...

"வாழ்க வளமுடன்"

07 டிசம்பர், 2010

கறுப்புத் தேநீர் ( or ) எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து அருந்தினால் நல்லது !

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தேநீரை:



உலகம் முழுவதும் தேநீர் அருந்தும் மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.இந்த நிலையில் பால் சேர்க்காமல் இதற்குப் பதிலாக எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தேநீரை அருந்தினால்,தேநீரில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகளை எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, அதிக அளவு உடல் உறிஞ்சிக்கொள்ள உதவுகிறது.

*

ஜப்பானில் இருபது வயதிற்கு மேற்பட்ட நாற்பதாயிரம் பேரை பதினொரு ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து ஆராய்ந்தார்கள்.இவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக உள்ள மனிதர்களே.

*

இவர்கள் தினமும் 5 முறை பால் சேர்க்காத கிரீன் டீ அல்லது சாதாரண கறுப்புத் தேநீர் அருந்துபவர்களே. இரு பிரிவினர்களும் பால் சேர்ப்பதில்லை. இவர்களுக்கு இதய நோய் பாதிப்பது 30% உடனடியாகக் குறைந்திருந்ததாம்.


*

இந்தத் தகவல்கள் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் இதழில் வெளியானது. எனவே, பால் சேர்க்காமல், விரும்பினால் பாலிற்குப் பதிலாக எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து அருந்தி வாருங்கள்.


***

கறுப்புத் தேநீர் (BlackTea)


லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லூரி ஆய்வாளர்கள் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் வேலை பார்த்த ஒரு குழுவினருக்கு தினமும் இரண்டு கோப்பை கறுப்புத் தேநீர் (BlackTea)அருந்தக் கொடுத்தனர்.

*

இதனால் இவர்கள் மிகவும் அமைதியுடன் நெருக்கடியான சூழ்நிலையிலும் பதற்றமின்றிப் பணிபுரிந்தனர். இதேபோல நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தவர்களுக்கு தேநீரில் எந்த அளவு காஃபைன் சேர்க்கப்பட்டதோ அதே அளவு காஃபைன் சேர்க்கப்பட்ட வேறு பானத்தைக் கொடுத்து வந்தனர்.

*

இவர்களோ மிகுந்த பதட்டத்துடனேயே தங்கள் பணிகளைத் தொடர்ந்தனர். இருபிரிவினருக்கும் வழக்கமான தேநீர் என்று சொல்லியே பானங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

*

மேலும் கறுப்புத் தேநீர் (அல்லது கிரீன் டீ) அருந்தினால் கார்டிஸோல் என்ற மன இறுக்க ஹார்மோன் குறைவாகச் சுரக்கிறது. இந்த இயக்கு நீர் இரத்தத்தில் அதிகம் கலந்தால் அது, இதய நோய்களை உருவாக்கிவிடும். எனவே, பால் சேர்க்காத தேநீரை அருந்தப் பழகுங்கள்.

*

பால் சேர்த்து அருந்துகிறவர்கள் இரண்டு வேளையாவது கறுப்புத் தேநீர் அருந்தி வாருங்கள். பாலில் கால்சியமும் உள்ளது.

*

காபி அருந்தும் பழக்கம் உள்ளவர்களின் இதயத்தை இருபது ஆண்டுகள் ஆராய்ந்தனர். ஒரு இலட்சம் பேரின் காபி அருந்தும் பழக்கம் அவர்களின் இதயத்தை மிகவும் ஆரோக்கியமாக பராமரிப்பதைக் கண்டுபிடித்தார்கள். இந்த விவரங்களை புகழ்பெற்ற 'சர்குலேஷன்' என்ற மருத்துவ இதழிலும் வெளியிட்டனர்.

*

எனவே, மூன்று வேளை காபி அருந்துகிறவர்கள் ஒரு வேளை கறுப்புத் தேநீர் அருந்தி வாருங்கள். முடிந்தால் எலுமிச்சம் பழத்தையும் இதில் பிழிந்து அருந்தி வாருங்கள்.

*

தேநீர் அருந்துகிறவர்கள் இரண்டு அல்லது மூன்று வேளை மட்டுமே கறுப்புத் (அல்லது கிரீன்டீ) தேநீர் அருந்தி வாருங்கள்.

*

தேநீரோ அல்லது காபியோ அதிகக் கோப்பைகள் அருந்தினால் உடலில் நீர்வறட்சி ஏற்படும்.

*

தேநீரைத் தயாரித்து நான்கு நிமிடங்கள் ஆறவைத்த பிறகே அருந்த வேண்டும். அதிகச் சூடு உள்ள தேநீர் நமது உணவுப் பாதையில் 5 மடங்கு வேகத்தில் புற்றுநோயை உண்டாக்கி விடுகிறதாம். எனவே, மிதமான சூட்டில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து அருந்தும் தேநீர் பழக்கத்திற்கு மாறுங்கள்.

*

உங்களுக்கு ஓர் உண்மை தெரியுமா? உலகில் எவருமே தேநீரில் பால் கலந்து அருந்துவதில்லை.நாம் மட்டும் இத்தவறைத் தொடர்ந்து செய்கிறோம். எனவே நன்கு யோசித்து முடிவு எடுங்கள்!

*

by - கே.டி.எஸ்.


***
thanks "குமுதம்"
thanks கல்கண்டு
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "