இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ஆரோக்கிய வாழ்க்கை முறை, தினசரி தவறாத உடற்பயிற்சி என்றுள்ள ஒருவருக்கு `இதயநோய் பிரச்சினை ஏற்படுமா?' என்று கேட்டால் நீங்கள் `இல்லை' என்றுதான் சொல்வீர்கள். ஆனால் அதையும் தாண்டி இதயப் பாதிப்பு ஏற்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைக்கு மாற்றாக மிக அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதும், போதுமான தூக்கமின்மையும் கூட இதயப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
*
இதயத்துக்குச் சிக்கலை ஏற்படுத்தும் விஷயங்கள் என்னென்ன?
*
அவற்றிலிருந்து நாம் நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி?
*
``இன்றைக்கு மாநகர வாழ்க்கைமுறை மனஅழுத்தத்துக்கு வழிவகுப்பதாக உள்ளது. பலரிடம் மனஅழுத்தப் பிரச்சினை கண்டுபிடிக்கப்படாமலே போகிறது'' என்கிறார், மும்பை நானாவதி மருத்துவமனையைச் சேர்ந்த இதய மருத்துவ நிபுணர் ராஜிவ் பகவத். ``நீண்ட தூரப் பயணம், ஒழுங்கற்ற நேர முறைகளுடன், சுற்றுச் சூழல் மாசுபாடும் ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்துகின்றன'' என்கிறார் அவர்.
*
இதயநோய் பிரச்சினை ஏற்படும் வயதும் குறைந்து கொண்டே வருகிறது' என்று மருத்துவர்கள் `பகீரிட'ச் செய்கின்றனர். பாரம்பரியமாக இதயநோய்ப் பிரச்சினை இல்லாத ஒரு 28 வயது இளைஞர் தொடர் புகைப்பழக்கத்தின் காரணமாகவே இறந்து விட்டார் என்கிறார், மற்றொரு மருத்துவரான சந்தர் வஞ்சானி. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத மற்றொரு நபரும் மனஅழுத்தம் காரணமாக மாரடைப்புக்கு உள்ளாக நேரிட் டது என்று அவர் கூறுகிறார். ``கடந்த இரண்டு வார காலத்தில் மட்டும், ஒழுங்கில் லாத கொலஸ்ட்ரால் அளவு, சர்க்கரை நோய்- உயர் ரத்தஅழுத்தப் பிரச்சினை தொடர்பாக, 25 முதல் 39 வயதுக்கு உட் பட்ட 10 பேர் என்னை வந்து பார்த்திருக் கின்றனர்'' என்கிறார் சந்தர். மனஅழுத்தத் துக்கு உள்ளாகாமல் நம்மை நாமே காத்துக் கொள்வதன் மூலம் இதயத்தையும் காக்க லாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
*
மிகவும் `பிசி'யாக இருப்பதற்கு, அதாவது `ஜெட்' வேக வாழ்க்கைமுறைக்குப் பலியாவது தூக்கம்தான். `நான் சில மணி நேரம் தூங்கினால் போதும், தொடர்ந்து வேலையில் ஈடுபட ஆரம்பித்துவிடுவேன்' என்று பெருமையடித்துக் கொள்ளாதீர்கள் என்கிறார்கள் மருத்துவர் கள். சீரான இதயத் துடிப்பு மற்றும் இயல்பான ரத்த அழுத்தத்துக்கு நல்ல தூக்கம் அவசியம். ``இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைச் சீராகப் பராமரிப்பதற்கு உடம்பு அதன் சொந்த ஒழுங்குமுறை அமைப்பைக் கொண்டிருக்கிறது. போதுமான தூக்கமின்மை, `உயிர்க் கடிகாரத்தை'ப் பாதிக்கிறது. எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் அதை ஈடுகட்ட முடியாது'' என்று இதய மருத்துவர் பகவத் கூறுகிறார்.
*
உடம்பைக் கச்சிதமாக வைத்திருப்பது நல்லதுதான். ஆனால் அதிகமான உடற்பயிற்சி, நன்மையை விட அதிகம் தீமையே பயக்கும் என்று இதய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ``நம்மை நாமே தண்டித்துக்கொள்ளும் ஒரு முறையாக உடற்பயிற்சியை வைத்துக் கொள்ளக் கூடாது'' என்கிறார் யோகா நிபுணரும், உணவியல் வல்லுநருமான ருஜ×தா. ``அமைதியான மனநிலையில் நீங்கள் தியானம் செய்யும்போது அது அற்புதமாகப் பலன் தரும். அதைப் போல ஓய்வான உடம்புக்குத்தான் உடற்பயிற்சி நல்லது'' என்கிறார் ருஜூதா.
நீங்கள் உங்கள் உடம்புக்கு ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய மிகப் பெரிய தீங்கு, ஏற்கனவே தளர்வாக உள்ள நிலையில் மேலும் கடுமையாக உடற்பயிற்சி செய்வது. ``போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு உள்உடலியல் செயல்பாட்டு வேகம் குறைகிறது. எனவே அவர்களால் எடையையும் குறைக்க முடியாது. மாறாக அவர்கள் `பொதுபொது' என்று ஆகிவிடுவார்கள்'' என்று ருஜ×தா எச்சரிக்கிறார்.
நீங்கள் உங்கள் உடம்புக்கு ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய மிகப் பெரிய தீங்கு, ஏற்கனவே தளர்வாக உள்ள நிலையில் மேலும் கடுமையாக உடற்பயிற்சி செய்வது. ``போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு உள்உடலியல் செயல்பாட்டு வேகம் குறைகிறது. எனவே அவர்களால் எடையையும் குறைக்க முடியாது. மாறாக அவர்கள் `பொதுபொது' என்று ஆகிவிடுவார்கள்'' என்று ருஜ×தா எச்சரிக்கிறார்.
*
முக்கியமான விஷயம், வாழ்க்கை, வேலை, உடற்பயிற்சி எல்லாவற்றுக்கு இடையிலும் ஒரு சமநிலையை ஏற்படுத்திக் கொள்வதுதான். எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமானது உறக்கம். நவீன வாழ்க்கை முறை உங்கள் உடல்நிலையைப் பாதிக்க அனுமதிக்காதீர்கள்.
***
ஒரு சிலருக்கு உடற்ப்பயிற்ச்சி ஒற்று கொள்ளாது. அதிகமாக மூச்சு வாங்கும். ஆஸ்த்துமா நோய் இருப்பவர்கள் காட்டாயம் டாக்டர் கருத்துரையின் படி செய்வது நல்லது.
***
நன்றி மாலைமலர்.
0 comments:
கருத்துரையிடுக