...

"வாழ்க வளமுடன்"

23 மே, 2011

“வானத்து சுனாமி ” பற்றிய சுவாரஸ்ய தகவல்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

வேகமாக சுழலும் காற்றையே சூறாவளி என்கின்றோம். இது கட்டுக்கடங்காத வேகத்தில் சுழன்றபடி மேகங்களை தொட்டுக் கொண்டு நிலப்பரப்பை சூறையாடி பயிர்களையும், வீடுகளையும் நாசம் செய்துவிடும் ஆற்றல் கொண்டவைகளாகும். சூறாவளி என்பது ஒரு புனல் வடிவத்தில் காணப்படும். பயங்கரமான சூறாவளியின் மேற்பகுதி மேகத்தைத் தொட்டு கிணறு போன்று அகன்று காணப்படும்.


மேலும் இதன் வால் பகுதி கூர்மையான வாள் போன்று வளைந்து காணப்படும். இவற்றிற்கு ஆங்கிலத்தில் டொர்னடோ என்று பெயர்.

சூறாவளி குறைந்த பட்ச வேகமாக மணிக்கு 40 மைல்கள் என்ற வேகத்தில் சுழன்றடிக்கும் (அதாவது 64கி.மீ வேகம்) அதிக பட்சமாக மணிக்கு 110 மைல்கள் என்ற வேகத்தில் சுழன்றடிக்கும் (அதாவது மணிக்கு 177கி.மீ வேகம்) இந்த வேகம் சுமார் 250 அடி (75மீட்டர் நிலப்பரப்பை ஒரு வினாடியில் தாக்கும் வல்லமை படைத்தது.


சூறாவளிகள் சுழல ஆரம்பிக்கும் எதிர்பாராத விதமாக காற்றின் வேகம் 300 மைல்களாக இருந்தால் இந்த சூறாவளிகள் குறைந்தபட்சம் 1 மைல் (அதாவது 1.6கி.மீ) பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை ஒரு வினாடியில் துவம்சம் செய்து அப்படியே மெல்ல நகர்ந்து பல மைல்கள் நகர ஆரம்பிக்கும்.

இவைகள் வானத்தின் சுனாமி என்று கூட கூறலாம். ஒரு குறிப்பிட்ட திசையிலிருந்து வீசக்கூடிய குளிர்ந்த காற்று மற்றும் வறண்ட காற்றும் அதன் எதிர்த்திசையிலிருந்து வீசக்கூடிய சூடான காற்று மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான காற்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது அதிலிருந்து வெளிப்படும் விசையே சூறாவளி எனப்படுகிறது.


இந்த மோதல்கள் அதிகமான அளவு நடைபெறும்போது சூறாவளிக்கு பலம் கூடுகிறது. இதற்கு பெயர்தான் டொர்னடோ எனப்படுகிறது.

வானத்தில் ஒரு பயங்கரமான சூறாவளி உருவாகிவிட்டால் அந்த சூறாவளி நிலத்தை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 12-13 நிமிடங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 13ம் வினாடியிலிருந்து இந்த சூறாவளி நிலத்தைப் பதம் பார்த்து அக்குவேறு ஆணிவேராகப் பிடிங்கி அதை தனக்குள் வசப்படுத்திக்கொண்டு அதேவேகத்தில் நகர ஆரம்பிக்குமாம்.

*

சூறாவளி மேகங்களுடன்

இந்த வகை சூறாவளி மேகங்களை கருவாகக் கொண்டு சுழன்றடிக்கும். ஒரு பக்கம் மேகங்கள் மழைச்சாரல்களை வீசிக்கொண்டும் மற்றொரு பக்கம் சூறைக்காற்றை சுழன்றபடியும் வீசி பல கிலோமீட்டர்களை நாசம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கும். இந்த வகை சூறாவளிகள் நிலத்தைத் தொட்டுவிட்டால் அதன் வேகம் 200 கி.மீ.க்கும் குறைவாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

*

லேன்ட் ஸ்பவ்ட்

நிலத்தில் உள்ள மணல் மேடுகளை பதம்பார்த்து மணலை வீசியவண்ணம் சுழன்றடிக்கும் இந்த கொடிய சூறாவளிக்கு லேன்ட் ஸ்பவ்ட் என்று பெயர். இது முதலில் கண்ட சூறாவளிகளுக்கு அடுத்தபடியாபக வேகமாக வீசக்கூடிய சூறாவளியாகும். இவைகள் கனத்த மேகங்களை இழுத்துக்கொண்டு சுழலாமல் பலவீனமான மேகங்களைக் கொண்டு காற்றை சுழன்றடிக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது.

*

கஸ்டனாடோ சூறாவளி

இந்த கஸ்டனாடோ என்றழைக்கப்படும் சூறாவளி பலவீனமானதாகும். இவைகள் சற்று வேகம் குறைந்ததாகவும் விரைவில் நின்றுவிடக் கூடியதாகவும் காணப்படும். இந்த சூறைக்காற்றினால் தூசுப்படலம் சற்று அதிகமாக காணப்படும். இந்த வகை சூறாவளிகளுக்கு மேகங்களுடன் நெருங்கிய தொடர்பிருக்காது மாறாக காற்றின் வேகம்தான் இவைகளையும் உருவாக்குகிறது.

*

நீரில் ஏற்படும் சூர்ராவளி

வாட்டர் ஸ்பவட் எனப்படும் இந்த சூறாவளிகள் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய சூறாவளிகளாகும். இவைகள் நிலத்தில் வீசக்கூடிய எனப்படும் அதிபயங்கர சூறாவளிகளின் வடிவமேயாகும். ஆனால் இவைகள் நீரில் சுழன்றடிப்பதால் இதனால் ஏற்படும் பாதிப்புகள் மனிதனுக்கு மிகக் குறைவுதான். இந்த சூறாவளிகள் நிலத்தைத் தொடுவதற்குள் அதன் சக்தியை இழந்து விடுகின்றன.

*

தூசுகளின் சாத்தான்

டஸ்ட் டெவில் அதாவது தூசுகளின் சாத்தான் என்ற சூறாவளி அதிகமாக பாலைவனங்களில் வீசுவதுதான் வழக்கம். இவைகள் உச்சி வெயில் மற்றும் மதிய நேரங்களில் அதிகமாக வீசுகின்றன. இவைகள் மணிக்கு 70 மைல்கள் வேகத்தில் சுழன்றடிக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. இவைகள் மிகவும் பலவீனமான சூறாவளிகளாகும். இவைகளுக்கு மேகங்களுடன் எந்தத் தொடர்பும் காணப்படாது.

*

நெருப்பு சூறாவளி


நெருப்பு சூறாவளிகள் அதாவது சூறாவளி சூழலும் போது அதன் உராய்வினால் காய்ந்த இலை தழைகள் கருகி உண்டாகிறது. இந்த நெருப்பு ஜுவாலைகளை சூறாவளி தன்னுள் இழுத்தபடியே பிற இடங்களுக்குப் பரவி நாசத்தை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளன. இவைகள் பெரும்பாலும் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் உள்ள பகுதிகளில் பேரிழப்பை ஏற்படுத்திவிடுகின்றன.இந்தநெருப்புச் சூறாவளிகள் 1923ம்ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவின் ஹிபுகுசோழ என்ற கிராமத்தில் சுமார் 38.000த்திற்கும் மேற்பட்ட மனிதர்களை வெறும் 15 நிமிட இடைவெளியில் நெருப்பினால் பொசுக்கி அழித்துள்ளது.


இவைகள் பெரும்பாலும் 10 முதல் 50 மீட்டர் அகல உயரமும் 10 அடி அகலம் கொண்டதாகவும் காணப்படும். இச்சூறாவளிகள் சுழன்றடிக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 160 கி.மீ என்ற வேகத்தில் காணப்படும். 49 அடி உயரமுள்ள மரத்தைக் கூட சில வினாடிகளில் அழித்துவிடும்.அண்மைக்காலங்களில் ஏற்பட்ட சூறாவளிகளில் பாரிய அழிவுகள் ஏற்பட்டது நினைவிருக்கும்


***
thanks பு.உ
***
"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "