...

"வாழ்க வளமுடன்"

29 செப்டம்பர், 2010

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நாம் தினமும் குடிக்கும் காபி, டீயில் இந்த ஏலக்காய் பொடியை சிறிதளவு கலந்தாலும் சும்மா நச்சுன்னு இருக்கும், அந்த காபி, டீ. இந்த ஏலக்காய் பற்றி சற்று விரிவாக காண்போம்,




Elettaria Cardamomum என்ற தாவரவியல் பெயரில் அழைக்கப்படும் ஏலக்காய் சமஸ்கிருதத்தில் "ஏலா" என்று அழைக்கப்படுகிறது. முதிர்ந்த ஏலக்காய்களின் உள்ளிருக்கும் விதைகள் (ஏலரிசி) மருத்துவ பயன்கள் கொண்டவை.


***

ஏலக்காய் பயன்கள்:



1. உணவு மற்றும் நீர்ம பொருள்களின் அகில்களாக (நறுமணப் பொருளாக) சமையலின் நறுமணமாக உள்ளது.

*

2. ஏலக்காய் எண்ணெய் பதப்டுத்தப்பட்ட உணவு, நீர்ம, மற்றும் வாசனை பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது.


*

3. தமிழர்கள் உருவாக்கும் தேநீர்களில் ஒரு மணம் சேர்ப்பதற்கு, வட இரோப்பாவில் இனியங்களில் ஒரு இன்றியமையாத உள் பொருளாக உள்ளது.

***

மருத்துவ குணங்கள்:



அஜீரணம்:

சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகவில்லை என்றால் மருந்து, மாத்திரை தேட வேண்டாம். ஏலரிசியுடன், ஓமம், சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை பொடி செய்து, அதில் ஒரு தேக்கரண்டி அளவு உட்கொள்ள வேண்டும். இவ்வாறு உட்கொண்டால் அஜீரணக் கோளாறு விலகிவிடும்.
*

வயிற்றுவலி:

அவ்வப்போது வந்து எட்டிப்பார்க்கும் வயிற்றுவலிக்கும் ஏலக்காய் சிறந்த மருந்து. இதற்காக, ஏலரிசியுடன் சீரகம், சுக்கு, கிராம்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். 2 கிராம் அளவு பொடியை தேனில் கலந்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்தால் வயிற்றுவலி குணமாகும்.
*

கர்ப்பக்கால பிரச்சினை:

கர்ப்பிணி பெண்களுக்கு, அந்த கர்ப்பக் காலத்தில் அஜீரணம், குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படுவது உண்டு. இவற்றை போக்க, ஏலக்காயின் மேல் தோலை உரித்து, உள்ளிருக்கும் ஏலரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த ஏலரிசியை காய வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். 2 கிராம் அளவு பொடியை, தேவையான அளவு எலுமிச்சம்பழச்சாற்றில் குழைத்து, உணவு உட்கொண்ட பின்பு சாப்பிட்டு வரவேண்டும். தொடர்ச்சியாக ஒருசில நாட்கள் இப்படி உட்கொண்டு வந்தால் கர்ப்பக் காலத்தில் ஏற்படும் அஜீரணம், குமட்டல், வாந்தி போன்றவற்றை தடுக்கலாம்.

*

புகைப்பதை நிறுத்த உதவும் ஏலக்காய்:


ஏலக்காய் மணத்திற்கு மட்டுமல்ல மருந்துக்கும் உதவுகிறது. சிகரெட் எரியும்போது கசியும் "நிக்கோட்டின்" நஞ்சு, தொண்டை, ஈறு, நாக்குகளில் படியும்போது கறை உண்டாவதுடன், அங்கிருக்கும் பூந்தசைகளை அரித்துப் புண்களை உண்டாக்கும். "ஏலக்காய்" இந்தப் புண்களை ஆற்றுவிப்பதுடன், நிக்கோட்டின் கறைகளையும் படியாமல் அப்புறப்படுத்துகிறது.

இன்னொரு அரிய பயனும் உள்ளது. சிகரெட் பிடிக்கும் எண்ணம் வரும்போதெல்லாம், ஒரு ஏலக்காயினை வாயிலிட்டுச் சுவைக்க, புகைக்கும் எண்ணம் விலகும். இதனைப் பல அன்பர்கள் பின்பற்றி சிலர் புகைப்பதையே விட்டுவிட்டனர்.


***

பிற பயன்கள்:


1. ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும்.

*

2. ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப் பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும், ஜீரணம் அதிகரிக்கும்.

*

3. ஏலத்தை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும்.

*

4. ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல், தொண்டை வலி ஆகியவைகள் தீரும்.

*

5. நான்கு ஏலத்தை கைப்பிடியளவு நாவல் இலைக் கொழுந்துடன் சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிட்டால் செரியாமை, சீதக்காதி தீரும்.

*

6. ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி விலகும்.

*

7. தலை குளிர்ச்சிக்கான தைலம் தயாரிக்கும் சிற்றாமுட்டி வேர்ப்பொடியுடன் ஏலக்காயும், நல்லெண்ணெயும் மற்றும் சில மூலிகைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

*

8. கிரேக்க நாட்டில் கி.மு. 4-ம் நூற்றாண்டு முதலே ஏலக்காய் நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டது.

*

9. இந்திய மருத்துவத்தில் ஆஸ்துமா, மூச்சுக்குழல், அழற்சி, சிறுநீரகக் கல், நரம்பு தளர்ச்சி மற்றும் பலவீனம் போக்க ஏலக்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

*

9. சீன மருத்துவத்தில் சிறுநீர்ப்போக்கு கட்டுப்பாடு இன்மையை போக்கவும், வலுவேற்றியாகவும் ஏலக்காய் பயன்படுகிறது.

*

10. வாய் துர்நாற்றம் போக்கவும் ஏலக்காய் சிறந்த மருந்து.

*

11. உணவு பொருட்களுடன் ஏலக்காய் சேர்த்தால் அவை மிகுந்த வாசனை கொண்டவையாகவும், சுவை மிகுதியாகவும் மாறும்.

*

12. குளிர் பிரதேசங்களில் உணவு பொருட்களின் வாசனைக்காக அதிக அளவில் ஏலக்காயை பயன்படுத்துகிறார்கள். இதனால், இந்திய ஏலக்காய்களுக்கு பல நாடுகளில் நல்ல மவுசு உள்ளது.

*

13. ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும்.

*

14. ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப்பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும். ஜீரணம் அதிகரிக்கும்.

*

15. ஏலக்காய் 15, வால் மிளகு 15, மற்றும் மூன்று வெற்றிலை ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி மூன்று வேளை குடித்தால் வாந்தி, குமட்டல் நிற்கும்.

*

16. ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி சளி விலகும்.

*

17. ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் ஆகியவற்றை 20 கிராம் வீதம் எடுத்துக்கொண்டு நன்றாக வறுத்து பொடியாக்கி அரை தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் அல்லது நெய் கலந்து சாப்பிட்டால் (தினசரி 3 வேளை) உடல் வலி, பசியின்மை, அஜீரணம் ஆகியவற்றுக்கு நிரந்தர தீர்வு ஏற்படலாம்.

*

18. ஏலக்காய் 10, மிளகு 5, கையளவு ரோஜா மொக்கு ஆகியவைகளை ஒரு லிட்டர் நீரில் நன்றாக பாதியாகும் வரை காய்ச்சி வடிகட்டி தேவையான சர்க்கரை, பால் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும்.

*

19. ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு, இருமல், தொண்டை வலி ஆகியவைகள் தீரும்.

*

20. ஏலக்காய் விதைகளை தூள் செய்து அதனை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து அதன் பின்னர் அரை ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும். ஆனால் ஜாக்கிரதை, இதை அதிக அளவில் பயன்படுத்தினால், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி ஆண்மைக் குறைவு பிரச்சினையை ஏற்படுத்திவிடும் என்று மூலிகை ஆராச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

***
நன்றி தமிழ்கூடல்
நன்றி மற்ற தளங்கள்.

***
"வாழ்க வளமுடன்"
***
இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இதில் செலுத்தவும்.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "