...

"வாழ்க வளமுடன்"

23 மே, 2011

அறியா விஷயம் அறிந்துக் கொள்வோம் !!!!‏

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஓய்வெடுக்காமல் தொடர்ந்து 11 ஆயிரம் கி.மீ.பறக்கும் பறவை!
உண்ணாமல், உறங்காமல், ஓய்வெடுக்காமல் தொடர்ந்து 11 ஆயிரம் கி.மீ.பறக்கும் ‘காட்விட்’ (God-wit)என்ற பறவை, உயிரியல் வல்லுனர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.அலாஸ்காவின் தெற்கு கடற்கரை பகுதியில், கடந்த 1976ம் ஆண்டு ராபர்ட் இ கில் என்ற உயிரியல் வல்லுனர், பறவைகள் இடம் பெயரும் விதம் குறித்து ஆய்வு மேற்கொண்டிருந்தார்.அப்போது, “காட்விட்’ என்ற பறவையினத்தை அவர் கூர்ந்து கவனித்தபோது, அதன் நடவடிக்கைகள் பெரும் வியப்பில் ஆழ்த்தின.நீண்ட பயணத்தின் மூலம் இடம் பெயர்ந்த அப்பறவை, பயணக் களைப்பினால் உற்சாகம் இழக்காமலும், பருத்தும் காணப்பட்டது. எனவே, ராபர்ட் அந்த பறவையின் இடம் பெயரும் தன்மை குறித்து தொடர்ந்து ஆராயத் துவங்கினார்.இந்தப் பறவைகள் குளிர்காலத்தில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு வருகின்றன. இப்பகுதிகளுக்கு வர, கடல் மற்றும் நிலத்தைத் தாண்டி நீண்ட பயணம் மேற்கொள்கின்றன. இந்த பயணக் காலத்தில் அவை உணவு உட்கொள்வதில்லை ஓய்வு எடுப்பதில்லை. ஆனால், உடல் எடை மட்டும் அதிகரிக்கிறது.

பறவை ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன், ராபர்ட், “காட்விட்ச்’ பறவையின் உடலில் “சேட்டிலைட் டிரான்ஸ் மிட்டர்’களை அமைத்தார். அந்த “டிரான்ஸ் மிட்டர்’ ராபர்ட் டின் கம்ப்யூட்டருக்கு, பறவை பறக்கும் திசையிலிருந்து சிக்னல்களைக் கொடுத்தபடி இருந் தது. அந்த பறவை பறக்கத் துவங்கியது. அப்பறவை ஒன்பது நாட்களில் 11 ஆயிரம் கி.மீ. பறந்தது. “இந்த பறவைகளின் நீண்ட தூர பயணம் மிகப்பெரிய சாதனை, இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை.


***


மைக்ரோவேவ் ஓவன்’ பிறந்த வரலாறு..!!

இன்று நம்மூர் சமையலறைகளில் `மைக்ரோவேவ் ஓவன்’கள் இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. மைக்ரோவேவ் ஓவன் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்று தெரியுமா?இரண்டாம் உலகப் போரின்போது நடந்தது அது. விமானங்களையும், கப்பல்களையும் கண்டறிய உதவும் ரேடார்களில் `மேக்னட்ரான்’ என்ற பொருள் பயன்படுத்தப்படும். அதன் அருகில் கைகளைக் கொண்டு சென்றால் குளிருக்கு இதமாக, வெதுவெதுப்பாக இருக்கும்.பெர்சி ஸ்பென்சர் என்ற அமெரிக்கர் அப்படி அடிக்கடி குளிர் காய்வார். ஒரு பெரிய பல்பில் இருந்துவரும் வெப்பம் அந்த `மேக்னட்ரானில்’ இருந்து வரும். ஒருநாள் ஸ்பென்சர் குளிர்காய்ந்து கொண்டிருந்தபோது அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்த மிட்டாய் உருகிவிட்டது.அப்போதுதான் அவருக்கு, `இதைச் சமையல் உபகரணமாகப் பயன்படுத்தலாமே!’ என்று தோன்றியது. உடனே `மைக்ரோவேவ் ஓவன்’ பிறந்தது.ஸ்பென்சரும், அவரது உதவியாளர்களும் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர். பாப்கார்ன், பன்றி இறைச்சி போன்றவற்றைக் கொண்டு பரிசோதித்தார்கள். ஓவனுக்குள் வைக்கப்பட்ட அவை, நன்றாகச் சமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து, வர்த்தகரீதியாக மைக்ரோவேவ் ஓவன்கள் தயாரிக்கத் தொடங்கப்பட்டது.1953-ம் ஆண்டில் உரிமம் பதிவு செய்யப்பட்டு, ஏழே ஆண்டுகளில் உலகின் வசதிமிக்க சமையலறைகளில் நுழைந்துவிட்டது `மைக்ரோவேவ் ஓவன்’. பெர்சி ஸ்பென்சரின் கவனிக்கும் திறனும், ஆர்வமும் ஒரு கண்டுபிடிப்பாக மலர்ந்து, இன்று பலரது சமையல் வேலையை எளிதாக்கி இருக்கிறது.***


சைக்கிள் பிறந்த விதம் உங்களுக்கு தெரியுமா??

700-களின் பிற்பகுதியில், கைப்பிடி இல்லாத `ஹேப்பி ஹார்சஸ்’ என்ற வண்டியை வேடிக்கைக்காகப் பயன்படுத்தினார்கள். காலால் தரையை உந்தித் தள்ளி அதை நகர்த்த வேண்டும். வண்டி ஓட்டுபவருக்குக் கஷ்டமாகவும், பார்ப்பவருக்கு ஜாலியாகவும் இருக்கும். 1817-ல் டிரய்சினா என்ற கைப்பிடி இல்லாத `ஹேப்பி ஹார்சஸ்’ வண்டி உருவானது.1839-ல், கிராங் மூலம் பின்சக்கரத்துடன் பெடல்கள் இணைக்கப்பட்ட சைக்கிளை கிர்க் பேட்ரிக் மெக்மில் லன் உருவாக்கினார். இவ்வாறு ஆரம்பகட்ட சைக்கிள் பிறந்தது. 1861-ல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எர்னெஸ்ட் மிக்காவ்ஸ், இன்னும் சுலப மாகப் பயன்படுத்தப்படுக்கூடிய சைக்கிளாக அதை மேம்படுத்தினார். அதன் பெடல்கள் முன்சக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்தன.காலப் போக்கில் முன்சக்கரம் பெரிதாக மாறி, `பென்னி பார்த்திங்’ என்று அழைக்கப்பட்டது.1885-ம் ஆண்டில்தான் இன்றைய சைக்கிள் அறிமுகமானது. ஜான் ஸ்டேர்லி என்பவர் தயாரித்த `ரோவர் சேப்டி’ சைக்கிள்தான் அது. 1888-ம் ஆண்டில் பிரிட்டன் சாலைகளில் சைக்கிள்கள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் ஓட்டுபவர், தொடர்ந்து மணி அடித்துக்கொண்டே செல்ல வேண்டும்!


***


முத்தை உண்ணும் ஒரே உயிரினம்!

உலகில் அன்னப்பறவை பற்றி அறியாதவர்களே இல்லை எனலாம். அந்தளவுக்கு பழங்கால புராணக்கதைகள் தொடக்கம் சிறுவர்களின் நீதிக்கதைகள் என எல்லாவற்றிலும் அன்னப்பறவை பற்றி அறிந்திருப்பீர்கள்.பொதுவாக சொல்லுவர்கள் நாம் சிறந்த மனிதர்களாக வரவேண்டுமெனில் அன்னப்பறவை போல வாழ பழகவேண்டும் என.அதற்கு காரணம் அன்னமானது பாலையும் தண்ணீரையும் கலந்து வைக்கின்ற போது அது இரண்டையும் வெவ்வேறாக பிரிந்து பாலை மட்டும் பருகுமாம். அதைப்போல நாம் சமுதாயத்தில் தீயவற்றை ஒதுக்கிவிட்டு நல்லவற்றையே செய்யவேண்டும் என சொல்வதுண்டு.சரி அது சிறுவர்கள் முதல் பெரியோர் வரை தெரிந்த விடயம். ஆனால் உயிரினங்களிலே அன்னத்துக்கு என தனிச்சிறப்பும் உண்டு ஆம் நவரத்தினங்களில் ஒன்றான முத்தை உண்ணும் ஒரே உயிரினம் அன்னம் மட்டும்தானாம்.***
thanks puthiyaulakam
***


"வாழ்க வளமுடன்"


இந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "