...

"வாழ்க வளமுடன்"

02 பிப்ரவரி, 2010

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - 3

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அறுவை மருத்துவத்தின் வகைகள்:-

அ. லம்பாக்டமி (Lumpectomy)

இந்த வகை அறுவை மருத்துவத்தில் மார்பகம் அப்படியே இருக்கும் மார்பகக் கட்டியும், அதைச் சுற்றியுள்ள சாதாரண இழைமங்கள் சிலவும் அறுத்து அகற்றப்படும்.

ஆ. மாஸ்டெக்டமி (Mastectomy)
இதில் பல வகைகள் உள்ளன.


சாதாரண மாஸ்டெக்டமி (Simple mastectomy)

இந்த முறையில் அக்குளிலுள்ள லிம்ப் நோட்களைச் சுத்தப்படுத்தி, பத்திரப்படுத்தி விட்டு மார்பகம் அறுத்து முழுதும் அகற்றப்படும்.




ரேடிகல் மாஸ்டெக்டமி:-

இந்த முறையில் மார்பகம் முழுவதும் அக்குளுக்குரிய லிம்ப் நோட்களும் சிறிது மார்பக சுற்று சதையும் அறுத்து அகற்றப்படும். புற்றுநோய் மார்பக சுற்றுச்சதையில் பரவியிருந்தால் மட்டுமே இந்த அறுவை சிகிச்சை நடத்தப்படும். பெரும்பாலான ஸ்டெக்டமி நோயாளிகளுக்கு அந்த அறுவை மருத்துவத்தின் போதோ அல்லது சில மாதங்களுக்குப் பிறகுச் செய்யப்படும் தனி அறுவை மருத்துவத்தின் போது மார்பக மீட்டுருவாக்கம் ( re construction) செய்யப்படும்.









மாடிபைட் ரேடிகல் மாஸ்டெக்டமி (Modified)
இந்த முறையில் மார்பகமும் கை அக்குளின் கீழுள்ள சில லிம்ப் நோட்களும் அறுத்து அகற்றப்படும். மார்பு சதைகளும், அப்படியே பத்திரமாக விட்டு வைக்கப் படுவதால் மார்பகச் சுற்று வெளித் தோற்றமும், கையின் ஆற்றலும் பாதிக்கப்படாது. எளிதில் சீராகி விடும். இதுதான் தரமான மாஸ்டெக்டமி முறையாகும். இதில் அக்குளின் கீழுள்ள லிம்ப் நோட்கள் அகற்றுவதுடன் கூடிய சாதாரண மாஸ்டெக்டமியும் ( மாஸ்எடக்டமியும் ) அடங்கும்.






கதிர்பாய்ச்சு மருத்துவ முறை (Radiation thoraphy)
ரேடியேஷன் தெரபியில் (இதை ரேடியோ தெரபி என்றும் கூறுவார்கள்) புற்றுநோய் அணுக்களை அழித்து அவை மேலும் வளராமல் தடுப்பதற்கு ஆற்றல் வாய்ந்த எக்ஸ்-ரேக்களைப் பயன் படுத்துவார்கள். இந்தக் கதிர்கள் சாதாரணமாக வெளியிலுள்ள ரேடியோ பொருட்களிலிருந்து வெளிவந்து இயந்திரத்தின் உதவியால் மார்பகத்தை நோக்கிப் பாய்ச்சப் படுவதால் வெளிப்புறக் கதிர்வீச்சு (External rerdiction) என்று கூறப்படும். கதிர் பாய்ச்சு மருத்துவ முறை இப்போது பெரும்பாலும் லிம்பெக்டமி உதவியுடன் இணைந்து தரப்படுகிறது. இது மெஸ்டெக்டமிக்குப் பிறகு பெரிதும் தேவைப் படுவதில்லை.
சிஸ்டமிக் டிரீட்மெண்ட்:-
உடலமைப்பு முழுதும் சார்ந்த இந்த மருத்துவத்தில் கீழ்க்கண்டவை அடங்கும்.
1. கீமோ தெரபி
புற்று அணுக்களை அழிக்க மருந்துகளைப் பயன்படுத்துவது இம்முறை மருத்துவமாகும். இது வழக்கமாக மருந்துகளின் கலவையாகும். இம்மருந்துகள் வாய் வழியாகவோ, ஊசியின் மூலமோ தரப்படும். கீமோ தெரபி உடலமைப்பு முழுதும் சார்ந்த மருத்துவ முறையாகும். ஏனென்றால் தரப்படும் மருந்துகள் இரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுதும் பயணம் செய்யும். இது சுழற்சியாக தரப்படும். அதாவது மருத்துவ காலம், தேறும் காலம் மீண்டும் மருத்துவ காலம் என்று விட்டு விட்டு ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும்.
2. ஹர்மோனல் தெரபி
புற்றுநோய் அணுக்கள் வளரத் தேவையான ஹார்மோன்களிடமிருந்து தள்ளி வைக்கும் மருத்துவ முறையாகும். இந்த மருத்துவத்தில் ஹார்மோன்கள் பணி செய்யும் முறையை மாற்றும் மருந்துகள் பயன்படுத்தப்படும். இதில் பெண் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் கருப்பையை அகற்றும் அறுவை மருத்துவமும் அடங்கும். அது உடலமைப்பு முழுதும் சார்ந்த மருத்துவ முறையாதலால் உடல் முழுதுமுள்ள புற்று நோய் அணுக்களை பாதிக்கும்.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "