் படிந்து, நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு, நல்ல விலைக்கு விற்பனையாகிறது. இனி, உயர்ந்த முத்துகள் எப்படி உருவாகின்றன என்று பார்க்கலாம்.
கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப்பொருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப்பவை), சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன.அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது.இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகிவிடுகிறது. ஆனால் முந்தைய முறையில் உற்பத்தியாகும் முத்துதான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்.


*

உலகின் மிக ஆபத்தான பறவை!!!


உலகின் மிக ஆபத்தான பறவையாக நெருப்புக்கோழி கணிக்கப்பட்டுள்ளதுடன், கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தின் 2007 ஆண்டுப்பதிப்பிலும் “உலகின் மிக ஆபத்தான பறவை” யாக இடம் பிடித்துள்ளது.விசேடமாக தான் காயப்பட்டாலோ அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்தாலோ பலமாக எதிரில் உள்ளவர்களை தாக்கும் ஒரு அதிசய படைப்பாகும். இதன் தாக்குதலானது எலும்புகள் முறியுமளவிற்கு பலமானதாகவும் இருக்கும்.இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் நியூகினியில் முகாமிட்டிருந்த படை வீரர்களுக்கு இந்த பறவை பற்றிய எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தமையானது இதனது தாக்குதலின் பாரதூரத்தை தெளிவாக்குகிறது.இந்த நெருப்புக்கோழிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியின் மழைக்காடுகளில் பெரும்பாலும் வாழுகின்றன. உண்மையில் பார்ப்பதற்கு மிக அழகான இவைகள் பயங்கர ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடியதுமாகும்.மிருகக்காட்சி சாலைகளில் வைத்து பராமரிக்க மிகக் கடினமான ஒரு உயிரினமாக இவை உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


*


உலகின் மிகச் சிறிய படையணி!!


உலகின் மிகச் சிறிய படையணியாக Swiss Guard திகழ்கிறது. இப்படையணி உலகின் மிகச் சிறிய நகரான வத்திக்கானில் பாப்பரசரின் பாதுகாப்புக்காக இயங்குவதுடன், ஜனவரி 22, 1506 ல் உருவாக்கப்பட்ட இப்படையணி, கடந்த 2006 ல் தனது 500 வது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.110 அங்கத்தவர்களை மட்டுமே கொண்ட இப்படையணிக்கு 5 அடி 9 அங்குலம் உயரமுடைய கத்தோலிக்க மதப்பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


*


எரிமலைகளாலும் நன்மை உண்டு உங்களுக்கு தெரியுமா??

எரிமலை சீறும்போது எரிமலைக் குழம்போடு கந்தக ஆவி வெளிவருகிறது. அந்தக் கந்தக ஆவியானது, அனல் போன்ற பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகும்போது கட்டியாக மாறி, எரிமலைப் பள்ளங்களில் படிந்து விடுகிறது.இம்மாதிரியான எரிமலைப் படிவுகள் உள்ள எரிமலைப் பகுதிகள் தென் அமெரிக்கா, நிïசிலாந்து, ஜப்பான், மெக்சிகோ, சிசிலி முதலிய இடங்களில் காணப்படுகின்றன.அப்பகுதிகளில் 500 முதல் ஆயிரம் அடிக்கு சுரங்கம் தோண்டி கந்தகம் வெட்டி எடுக்கிறார்கள். அவ்வாறு கிடைக்கும் கந்தகத்தைத்தான் தீக்குச்சிகள் செய்வதற்கும், துப்பாக்கி மருந்து தயாரிப்பதற்கும், ரப்பர் பதனிடுவதற்கும், நமது நோய் தீர்க்கும் சல்பா மருந்து தயாரிக்கவும், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவை தயாரிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள்.அனல் குழம்பு குளிரும்போது மேலிருந்து கீழே பாறையாக இறுகிக்கொண்டே போவதால் தங்கம், வெள்ளி, ஈயம், துத்தநாகம், பாதரசம் போன்ற பல உருகிய உலோகப் பொருட்களும் கட்டியாக மாறிப் பாறைகளோடு கலந்து விடுகின்றன.அவ்வாறு பூமிக்குக் கீழே சில அடி ஆழத்துக்குள்ளாகவே உலோகக் குழம்புகள் பாறைக் குழம்போடு வந்து படிவதால்தான் சுரங்கங்கள் மூலம் அவை நமக்கு எளிதில் கிட்டுகின்றன.

*


நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் எறும்புகள்: ஆய்வறிக்கை!

பல ஆயிரம் உயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தும் நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறியும் திறன் மிகச் சிறிய எறும்புகளுக்கு உள்ளது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். செம்மர எறும்புகள் நிலநடுக்கத்தை முன் கூட்டியே அறிவதாக துய்ஸ்பர்க் சென் பல்கலைகழக புவியியல் நிபுணர் உல்ரிச் ஸ்கர்பர் தெரிவித்துள்ளார்.உல்ரிச்சும் அவரது ஆய்வுக் குழுவினரும் மேற்கு ஜேர்மனியின் எபல் பிராந்தியத்தில் 2 ஆண்டுகளாக எறும்பு மலைப்பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.அருகாமையில் ஏற்படும் சிறு நிலநடுக்கத்தின் போது இந்த எறும்புகள் விநோதமாக நடந்து கொள்வதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். உல்ரிச் ஸ்கர்பர் 2 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய இத்தாலியில் உள்ள அப்ருசோ பகுதிக்கு சென்றிருந்தார். எல் அகுய்லா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் உல்ரிச் அந்தப் பகுதிக்கு சென்றார். அப்போது புவியியல் கோட்டு பகுதியில் எறும்புக் கூடுகள் இருப்பதை கண்டார்.
ஆய்வாளர் உல்ரிச் இஸ்தான்புல் பகுதிக்கு சென்று இந்த ஆய்வை தொடரத் திட்டமிட்டுள்ளார். மிக விரைவில் அங்கு நிலநடுக்கம் ஏற்படும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள். தமது ஆய்வு துவக்க நிலையிலேயே இருப்பதாக கூறும் உல்ரிச் வருங்காலத்தில் மனித உயிர்களை காக்கும் வகையில் நிலநடுக்கத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் சிற்றினமாக எறும்புகள் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.


*


வாழைப்பழத்தோலின் மகிமைகுடிநீரை சுத்தப்படுத்த இனி வாழைப்பழ தோல் போதுமாம். குடிநீரில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரை விட வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.பிரேசில் நாட்டைச் சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆப் பயோசின்சியாஸ் நிறுவனத்தின் குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான குழுவினர் குடிநீரை சுத்தப்படுத்துவது குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.இன்று குடிநீராக பயன்படும் தண்ணீரில் காரீயம், செம்பு உள்ளிட்ட உலோகம் மற்றும் ரசாயன பொருட்களால் மாசடைந்து காணப்படுகின்றது.இத்தகைய நச்சுப் பொருட்கள் உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.அவற்றை நீக்குவதற்கு பியூரிபையர் உட்பட பல்வேறு ரசாயன முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஆனால் அவற்றுக்கு செலவு அதிகமாவதுடன் நச்சுத் தன்மை உள்ளதாகவும் இருக்கின்றன.இந்நிலையில் தேங்காய் நார் மற்றும் கடலை தோல் உள்ளிட்ட இயற்கையான பொருட்களைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்றும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் தோல் ஷூக்களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழ தோலைக் கொண்டும் தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்று இவர்கள் கண்டறிந்துள்ளனர்.அதாவது தண்ணீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால் போதும் அதில் உள்ள உலோக நச்சுப் பொருட்களை உடனடியாக தன்னகத்தே உறிஞ்சிக் கொள்ளும். எவ்வித ரசாயனப் பொருளையும் சேர்க்கத் தேவையில்லை.தண்ணீரை சுத்தப்படுத்துவதில் மற்ற முறைகளை விட இம்முறை சிறப்பானதாகவும் செலவு குறைவாகவும் உள்ளது. வாழைப்பழ தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்..


*சீன பெருஞ்சுவர் மரத்தால் கட்டப்பட்டது:

உலக அதிசயங்கள் என்று புதிது புதிதாக பட்டியல்கள் அவ்வப்போது வருகின்றன. ஆனாலும் என்றென்றும் உலக அதிசயமாக கருதப்படுவது சீன பெருஞ்சுவர்.நிலவில் இருந்து பார்த்தால் தெரிகிற ஒரே மனித படைப்பு என்ற பெருமை இதற்கு உண்டு. நாட்டின் பாதுகாப்புக்காக பிரமாண்ட மதில் சுவர் எழுப்புவது என்பது சீனாவின் முதல் பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் ஐடியா. அவரது ஆட்சிக் காலத்தில் (கி.மு. 220-206) கட்டப்பட்டது. இதன் சில பகுதிகள் மட்டுமே தற்போது சுவராக நீடிக்கிறது.அதன் பிறகு கி.மு. 5ம் நூற்றாண்டு முதல் கி.பி. 16ம் நூற்றாண்டு வரையில் பல்வேறு மன்னர்களின் காலக் கட்டத்தில் கட்டப்பட்டது.இடியும் பகுதிகளும் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வந்தது. இவ்வாறு கிழக்கே ஹெபேய் மாகாணம் ஷாங்ஹாய்குவானில் தொடங்கி மேற்கில் லோப்நுர் வரையில் பிரதான சுவர், கிளைச் சுவர் என சுமார் 8,850 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்டமாய் நீள்கிறது இந்த உலக அதிசய பெருஞ்சுவர்.மொத்த சுவரும் கற்கள், பாறைகளைக் கொண்டே அமைக்கப்பட்டதாக கருதப்பட்டு வந்தது. ஓக் மரத்தையும் கல் போல பயன்படுத்தி சுவர் கட்டியிருப்பது தொல்பொருள் ஆய்வில் தெரியவந்துள்ளது.இதுபற்றி லயோனிங் கலாசார நினைவுச் சின்னங்கள் அமைப்பு மற்றும் மேப்பிங் துறை அதிகாரிகள் கூறியதாவது: மரப் பெருஞ்சுவர் பற்றி சீன வரலாறுகளில் கூறப்பட்டுள்ளன. அது உண்மைதான் என தற்போது தெரியவந்துள்ளது. சீனாவின் வடகிழக்கில் லயோனிங் மாகாணத்தில் டாண்டோங் மற்றும் அதை ஒட்டியுள்ள இடங்களில் ஓக் மரத்தை பயன்படுத்தி மிங் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1368 – 1644) பெருஞ்சுவர் கட்டப்பட்டது. பின்னர் மரம் மக்கிப்போன பிறகு, அந்த இடங்களில் கற்களைக் கொண்டு சுவர் சீரமைக்கப்பட்டிருக்கிறது.


*சங்குகள் பற்றி தொடரும் ஆராய்ச்சிகள்


மின்னணுத் துறையிலும், மருத்துவத் துறையிலும் புதிய பொருட்களை வடிவமைக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் நிபுணர்கள் சிலர், கடற்கரைகளில் போய் சோழிகளையும், சங்குகளையும் தேடி எடுத்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.கரிம வேதிப்பொருட்கள் சேர்ந்து எவ்வாறு வியப்பூட்டும் வடிவங்களில் சங்குகளையும், சோழிகளையும் உருவாக்குகின்றன என்ற ரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டால், தொழில்துறைக்குத் தேவையான பல படிவங்களை உருவாக்குவதற்கான புதிய முறைகள் தெரியவரலாம் என்பது அந்த நிபுணர்களின் எண்ணம்.
உயிரிகள், வேதிவினை புரியாத ஜடப்பொருள்களை ஓடுகளாகவும், எலும்புகளாகவும், வேறு பல உறுப்புகளாகவும் மாற்றிக்கொள்கின்றன. இந்தச் செயல்முறைக்கு உயிரி கனிமமாக்கம் என்று பெயர். உயிரிகளில் குறைந்தது 40 கனிமங்களாவது திசுக்களில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன.சுண்ணாம்புக் கற்களிலும், சுண்ணாம்புப் பாறைகளிலும் உள்ள கால்சியம் கார்பனேட்டை பல்வேறு உயிரிகள் உட்கவர்ந்து கொள்கின்றன. அது மெல்லுடலிகளில் கூடுகளையும், நுண் ஆல்கைகளில் செல்களையும் உருவாக்க உதவுகிறது. தாவரங்களில் கால்சியம் கார்பனேட்டுகளாக சேமித்து வைக்கப்படுகிறது.முதுகெலும்பிகளின் எலும்புகள் கால்சியம் பாஸ்பேட்டால் ஆனவை. ஆல்கைகள், சில கூழ்பஞ்சுகள் ஆகியவற்றின் கட்டமைப்புகள் சிலிக்கானால் ஆனவை. இரும்பு, பேரியம், ஸ்டிரான்சியம் ஆகியவை உயிரிகளின் உடம்பில் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.பிரிட்டனின் பாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீபன் மான், இம்பீரியல் வேதித் தொழிலகத்தின் டெரக் பிர்ச்சால் ஆகியோர், புரதங்களைப் போன்ற உயிரி மூலக்கூறுகள், உயிரி கனிமமாதலை ஒழுங்குபடுத்தி, எலும்புகளும், உடல்கூடுகளும் சரியான முறையில் உருவாக வைப்பதை ஆராய்ந்து வருகிறார்கள். ஒரு கனிமத்தின் அணுக்கள், ஒரு குறிப்பிட்ட உருவத்தில் மட்டும் கூடி இணையுமாறு உயிரிகள் எவ்வாறு ஒழுங்குபடுத்துகின்றன என்பதை மான் குழுவினர் கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர்.அதற்கான விடை கிடைக்கும்போது தொழில்துறையில் ஒரு புரட்சிக்கு வித்திடுவதாக அமையும் என்பது அவர்களின் நம்பிக்கை.


*


சிலந்திகள் காதலில் வீழ்வது எப்படி? !

பூச்சி இனத்தை சேர்ந்த சிலந்தியின் இனப்பெருக்கம் சற்று வித்தியாசமானது. இவற்றுள் பருவத்திற்கு வந்த ஆண் சிலந்திகள் பெண் சிலந்தியை தேடி செல்கின்றன. அதனை கண்டவுடன் இனப்பெருக்கம் நடைபெற்று விடுவதில்லை.முதலில் பெண் சிலந்தியின் வலையை ஆண் சிலந்தி தனது காலால் மெல்ல தட்டுகிறது. அதற்கேற்ப பெண் சிலந்தியிடம் இருந்து பதில் வந்தவுடன் ஆண் சிலந்தி இனப்பெருக்கத்திற்கு உரிய சில அங்க அசைவு களை செய்கிறது. அதில் ஈர்க்கப்படும் பெண் சிலந்தியுடன் ஆண் சிலந்தி ஒன்றாய் கூடுகிறது.
எனினும் சில சமயங்களில் இனப்பெருக்கம் முடிந்தவுடன் பெண் சிலந்தி ஆண் சிலந்தியை கொன்று விடுகிறது. இந்த நிலை நீடித்தால் அந்த சிலந்தியின் இனமே பிற்காலத்தில் இல்லாத வாய்ப்பு ஏற்பட்டு விடும்.இதை தவிர்த்து அவை எவ்வாறு வாழ்கின்றன என கலிபோர்னிய பல்கலைகழகத்தை சேர்ந்த ஜோனாதன் ப்ரூட் மற்றும் அவரது சகாக்கள் ஆய்வில் ஈடுபட்டனர். அதற்காக ஆய்வகத்தில் இனப்பெருக்கத்திற்கு தயாரான நிலையிலுள்ள சில இளம் சிலந்திகளை ஜோடியாக விட்டனர். சிலஇளஞ்சிலந்திகளை தனியாக வைத்திருந்தனர்.இனப்பெருக்கத்திற்கு உரிய பருவத்தில் சிலந்திகளில் ஒரு ஜோடி மிக வேகமாக தங்களுக்குள் ஒன்றாக கூடின. இந்த வேகம் தங்களது சரியான ஜோடியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல.அவ்வாறு இல்லாவிட்டால் வேறு சிலந்தியால் குறுக்கிடப்பட வாய்ப்பு உள்ளது. அதை தவிர்ப்பதற்காக தான். மேலும் அதி விரைவாக செயல்படுவதால் அது ஜோடிகளுக்கு பாதுகாப்பினை தருகிறது.இந்த கூடுதலில் பெண் சிலந்திக்கு ஏதேனும் நன்மை ஏற்படுகிறதா-? என ஆராய்ந்ததில்


ஆம் என்பதே பதிலாக இருந்தது. ஜோடிகள் ஒன்றாக கூடும் இந்த நிகழ்வில் ஆண் சிலந்தி சாதனை செய்த பெரியவராகி விடுகிறது. மேலும் வேறு சிலந்தியினால் தொல்லை ஏற்படுவதில் இருந்து விடுபட்டு போதுமான பாதுகாப்பும் ஏற்பட ஏதுவாகிறது என ஆய்வாளர் ப்ரூட் தெரிவித்தார்***
thanks பு.உ
***
"வாழ்க வளமுடன்"

4 comments:

யாதவன் சொன்னது…

அனைத்து தகவல்களும் அருமையானவை
பிரயோசனமானவை உங்கள் தெரிவு திறனுக்கு வாழ்த்துக்கள்
பந்திகள் இடையே இடைவெளி அதிகரித்து விட்டது இடைக்கிடை படங்கள் சேர்த்திருக்கலாம்
படைப்பு சின்னதாக இருந்தால் வாசித்து மனதில் பதிக்க இலகுவாய் இருக்கும்
இதையே நீங்கள் மூன்று பதிவுகளாக போட்டிருக்கலாம்

prabhadamu சொன்னது…

/// யாதவன் கூறியது...
அனைத்து தகவல்களும் அருமையானவை
பிரயோசனமானவை உங்கள் தெரிவு திறனுக்கு வாழ்த்துக்கள்
பந்திகள் இடையே இடைவெளி அதிகரித்து விட்டது இடைக்கிடை படங்கள் சேர்த்திருக்கலாம்
படைப்பு சின்னதாக இருந்தால் வாசித்து மனதில் பதிக்க இலகுவாய் இருக்கும்
இதையே நீங்கள் மூன்று பதிவுகளாக போட்டிருக்கலாம்
////


நன்றி யாதவன்.

நீங்கள் சொல்லுவதை எற்க்கிறேன் .....

கட்டாயம் படங்களுடன் இணைக்கிறேன் .....

உங்கள் வருகைக்கும் , பாராட்டுக்கும் மிக்க நன்றி .....

:)

Baskar K சொன்னது…

அனைத்து தகவல்களும் அருமையானவை

Baskar K சொன்னது…

அனைத்து தகவல்களும் அருமையானவை

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "