இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
Mastecting-க்குப் பிறகு உடல் உருவில் வந்த மாற்றத்தைச் சமாளித்தல்1. மார்பக இழப்பு காலப் போக்கில் பின் சமாளிக்க முடியும்.
இந்தச் சிக்கல்களைச் சமாளிக்க உதவும் சில கருத்துரைகள் கீழே தரப்பட்டுள்ளன:
a. யாரோடாவது பேசுங்கள் உங்கள் உணர்ச்சி காலப்போக்கில் தணியும். உங்கள் உணர்ச்சிகளை உங்களுடைய கணவர், குடும்ப உறுப்பினர் அல்லது நெருங்கிய நண்பரிடம் பேசித் தீருங்கள்.
b. காயம் ஆறுதலில் கவனம் செலுத்துங்கள், உங்கள் ஆலோசகர் அறிவித்துள்ள உடற்பயிற்சிகளைத் தொடருங்கள்.
2. அறுவை நடந்த இடம் ஆற கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்
அறுக்கப்பட்ட இடத்தில் கட்டுபோட்டிருக்கும். அந்தக் கட்டு ஈரமாகாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். ஸ்பாஞ்ச் குளியல் எடுத்துக்கொண்டு அப்பகுதி ஈரமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தையல் பிரிக்கப்பட்டிருந்தால் நீங்கள் வழக்கம்போலக் குளிக்கலாம்.
3. பந்து பிழிதல்
a. ஒரு ரப்பர் பந்தைக் கையில் பிடித்துக் கொண்டு படுக்கையில் படுங்கள்.
b. கைகளை மேலே நேராக உயர்த்தி பந்தை மாறி மாறி பிசைந்து விடவும்.
c. பரிந்துரைத்த முறையில் இந்தப் பயிற்சியைச் செய்யவும்.
4. இராட்டினம் சுழுற்றல்
a. ஒரு நூற் கயிறின் இரு முனைகளில் முடிச்சுகளைப் போடவும். பாதிக்கப்படாத கையின் உதவியால் நூற் கயிற்றினை ஒரு கதவின் மீது வீசி கதவின் இருபுறங்களிலும் ஒவ்வொரு முடிச்சுடன் கூடி இருக்கும்படி செய்யவும்.
b. கதவினை இரு கால்களின் இடுக்கில் வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டு குதிகால்கள் நிலத்தில் நன்கு ஊன்றுமாறு அமரவும்.
c. நூற்கயிற்றின் முடிச்சுகளை இரு கைகளாலும் பற்றிக் கொண்டு மேலும் கீழமாக கைகள் மாற்றி இழுக்கவும்.>
5. கைகளால் சுவற்றில் ஏறுதல்
a. சுவற்றிற்கு 6-12 அங்குல தூரத்தில் சுவற்றைப் பார்த்தபடி கால் விரல்களின்மேல் நிற்கவும்.
b. முழங்கைகளை மடக்கி, தோள் மட்டத்திற்கு உள்ளங்கைகளைச் சுவற்றில் பதிக்கவும். வடுவில் அழுத்தமோ வலியோ உண்டாகும் வரை மெல்லமெல்ல உள்ளங்கைகளைச் சுவற்றில் மேல் நோக்கி சீராக ஒரே அளவில் மெல்ல நகர்க்கவும். வலிஎடுக்கும் உயரத்தில் உள்ளங்கைகள் உள்ள உயரத்தை கோடிட்டுக் குறித்துக் கொள்ளவும்.
c. நாட்போக்கில் உங்களுடைய முன்புறைறத்தை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளலாம்.
6. பின்புற வருடல்
பாதிக்கப்பட்ட கையின் முழங்கையை மடித்து கைவிரல்களின் பின்புறம் முதுகின் மேல்புறத்தில் தொடுமாறு வைக்கவும்மெல்ல உங்கள் விரல்கள் முதுகின் மறுபுற விளிம்புக்குச் செல்லுமாறு மெல்ல நகர்த்தவும்.
7. முழங்கை மூட்டுக்களை ஒருங்கே இழுத்தல்
a. முழங்கைகளை மடித்து கழுத்தின் பின்புறம் கொண்டு வந்து கைவிரல்களைப் பிணைத்துக் கொள்ளவும்.
b. இரண்டு முழங்கை மூட்டுக்களையும் ஒன்றோடு ஒன்று தொடுமாறு பக்கமாக மெல்ல நகர்த்தவும்.
அடிக்கடி வினவப்படும் வினாக்கள்
1. மாஸ்டக்டமி செய்வதிலுள்ள இடர்பாடுகள் என்ன ?
எந்த அறுவை மருத்துவம் என்றாலும் அதில் வர வாய்ப்புள்ள சில இடர்பாடுகள் உள்ளன. அவையாவன:
1. தொற்றுநோய், இரத்தக்கசிவு போன்ற காயம் ஆறுதலில் உள்ள இடர்பாடுகள்.
2. தோள் விறைத்துப்போதல்.
3. மரத்துப் போதல். மாஸ்டக்டமி நடந்த பிறகு வழக்கமாக ஏற்படுவதைப்போல அறுவை நடந்த இடத்திலுள்ள தோலும் அக்குள் பகுதியும் சிறிது மரத்துப்போகும்.
4. செரோமா (Serome) :
அறுவை காயத்திலிருந்தும் அக்குளிலிருந்தும் வடியும் நிணநீரை, தனிச்சிறப்பு மருத்துவ மனையில் எளிதில் வடித்து எடுத்து விடுவார்கள்.
5. லிம்ப்டோம் (lymphedome) :
என்பது 10-20 சதவீத நோயாளிகளுக்கு ஏற்படும் நீண்டகால லேசான வீக்கம்.
6. தோல் அழுகல் - (Skin necrosis) :
சில சமயங்களில் தோல் முனையில் சில பகுதி நன்றாக ஆறாமல் அழுகுவதைப்போல ஈரமாக இருக்கும். எனினும் தினமும் சுத்தப்படுத்தி, மருந்திட்டு, கட்டுவதின் மூலம் அதைக் குணமாக்க முடியும்.
2. எனக்கு மாஸ்டெக்டமி நடைபெற்ற பிறகு அடுத்த மார்பகத்தில் புற்று நோய் வரும் வாய்ப்புள்ளதா ?
ஆமாம். அடுத்தடுத்த நீங்கள் மருத்துவரை சந்திக்கும் போது வழக்கமான பரிசோதனைகளும், மம்மோகிரம்களும் நடத்தப்படும். மாதந்தோறும் நீங்களே சுயமாக பரிசீலித்துப் பாரத்துக் கொள்ளுங்கள். இரு புறங்களையும் உற்றுப் பாருங்கள். மாதத்திற்கு மாதம் ஏதேனும் மாற்றங்கள் காணப்பட்டால் உங்கள் மருத்துவரிடம் கூறுங்கள்.
3. அறுவை நடைபெற்ற கை மரத்துப்போதலோ, வலியையோ வீக்கமோ இருப்பதை உணர்ந்தாலோ, மூன்று நாட்கள் காய்ச்சல் தொடர்ந்து இருந்தாலோ நானென்ன செய்ய வேண்டும் ?
இயன்ற விரைவில் உங்கள் மருத்துவரைச் சந்தித்துப் பேசுங்கள்.
4. நான் எங்கே செயற்கை மார்பகத்தைப் பொருத்திக் கொள்ள இயலும் ?
CGH ரீடைல் பார்மஸி (போன் எண் 6850 1889) மற்றும் சிணீஸீநீணீக்ஷீமீ ( எனக்கு இவை என்ன என்று புரியலை? தவறுக்கு மன்னிக்கவும். )
(போன் 6736 3168) இவ்விடங்களிலிருந்து செயற்கை மார்பகங்களைப் பெறலாம்.
5. மார்பகப் புற்று துணைக்குழு (Breast cancer support camp) - வில் நான் எங்கே சேரலாம் ?
Breast Cancer Support Groups:
a) CGH Breast Support குரூப்
b) Breast Cancer பௌண்டடின்
c) Singapore Cancer Society
இவை சிங்கப்பூர் சாங்கி தளத்தில் கிடைத்தது.
நன்றி சிங்கை சாங்கி மருத்துவ மனை.
http://www.cgh.com.sg/library/tamil_breast_allabout.asp
2 comments:
அனைத்து பதிவுகளும் பார்த்தேன்.. நல்ல விஷயம், அதுவும் தமிழில், தொடருங்கள்...
நன்றி அண்ணா. எல்லருக்கும் முதல் பதில் பதிவு போட்டு அனைவரையும் ஊக்க படுத்துகீரிர்கள். உங்க ஊக்கத்துக்கு நன்றி அண்ணா.
கருத்துரையிடுக