இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இலைகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. ஆதலால்தான் பழங்காலத்தில் இலைகள் பெரும்பாலும் மருந்தில் மூலக் கூறுகளாக பயன்படுத்தப்பட்டன. நமக்கு எளிதாக கிடைக்கும் சில இலைகளின் அபூர்வ பயன்பாடுகளை இங்கே காண்போம்.***
செம்பருத்தி இலைகள்:
*
செம்பருத்தி இலைகள், பூக்கள் மிகுந்த மருத்துவப் பயன்கள் கொண்டவை. இலைகள் தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் உடையவை. வழுவழுப்பான தன்மை கொண்ட இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாக்க உதவுகிறது. பூக்கள் குளிர்ச்சி பொருந்தியதால் சருமம் அழகாகும். சிவப்பு பூக்கள்தான் மருத்துவ சிறப்பு வாய்ந்தவை. செம்பருத்திப் பூவில் தங்கச்சத்து உண்டு என்று மருத்துவ சாஸ்திரங்கள் கூறுகின்றன. இப்பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்கிவிடும்.
*****
ரோஜா:
*
ரோஜா, அழகான மலர் மட்டுமல்ல... அசத்த லான மருத்துவ குணங்களும் கொண்டது. ரோஜாவின் வாசனையை முகர்தல் இருதயத் திற்கு பலனைக் கொடுக்கும். சளி குறையும். வெறும் வயிற்றில் பத்து ரோஜா இதழ்களை சாப்பிட்டு வந்தால் மேனி மின்னும். மேலும் ரத்தம் சுத்தமாகும். ரோஜா இதழ்களுடன் வெற்றிலை, பாக்கு ஆகியவை சேர்த்து மென்று தின்றால் வாய் நாற்றம் நீங்கும்.
*****
துளசி இலை:
*
துளசி இலையில் புரதம், கார்போஹைட்ரேட், அமிலச் சத்துகள் மற்றும் உலோகச் சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. துளசி வேர்ப் பட்டைத் தூள் அரை டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு குணமாகும். நாக்கில் தோன்றும் எல்லாவித குறைபாட்டையும் நீக்கும் குணம் உடையது. சருமத்தை சுத்தம் செய்து மென்மை தரக் கூடியது.
***
வேப்பிலை:
*
வேப்பிலையை அரைத்து சாற்றை முகப்பருக் களுக்கு தடவி, உள்ளுக்கும் சாப்பிட்டு வந்தால் முகப்பருக்கள் மறையும். ஒரு பிடியளவு வேப்பிலையில் கசகசா, கஸ்தூரி மஞ்சள் சிறிது சேர்த்து மைப்போல அரைத்து முகத்தில் பூசி ஒரு மணிநேரம் கழித்து கழுவி வர, அம்மை வடு மறையும். வேப்பம்பூவை காய்ச்சி, அதனுடன் நெல்லிக்காய் சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் சரும நோய்கள் நீங்கும்.
*****
கறிவேப்பிலை:
*
கறிவேப்பிலையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. இது சோப்புகளில் வாசனையை நிலைக்கச் செய்யும். தலை முடி நரைப்பதைத் தடுத்து கேசத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும். கறிவேப்பிலை, மருதாணி இலை, கரிசலாங்கண்ணி இலையின் தண்டு, வேப்பிலையின் கொழுந்து சிறிது சேர்த்து அரைத்து தலையில் பூசி வந்தால் நரை மறையும்.
*****
புதினா:
*
புதினா இலைகளின் சாறு குளிர்ச்சி தரக் கூடியது. பருக்கள் மற்றும் வடுக்களுக்கு மருந்தாகவும், தோலின் வனப்பை ஊக்கப்படுத்தும் டானிக்காகவும் பயன்படுகிறது. இதன் எண்ணை சருமத்திற்கு புத்துணர்ச்சியை வழங்குகிறது. குளியல் தைலங்களிலும், இதன் பயன்பாடு அதிகம். பொடுகை அகற்றி கேசத்தின் வேர்க்கால்களில் ஊடுருவி கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
*****
கொத்தமல்லி:
*
கொத்தமல்லி இலையின் சாறை சருமத்தின் சொரசொரப்பான பகுதிகளில் காலையில் தேய்த்து, மாலையில் குளித்து வந்தால் தோல் தடிப்பு மாறி வழவழப்பாகும். கொத்தமல்லி இலையை வாயில் போட்டு மென்று வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். கொத்தமல்லி தைலத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சோடிய உப்பு நறுமணம் கொண்டது. வாசனைப் பொருட் களில் அதிகஅளவில் கொத்தமல்லி பயன்படுகிறது.
*****
தேயிலை:
*
தேயிலையில் இருக்கும் `காபின்' என்ற பொருள் நரம்பு மண்டலத்தின் செயலை ஊக்குவிக்கிறது. கிரீன் டீ என குறிக்கப்படும் தேயிலை தற்போது அழகு சாதனப் பொருட்களில் பங்கு வகிக்கின்றது. தேயிலையில் வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நோயை தடுக்கக் கூடிய `ஆன்டி ஆக்ஸிடென்டுகள்' உள்ளன. மூளையை ஊக்கப்படுத்து தல், ஞாபக சக்தி, இளமையைத் தக்க வைத்தல், ஆரோக்கியம் ஆகியவை தேயிலைக்கு உரிய குணங்கள். பற்சிதைவு போன்ற பல் தொடர்பான நோய்களைத் தடுக்கும் வைட்டமின் சி, டி, கே மற்றும் ப்ளோரைடுகள் ஆகியவை இதில் அதிகம் உள்ளன.
*****
அப்ப! அப்பா!!! இயற்க்கை நமக்கு குடுத்திருக்கும் வரங்கள் அதிகம் தான். ஆனால் அதை நாம் சரியான முறையில் பயன் படுத்துகிறோமா!
*
இனியோனும் சிந்திப்போமா!
*
இயற்க்கையை அழிக்காமல் காப்போம்!!
*
இயற்க்கையிக்கு நன்றி சொல்லுவோம்!!!
***
நன்றி மாலைமலர்.
4 comments:
ரொம்ப ஹெல்த் பத்தி வாசிப்பீங்களோ. நானும் சின்ன வயதில் ரொம்ப வாசித்தேன். இப்ப இல்லை. உங்கள் பதிவுகள் மூலம் திருப்ப வாசிக்கத் தொடங்கி இருக்கிறேன். நன்றிங்க. =))
செவ்வரத்தம் பூ அவித்து குடித்தால் வெள்ளையாக வருவோம் என்று யாரோ கூறியதை கேட்டு குடித்திருக்கிறோம். வெள்ளையாக இருந்தும் இன்னும் வெள்ளையாக வரவேண்டும் என்ற பேராசை தான். சின்ன வயதில் செய்தது =))
வேப்பம் இலை ரொம்ப ஸ்ராங்ப்பா. சிறு வயதில் பேன் தொல்லை இருந்தது. ஒரே ஒரு முறை அரைத்து வைத்தது தான். பேன் தொல்லையே இல்லை. ஆனால் தலை பயங்கரமாக எரிந்தது. கண்ணில் படாவிட்டாலும் கண் எரிந்தது. வேப்பம் இலையை உபயோகிக்கும் போது கவனமாக இருங்கள்.
எங்கள் ஊரில் பெண் சமஞ்சால் வேப்பம் துளிரை அரைத்து கொஞ்சம் சீனி போட்டு விழுங்கக் கொடுப்பார்கள். உவ்வே. என்னைக் காப்பாற்றி அப்பா வாழ்க =))
முகப்பருவிற்கு ஒரு சின்ன டிப். நட்மெக் இருக்கில்ல. சாதிக்காய் என்று தமிழில் கூறுவோம். அதனை பொடி செய்து கொஞ்சம் தண்ணீர் கலந்து பூசுங்கள். பரு போய்விடும். ஆனால் எரியும். வேப்பம் கொழுந்தும் நல்லது. இரண்டும் செய்து பார்த்து நிறைய பேர் குணமடைந்திருக்கிறார்கள். மற்ற இலைகளும் பருவிற்கு உதவும் என்பது இன்று தான் தெரியும்.
நன்றி அனாமிக்கா. உங்கள் வருகைக்கும், தகவலுக்கும் மிக்க நன்றி. கூடுதலாக டிப்ஸ் குடுத்ததுக்கும் மிக்க நன்றி.
////ரொம்ப ஹெல்த் பத்தி வாசிப்பீங்களோ. ////ஆமாப்பா எனக்கு அதில் அதிக ஆர்வம். மிக்க நன்றி.
இலைகளை பற்றி அருமையான இடுகை.
நன்றி ஜலீலா அக்கா. உங்கள் வருகைக்கும், பதில்க்கும் மிக்க நன்றி.
கருத்துரையிடுக