...

"வாழ்க வளமுடன்"

28 செப்டம்பர், 2010

சிறு தலைவலிக்கு கூட மாத்திரை சாப்பிடுபவரா? கண்டிப்பா இதை படிங்க

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நம்மில் பல பேர் சிறு தலைவலி, சளி, காய்ச்சல் போன்றவற்றிக்கு கூட உடனே மருந்து சாப்பிட்டு விடுவார்கள். இதில் என்ன தவறு இருக்கு!




தலைவலி காய்ச்சல் என்றால் மருந்து எடுத்துக்கொண்டால் தானே சரி ஆகும்! என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

*


நான் கூறுவது சிறு தலைவலி மற்றும் தொடக்க காய்ச்சலுக்கு மட்டுமே! தீவிர பிரச்சனைக்கு அல்ல.

*


நமக்கு அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நம் உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாததே. அதனால தான் இது ஒரு சிலருக்கு அடிக்கடி ஏற்படுகிறது.

*

கொஞ்சம் தண்ணீர் மாறினாலோ, தட்பவெட்ப நிலை மாறினாலோ இதன் தாக்கம் அதிகமாக இருக்கும், இதற்க்கு முக்கிய காரணம் நம் உடல் அந்த மாற்றத்தை ஏற்று கொள்ளக்கூடிய அளவிற்கு திராணி இல்லாததே காரணம்.

*


கொஞ்சம் (நிறைய) பேருக்கு, இப்படின்னா காய்ச்சல் தலைவலி சளி வந்து விடும் அவர்களை கவனித்தீர்கள் என்றால் அவர்கள் அதிகம் மருந்து மாத்திரைகள் உட்கொள்பவர்களா இருப்பார்கள்.

*

ஒரு சிலருக்கு இவைகள் அவர்கள் பக்கமே வராது அப்படியே வந்தாலும் விரைவில் சரியாகி விடும், காரணம் இதை போல நேர்ந்தால் உடனடியாக மருந்து உட்கொள்ள மாட்டார்கள்.

*

ஏதாவது சூடா காஃபி, தூக்கம் அல்லது ரசம் சாதமோடு முடித்து கொள்வார்கள். நம் உடலுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளையே ஏதாவது நம் உடலுக்கு நேர்ந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனபது தான்.

*

நமக்கு ஏற்படும் பிரச்னையை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் நம் உடல் இருக்கும். எனவே அது செய்து முடிக்கும் முன்பே நாம் மருந்து எடுத்துகொண்டால் நம் உடல் அதற்க்கு பழகி விடும்.

*

எனவே வரும் தலைவலி காய்ச்சல் போன்றவற்றை தடுக்க முயற்சிகள் எடுக்காது, அப்படி வந்தவற்றையும் எளிதில் குணப்படுத்தாது, எனவே நீங்கள் மருந்து சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் என்ற நிலைக்கு உங்கள் உடல்நிலை வந்து விடும்.

*


முதலில் தலைவலிக்கு ஒரு மாத்திரை சாப்பிட்டவர்கள், போக போக இரண்டு மூன்று சாப்பிட்டால் தான் சரி ஆகும் என்ற நிலைமை வந்து விடும் அல்லது ஸ்ட்ராங்கானா மருந்து உட்கொண்டால் மட்டுமே கேட்கும் படி நம் உடல் பழகி விடும்,

*

அதோடில்லாமல் நமது உடலின் எதிர்ப்பு சக்தியும் குறைந்து அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் போன்றவைகள் ஆக்கிரமித்து கொள்ளும், உடனே குணமும் ஆகாது ஒரு வாரத்திற்கு மூக்கை உறிஞ்சுகிட்டு இருக்க வேண்டியது தான்.

*

இதை போன்ற நிலையை தவிர்க்க மருத்துவரிடம் செல்லாமல் நீங்களே தலைவலிக்கும் சளிக்கும் காய்ச்சலுக்கும் (Saridon, Crosin, Vicks action 500, Metacin, Anacin(temporarily relieves minor aches and pains due to headache) போன்றவை) மருந்து உட்கொள்வீர்கள் தானே, அந்த சமயங்களில் அதற்க்கு பதிலாக ஒரு தூக்கமோ, சூடாக ஒரு காஃபியோ அல்லது ரசம் சாதம் மட்டுமோ சாப்பிட்டு நன்கு ஓய்வு எடுத்தாலே போதுமானது.

*

இரவில் படுக்கும் போது வயிற்று வலி வந்தால் உடலின் உஷ்ணமாக கூட இருக்கலாம், இதற்க்கு சிறிது வெந்தயத்தை மோரில் கலந்து சாப்பிட்ட பிறகு தூங்கினால் சரி ஆகி விடும்.

*


இதை போல செய்ய முடியாத நிலைமையில் இருந்தால் மட்டுமே மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

*

மருந்து மாத்திரைகளை தவிர்த்தால் மட்டுமே (அவசியமான நேரங்களில் அல்ல) நமது உடல் நலம் சிறப்பாக இருக்கும், இதை போல தொந்தரவுகள் நம்மை நெருங்காது.

***

குறிப்பு:


மேற்கூறிய அனைத்தும் தொடக்க நிலைக்கு மட்டுமே, இதற்காக நாமே மருத்துவராக கருதி கொண்டு அலட்சியமாக இருந்து விடக்கூடாது, குணமாகவில்லை என்றால் மருத்துவரை அணுகி சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.

***

நன்றி http://tamilvilihal.blogspot.com/

***

"வாழ்க வளமுடன்"


***

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இதில் செலுத்தவும்.

4 comments:

ப.கந்தசாமி சொன்னது…

ரொம்ப நல்ல கருத்து. ஆனா பாருங்க உலகத்துல நல்லதுக்கு காலமில்ல.

Muruganandan M.K. சொன்னது…

எடுத்தற்கு எல்லாம் மருந்து அவசியமல்ல என்பது உண்மை.

prabhadamu சொன்னது…

//// DrPKandaswamyPhD கூறியது...
ரொம்ப நல்ல கருத்து. ஆனா பாருங்க உலகத்துல நல்லதுக்கு காலமில்ல./////



மிக்க நன்றி ஜயா. உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கும், உங்கள் கருத்துக்கும், ஊக்கத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி ஜயா!


நீங்கள் சொல்லுவதும் உண்மைதான். எல்லாம் மருந்து மாத்திரைக்கு போயாச்சு. இனியாவது புரிந்துக் கொள்ளுவோம்.

prabhadamu சொன்னது…

/// Dr.எம்.கே.முருகானந்தன் கூறியது...
எடுத்தற்கு எல்லாம் மருந்து அவசியமல்ல என்பது உண்மை.
////


மிக்க நன்றி ஜயா. உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கும், உங்கள் கருத்துக்கும், ஊக்கத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி ஜயா!


நீங்கள் சொல்லுவதும் உண்மைதான்.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "