...

"வாழ்க வளமுடன்"

28 செப்டம்பர், 2010

காலணிகள் வாங்கும் போது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
காலணிகள், இப்போதெல்லாம் ஆடம்பரத் திற்கான அவசியமாக மாறிவருகின்றன.




காலணிகள், இப்போதெல்லாம் ஆடம்பரத்திற்கான அவசியமாக மாறிவருகின்றன. காலுக்கு இதமாக இருக்கவேண்டும் என்பதற் காக வாங்கப்பட்ட காலணிகள் காலமாற்றத் தில் அழகுக்கும், ஆடம்பரத்திற்கும் மாறியதில் ஆச்சரியமில்லை என்றாலும், ஆடைக்கும், அணிகலன்களுக்கும் கொடுக்கும் அதே முக் கியத்துவத்தை செருப்புக்கும் கொடுத்து வாங்கி அணிந்து மகிழ்கின்றனர் இன்றைய தலைமுறையினர்.

*


அதனால்தான் ஆடை, அணிகலன்களுக்கு நிகராக காலணிகளின் விலையும் அதிகரித்து வருகின்றது. இப்போதெல்லாம் பல ஆயிரம் ரூபாய் வரை செருப்புகள் விற்கப்படுகின்றன.

*


கலர்புல் செருப்புகளையும், ஆடைக்கு ஏற்ற மேட்சான செருப்புகளையுமே இன்றைய இளம் பெண்கள் விரும்புகின்றனர். ஆனால் செருப்பு என்பது நமது உள்ளங்காலோடு நெருங்கிய தொடர்பு உடையதால் அதை வயசுக்கு தக்க படியும், தேவைக்கு தக்கபடியும் வாங்குவது முக்கியமானது.

*

ஏனென்றால் உள்ளங்காலுடன் நமது உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் தொடர்புடையது. இப்போது திருமணம் போன்ற விசே ஷங்களுக்கும், வீடு, சுற்றுலா போன்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான செருப்புகளை பெண்கள் அணிகின்றனர்.

*

உடலுக்கு தகுந்தபடி செருப்புகளை வாங்குவது நல்லது. பொருத்தமான செருப்புகளை அணிபவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். பொருத்தமில்லாத செருப்புகளை அணிந்தால் தன்னம்பிக்கை குறையும்.

*


செருப்புகளை தேர்ந்தெடுத்து வாங்கும் போது மூன்று விஷயங்களை கவனித்து வாங்குவது நல்லது. அவை சௌகரியம், அழகு, நிறம் ஆகியவை. கண்ணைப் பறிக்கும் கலர்களை விட இளநிறமே, மற்றவர்களை ஈர்க்கக் கூடியதாக இருக்கும்.

*

முன்பகுதி குறுகி, குதிகால் உயர்ந்து இருப்பதையே இன்றைய இளம்பெண்கள் விரும்பு கின்றனர். செருப்புகளின் முன்பகுதி குறுகி உள்ளதால் விரல்கள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன.

*

மேலும் வர்மப் புள்ளிகளும் அழுத்தப்படுவதால், உடலில் பலவித பிரச்சினை களை ஏற்படுத்தும். இதனால் தலைவலி, கண் வலி, சோர்வு, கால்வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும்.

*


மேலும் இறுக்கிப் பிடிக்கும் விரல்களில் கொப்பளங்கள் ஏற்படும். இயல்பாக நடக்க முடியாமல் நெருக்கடி ஏற்படும். இன்றைய பேஷன் விரும்பிகள் அனைவருமே குதிகால் உயர்ந்த செருப்புகளையே அணிகின்றனர்.

*

இதன் காரணமாக உடலின் சமன்நிலை பாதிப்பு அடைகிறது. இதனால் முதுகுவலி, குதிகால் வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும். கால்கள் மெலிந்து இருப்பவர்கள் பென்ஸி ஹீல்ஸ்' என்ற குதிகால் செருப்புகளை தவிர்க்கவும்.

*

குண்டு உடல்வாகு உடையவர்கள் அதிக எடையுள்ள செருப்புகளை அணிய வேண்டாம். இவர்கள் மென்மையான திறந்த வெளி செருப்புகளை அணிவது நல்லது.

*


பாதம் நீளமாக உள்ளவர்கள், கோடு போட்ட டிசைன்கள் நிறைந்த செருப்புகளை அணிய வேண்டாம். இதனால் பாதம் மேலும் நீளமாக இருப்பதைப் போன்று தோற்றமளிக்கும். செருப்புகளை வாங்கும்போது.

*

அதை வலது காலில் போட்டுப் பார்த்து வாங்கவும். உங்களுடைய உடல் அமைப்பு, வேலை, செல் லும் இடத்துக்கு தக்கபடி செருப்புகளை அணியவும்.

*


பெண்களை பொறுத்தவரை, பெண்களின் உடல் வடிவமைப்பு, எடைக்கு தக்கபடி செருப் புகளை நிதானமாக தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது.

*

ஷூக்கள் வாங்கும்போது முன்பக்கம், பின்பக்கம் அழுத்திப் பார்த்து போதுமான இடைவெளி உள்ளதா? என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

***

இந்த தளத்தின் பெயருக்கு தெரியவில்லை.
இந்த தளத்திற்க்கு நன்றி.


***


"வாழ்க வளமுடன்"

***

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இதில் செலுத்தவும்.

2 comments:

Umapathy சொன்னது…

அனைவரும் அறிய வேண்டிய அடிப்படை செய்தி

prabhadamu சொன்னது…

/// உமாபதி கூறியது...
அனைவரும் அறிய வேண்டிய அடிப்படை செய்தி
////


மிக்க நன்றி நண்பா. உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கும், உங்கள் கருத்துக்கும், ஊக்கத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே!

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "