...

"வாழ்க வளமுடன்"

17 பிப்ரவரி, 2010

சக்கரவர்த்திக் கீரை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்










கீரையாகப் பயன்படுத்தப்படும் செடிகளுள் சக்கரவர்த்திக் கீரையும் ஒன்று. இந்த கீரைக்குக் கண்ணாடிக் கீரை, சக்கோலி, சில்லி என்ற வேறு பெயர்களும் உண்டு.














மலேசியாவில் இதனை kangkong என்று அழைப்பார்கள்.இது விளை நிலங்களையொட்டி தானாக வளரக்கூடியது. தமிழகத்தில் சில பகுதிகளில் இதைப் பயிரிடவும் செய்கின்றனர். சக்கரவர்த்திக் கீரை செங்குத்தாக சுமார் மூன்றடி உயரம் வரை வளரும்.












இது பசுமை கலந்த செந்நிறத் தண்டுகளையும், கருஞ்சிவப்பு நிறத் தழைகளையும் உடையது.சக்கரவர்த்திக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புக்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.














இக்கீரையை நெய் விட்டு வதக்கிப் பருப்புடன் சேர்த்து உண்ணலாம். பொறுப்பும் தேங்காய்த் துருவலும் சேர்த்துப் பொரியலும் செய்யலாம். இதனைக் குழம்பாக வைத்தும் உண்ணலாம்.
















இந்தக் கீரையுடன் புளி, மிளகாய் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சூப் தயாரித்தும் பருகலாம்.சக்கரவர்த்திக் கீரை நாவிற்குச் சுவையூட்டி பசியைத் தூண்ட வல்லது. கிராணி எனப்படும் வயிற்றுப் பே¡க்கு நோய்க்கு இந்தக் கீரை சிறந்த மருந்தாகும்.
















சிறுநீர் கழிக்க முடியாமல் வயிறு உப்பி அவதிப்படுவோர் இந்தக் கீரையைப் பயன்படுத்தி குணம் பெறலாம். இது மலத்தை இளக்கும்.சக்கரவர்த்திக் கீரையை வாரத்திற்கு நான்கு நாட்கள் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடலுறவில் விருப்பம் அதிகரித்து இல்லற வாழ்வு இன்பமயமாகும்.


















இக்கீரை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது, குடலில் தோன்றும் கொக்கிப் புழு, நாக்குப் பூச்சி போன்ற குடல் ஒட்டுண்ணிகளை ஒழிக்க வல்லது.
















நன்றி தினகரன்.


















இதற்க்கு இன்னோரு பெயர் உள்ளது.










அவை தண்ணீரிலே கங்கூன் கீரை












கீரையை பற்றி அறிந்து கொள்ள விரும்பின் கூகிளில் "Kangkung" என தட்டச்சு செய்து தேடி பாருங்கள். இதை Water Spinach என்றும் அழைப்பார்கள். நீரில்/அல்லது சதுப்பு நிலத்தில் தான் இந்த கீரை வளருமாம்.












இந்த கீரை சமையல் இந்த தளத்தில் பார்க்கவும்.














நன்றி தூயா.


இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "