...

"வாழ்க வளமுடன்"

07 டிசம்பர், 2010

சில மருத்துவ துளிகள் !

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

தினந்தோறும் உடற்பயிற்சி செய்தால் லோ பிரஷர் குறையும்

பெர்லின்:

தினந்தோறும் உடற்பயிற்சி செய்து வந்தால் லோ பிரஷர் குறையும் வாய்ப்புள்ளதாக ஜெர்மன் இருதய வல்லுநர் நார் பெர்ட் செம்டாக் தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் கூறுகையில் நீச்சல் ,சைக்கிளிங், ஜாக்கிங்போன்றவை உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் என்றும் கூறினார். மேலும் தினந்தோறும் குறைந்தபட்மாக 2 முதல் 3 லிட்டர் வரை குடிநீரை பருக வேண்டும்.


அவ்வாறு செய்வதால் புத்துணர்ச்சி கிடைக்க கூடும் எனவும் தெரிவித்தார். லோ பிரஷர் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதில்லை இருப்பினும் அவை உடல் வனப்பை பாழ்படுத்தி விடுகிறது.


பெரும்பாலும் இவை இளம்பெண்கள் மற்றும் பெண்களிடம் காணப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



***

குளிரால் மாரடைப்பு அபாயம் : ஆய்வில் தகவல்

லண்டன் :

குளிரான சூழலால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக லண்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


கிருஷ்ணன் பாஸ்கரன் மற்றும் அவரது சக பணியாளர்கள் ஆகியோர் நடத்திய ஆய்வில், சராசரிக்கும் குறைவான வெப்பநிலையில் வாழ்பவர்கள் மாரடைப்பு நோயால் பெரிதும் பாதிக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


லண்டனில் ஒரு டிகிரி செல்சியல் தட்வெப்பத்திற்கும் கீழ் குறைந்ததால் 200 பேர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.


வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுவதால், ரத்த அழுத்தத்திலும் மாற்றம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


2003 முதல் 2006ம் ஆண்டு வரை 84,010 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

***


தொடர் வெப்சைட்: இருதயத்துக்கு ஆபத்து

தொடர்ச்சியாக 23 மணிநேரம் இன்டர் நெட்டில் வெப்சைட் பார்ப்பவரா .. அப்படியானால் இருதயம் சம்மந்தமான நோய் வரும் என அமெரிக்க மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் டெய்லி மெயில் எனும் மருத்து இதழின் ஆசிரியர் டேவிட் டஸ்டன் கூறுகையில்...




நாம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டரில் பணி செய்வதன் காரணமாக நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்து இணையதளத்தில் முழ்கிவிடுவோம் அவ்வாறு நாள் ஒன்றுக்கு 23 மணிநேரமும் சைட் பார்ப்பவர்களுக்கு 65 சதவீத இருதய நோய் வருவதற்கான வாய்ப்பு உண்டு. இது சாதாரணமாக 11 மணிநேரம் சைட் பார்ப்பவர்களைவிட அதிகம் ஏற்படும் என ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.




சாதாரணமாக நாம் நடக்கும் போது, நிற்கும் போது கால்களில் தசைகளில் வேலை செய்கின்றன. இதன் மூலம் உடலில் நம் இதயத்தில் செல்லக்கூடிய ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு சீராக உள்ளது. ஆனால் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றும் போது தான் உடல் ஆக்கச்சிதைவு ஏற்பட்டு மன அழுத்தம் ஏற்படுகிறது.




இதனால் இருதயம் பலவீனமடைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இது போன்று ஒரே இடத்தில் அமர்ந்து டி.வி. பார்ப்பதும் அதற்கு காரணமாகும். ஆகவே சிறிது நேரம் எழுந்து நிற்பது தான் சிறந்தது எனவும் அறிவுறுத்துகின்றனர்.




பெண்களில் ஆறு மணிநேரத்திற்கு மேல் பணியாற்றினால் 37 சதவீதமும், ஆண்களுக்கு 18 சதவீதமும் அதிகரிக்கும் என அமெரிக்காவின் மயோ மருத்துவமனையின் மருத்து பேராசிரியர் ஜேம்ஸ் லேவின் தெரிவித்துள்ளார்.


***

நோய்களை தீர்க்கும் யோகா

யோகா என்றால் ஏதோ நமக்கெல்லாம் வராது. அதற்கெல்லாம் நேரம் ஏது என்று நினைப்பவர்களும், சொல்பவர்களும்தான் அதிகம். ஆனால் யோகா என்பது நம்மை விட்டு தனியாக இருக்கும் செயல் அல்ல.



நமக்காக, நமது ஆரோக்கியத்திற்காக அவசியம் செய்ய வேண்டிய ஒரு விஷயமாகும். எல்லா யோகாக்களையும் செய்யாவிட்டாலும், சூர்ய நமஸ்காரம் போன்ற முக்கியமான யோகாக்களையாவது தினமும் ஒரு சில நிமிடங்கள் செலவழித்து செய்வதால் நமது ஆரோக்கியத்திற்கு உத்திரவாதத்தை அளிக்க முடியும்.

நாம் உடலை கெடுத்துக் கொள்வதற்காக எத்தனையோ விஷயங்களைச் செய்கிறோம். காசு கொடுத்து சிகரெட் வாங்கி புகைப்பது, மது அருந்துவது, கண்ணைக் கெடுக்கும் அளவிற்கு தொலைக்காட்சி பார்ப்பது என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இப்படி உடலைக் கெடுத்துக் கொள்ள எத்தனையோ விஷயங்களைச் செய்யும் நாம், ஆரோக்கியமாக இருக்க ஏன் இந்த யோகாவைப் பின்பற்றக் கூடாது.
வினை விதைத்தவன் தானே வினையை அறுக்க வேண்டும். ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடிய செயல்களை செய்த நாம்தானே ஆரோக்கியத்திற்கு தேவையான யோகாவையும் செய்தாக வேண்டும்.

நாம் ஆரோக்கியமாக வாழவும், வந்த நோயை விரட்டவும் கூட யோகா பயன்படுகிறது. ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்சினை, கருப்பை பிரச்சினை, மூட்டு வலி, கழுத்து வலி என பல நோய்களுக்கும் யோகாவின் மூலமாக தீர்வு காணலாம்.

யோகாவைச் செய்ய வயது வித்தியாசமோ, உடல் எடையோ, பாலினமோ எந்த தடையும் இல்லை. எந்த வயதினரும், எவ்வளவு எடை கொண்டவர்களும் இதனை செய்து பயன்பெறலாம்.

***

ரத்தசோகையும் தீர்வுகளும்


இரும்புச்சத்தின் குறைபாட்டால் அனிமீயா எனப்படும் ரத்த சோகை ஏற்படுகிறது. www.anemia.org என்ற வெப்சைட்டில் ரத்த சோகைக்கு மருத்துவம், உணவுப் பழக்க வழக்கங் களினால் தீர்வு காண்பது குறித்த வழிவகைகள் உள்ளன. இந்த வெப்சைட்டின் சார்பில், ஒரு மாதாந்திர நியூஸ் லெட்டரும் வெளியிடப்படுகிறது.


***

சர்க்கரைக்கும் உடல் எடைக்கும் சம்பந்தம் இல்லை

லண்டன் :

அதிக அளவில் இனிப்பு பானங்களை குடிப்பதால் உடல் எடை கூடும் என கருத்து பரவலாக நிலவி வந்தது. ஆனால் குறைந்த அளவு இனிப்பு பானங்களை குடிப்பதால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.


எடின்பெர்க்கில் உள்ள குயின் மார்க்ரெட் பல்கலையில் மரியா ரிய்ட், பருமனான பெண்கள் சுக்ரோஸ் பானங்களையும், இனிப்பு உணவினையும் சாப்பிடுவதால் உடல் எடையில் மாற்றம் ஏற்படாது என தெரிவித்துள்ளார். பாடிமாஸ் இண்டெக்ஸ் 25 முதல் 30 வரையிலான, 20 வயது முதல் 55 வயதிலான பெண்களை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் இந்த முடிவு தெரியவந்துள்ளது.



ஆனால் அவர்களின் மனநிலையில் இனிப்பு பானங்கள் அருந்துவதால் எடை கூடுவதாக நினைக்கின்றனர். உணவு கட்டுப்பாட்டால் ஏற்படும் இழப்புகளை இனிப்பு உணவு சாப்பிடுவதால் சரிசெய்து விடமுடியும். எனவே சரிவிகித உணவில் இனிப்பும் ஒன்று. எனவேதான் தமிழர்கள் உணவில் இனிப்பிற்கும் ஒரு பகுதி கொடுத்துள்ளனர்.


***

இதய நோயாளிகளுக்கு பப்பாளி!

கடுமையான காய்ச்சலைக் குணப்படுத்த உதவும் பப்பாளி இலை கஷாயம் இதய நோயாளிகளுக்கும் நல்லது. முக்கியமாக அடிக்கடி இதயத் துடிப்பு அதிகரிப்பதால் அவதிப்படும் நோயாளிகளுக்கு பப்பாளி இலை கஷாயம் சிறந்த பலனளிக்கும்.


பப்பாளி இலை கஷாயம் நோயாளியை அமைதிப்படுத்தி, இதயத்துடிப்பைக் குறைத்து நிவாரணம் அளிக்கிறது. இதய நோயாளிகளுக்கு நன்றாக முற்றி பழுத்த பப்பாளிப் பழம் மிகச் சிறந்த உணவாகும்.

பப்பாளிப் பழம் ரத்தத்தில் கொலஸ்டிராலின் அளவைக் குறைத்து, ரத்தக் குழாய்களை நெகிழக் கூடியவையாக ஆக்குவதால், இதய நோயாளிகள் பப்பாளிப் பழத்தைத் தவறாமல் கண்டிப்பாக அவர்களுடைய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

காலை உணவாக பப்பாளிப் பழத்தை மட்டுமே சாப்பிடலாம். மாலையில் தேநீர் வேளையிலும் பப்பாளிப் பழம் சாப்பிடலாம். ஆனால் இரவில் பப்பாளிப் பழம் சாப்பிடக் கூடாது.

தயாரிப்பது எப்படி?

நிழலில் உலர்த்தப்பட்ட பப்பாளி இலையில் சுமார் 5 கிராம் முதல் 10 கிராம் வரை எடுத்துக் கொள்ளவும். அதை ஒரு கோப்பை வெந்நீரில் போட்டு 5 நிமிடங்களுக்கு நன்றாக ஊற விடவும். பின்னர் வடிகட்டி அந்த கஷாயத்தை நோயாளிகளுக்குக் குடிக்க கொடுக்கவும்.

இந்த சிகிச்சையினால் நோயாளியின் உடல் வெப்ப நிலை தணியும். நாடித் துடிப்பின் வேகமும் குறையும்.



***
thanks - தினமலர்
thanks - மாலைமலர்.
thanks "லங்கா"
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "