...

"வாழ்க வளமுடன்"

02 பிப்ரவரி, 2010

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - 4

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மருத்துவமனையில் என்ன நடக்கும்?

கீழ்க்கண்டவை, நீங்கள் மாஸ்டெக்டமி செய்து கொள்பவராக இருப்பின் நீங்கள் பெறப் போகும் குறிப்புகள் விவரம்

தனிச் சிறப்பு வல்லுநரின் மருத்துவ நடை தனி மருத்துவ மனையில்


1. உங்களுடைய மருத்துவர் உங்கள் நோய் வரலாற்றைக் கேட்டறிவார். அறுவை மருத்துவத்தின் தன்மையையும் அதிலுள்ள சிக்கல்களையும் உங்களுக்கு விளக்குவார்.

2. நீங்கள் அறுவை மருத்துவத்திற்குத் தகுதியானவர் தானா என்பதைக் கண்டறிய உங்களின் இரத்தம் சிறிது பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

3. நீங்கள் 40 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருப்பின் கீழ்க்கண்ட பரிசோதனைகள் நடைபெறும். உங்கள் இதயத்துடிப்பைப் பரிசீலிக்க எலக்ட்ரோ கார்டியோகிராம் பரிசோதனையும், உங்களுடைய நுரையீரல், சரியாக உள்ளனவா என்பதை உறுதிப் படுத்த மார்புப்புற எக்ஸ்-ரேவும் எடுக்கப்படும்.

4. உங்கள் மருத்துவ தாதி மருத்துவமனையில் நீங்கள் எவ்வளவு காலம் தங்க வேண்டி வரும் என்பதையும், எவ்வளவு செலவாகும் என்பதையும் உங்களுக்குக் கூறுவாள்.

5. ஒரு மயக்க மருந்து வல்லுநர் மார்பக தாங்கு பிரிவிலிருந்து (breast support group) வந்து உங்களை மானசீகமாக அறுவை மருத்துவத்திற்கு ஆயத்தப் படுத்துவார்.


அனுமதி பெறும் நாளில்

1. நீங்கள் படுக்கைத் தொகுதிக்குள் (Ward) வந்ததும் வசதியாக தங்க மருத்துவ தாதி ஏற்பாடுகள் செய்து தருவாள். பின்னர் உங்களுடைய எடை, உடல் வெப்பநிலை, நாடித் துடிப்பு, சுவாசிக்கும் அளவு, இரத்த அழுத்தம் முதலியவற்றைப் பரிசீலிப்பாள்.

2. படுக்கைத் தொகுதியின் மருத்துவர் உங்கள் நோய் வரலாற்றைக் கேட்டறிந்து உங்களைப் பரிசோதிப்பார். அவர் உங்களுக்குச் செய்ய வேண்டிய சிகிச்சையின் தன்மை, சிக்கல்களை விளக்கி அறுவை செய்ய உங்கள் அனுமதியைப் பெறுவார்.

3. மயக்க மருந்து வல்லுநர் நீங்கள் அறுவை மருத்துவத்திற்கு தகுதியானவர் தானா என்று மதிப்பீடு செய்வார்.

4. ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் அறுவை மருத்துவத்திற்கு நீங்கள் தகுதியானவர் என்று உறுதிப் படுத்தாது இருப்பின் பரிசோதிக்க உங்கள் இரத்தம் சிறிது எடுத்துக் கொள்ளப்படும்.

5. பொதுவாக இரவு 12 மணிக்குமேல் நீங்கள் எதையும் உண்ணவோ, குடிக்கவோ கூடாது என்று உங்கள் மருத்துவ தாதி கூறுவாள்.

6. உங்கள் மருத்துவ தாதி உங்களுக்கு கீழ்க்கண்ட விவரங்களை தருவாள் .

7. நீங்கள் அறுவை மருத்துவ அறையில் இருக்கும் போது என்ன எதிர் பார்க்கப்படும்? உங்கள் அறுவை மருத்துவத்திற்கு பிறகு நீங்கள் விழித்த பின்னர் என்ன எதிர் பார்க்கப்படும்?



அறுவை நடைபெறும் நாள்

அறுவை மருத்துவத்திற்கு முன்னர்

1. நீங்கள் உணவோ, பானமோ எடுத்துக் கொள்ளக் கூடாதென்று நினைவுறுத்தப் படுவீர்கள்.

2. உங்களுடைய அறுவை மருத்துவத்திற்கு முன்னர் தலைக்கு ஊற்றிக் கொள்ளவும்.

3. அறுவைக்கு முன்னர் உங்களிடமுள்ள விலை மதிப்புள்ள பொருட்களை உங்கள் மருத்துவதாதியிடம் கொடுத்துப் பத்திரப்படுத்துமாறு கூறுவார்.

4. அறுவை மருத்துவ அறைக்குள் நீங்கள் போகுமுன்னர் அதற்குரிய கவுனை எடுத்து அணியுமாறு கேட்டுக் கொள்ளப் படுவீர்கள்.

5. மருத்துவ தாதி உங்களை உங்கள் படுக்கையிலிருந்து ஒரு தள்ளுவண்டியில் படுக்க வைத்து அறுவை மருத்துவ அறைக்குள் தள்ளிச்செல்வாள்.


அறுவை மருத்துவ அறையில்

உங்களுக்கு அதிகமாக குளிரெடுத்தால் மற்றொரு கம்பளியையும் தருமாறு கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.


அறுவை மருத்துவத்தின் பின்னால்

1. படுக்கைத் தொகுதியில் நீங்கள் கூர்ந்து கவனிக்கப் படுவீர்கள்.

2. அதிகமாக வடியும் இரத்தத்தை அல்லது நிணநீரை வடிக்க அறுவை நடக்கும் இடத்தில் ஒரு குழல் (Tube) உள்ளே வைக்கப்படும்.

3. மயக்க மருந்தின் பக்க விளைவாக நீங்கள் வாந்தியெடுக்கலாம் அல்லது அறுத்த இடத்தில் வலியை உணரலாம். அவற்றை உங்கள் மருத்துவ தாதியிடம் தெரிவியுங்கள். நீங்கள் மிகவும் அமைதியுடன் இருக்க அவர் மருத்துவ ஊசியைப் போடுவாள்.

4. மயக்க மருந்து தீருவதற்காக அறுவை மருத்துவம் நடந்து முடிந்த 6 மணி நேரம் வரை நீங்கள் படுக்கையில் படுத்திருக்க வேண்டும். எனினும் நீங்கள் நன்கு இருப்பதாக உணர்ந்தால் எழுந்து உட்காரவோ படுக்கையைச் சுற்றி மெல்ல நடக்கவோ ஊக்கிவிக்கப்படுவீர்கள்.

5. உங்கள் மருத்துவரின் குறிப்பின் படி உங்களுக்கு பானமோ, உணவோ தரப்படும்.



அறுவை மருத்துவம் நடந்து முடிந்த 1-6 நாட்களில்


1. அறுவை மருத்துவம் நடந்த இடத்தில் அளவான இயக்கம் இருப்பதை உணர்வீர்கள்.

2. குப்பியில் 20 மி.லி க்கும் குறைவான அளவு வடிநீர் இருந்தால் அது அகற்றப்படும்.

3. அறுவை நடந்த பக்கத்தில் உள்ள தோளும், கையும் ஆற்றலைப் பெறவும், அசைவைப் பெறவும் மார்பக ஆலோசகரோ அல்லது பிசியோ தெரபிஸ்டோ உங்களுக்குச் சில எளிய பயிற்சிகளைச் சொல்லிக் கொடுப்பார்.

4. அறுவை நடந்த இடத்தில் வலியிருந்தால் உங்கள் மருத்துவ தாதிக்குச் சொல்லுங்கள். அந்த வலியைப் போக்க அவள் உங்களுக்கு ஒரு மருந்து ஊசி போடக் கூடும்.

5. புற்று அணுக்கள் பரவியுள்ளனவா எனப்பதைப் பரிசீலிக்க ஒரு எலும்பு ஸ்கேன் எடுக்கவும், ஈரலில் அதிரொலி பரிசோதனைக்கும் நீங்கள் அனுப்பப்படுவீர்கள்.



மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பும் நாள்

1. உங்கள் மருத்துவர் உங்களைப் பரிசீலித்து நீங்கள் நலமாக இருந்தால் வீட்டிற்கு அனுப்புவார்.

2. உங்களுக்குத் தேவையான மருந்துகளை மருத்துவர் எழுதித்தருவார். அம்மருந்துகளை எப்படி பயன் படுத்த வேண்டுமென்பதை மருத்துவக் கடைக்காரர் விளக்குவார்.

3. உங்கள் மருத்துவ தாதி உங்களுக்கு ஒரு விடுப்புக் கடிதமும், மருத்துவ சான்றிதழும், மறுமுறை மருத்துவரை எந்த நாளில் சந்திக்க வேண்டும் என்ற விவரத்தையும், மருத்துவ மனையிலிருந்து நீங்கள் போகுமுன்னர் தருவாள்.

4. நீங்கள் மருத்துவ மனையில் இருக்கும் போது செய்யப்படாதிருந்தால் தீஷீஸீமீ sநீணீஸீ ( இவை என்ன என்று புரியலை. தவறுக்கு மன்னிக்கவும். ) செய்யவும், ஈரலில் அதிர்வொலிப் பரிசோதனை செய்ய வேண்டிய நாளையும் பிற விவரங்களையும் உங்களுக்குத் தெரிவிப்பாள்.

5. மருத்துவரின் தனி சிறப்பு தனியார் மருத்துவமனையில் அறுவை மருத்துவ மருத்துவரை நீங்கள் காண வேண்டிய நாள் விவரமும் தரப்படும்.

குறிப்பு:

வடிகால் குப்பி விலக்கப் படுவதைப் பொறுத்து நீங்கள் மருத்துவ மனையிலிருந்து அனுப்பப்படும் நாள் தீர்மானிக்கப்படும். நீங்கள் நலமாக இருந்தால் நீங்கள் வடிகால் குப்பியுடனேயே வீட்டிற்குப் போகலாம். அதை எவ்வாறு கவனித்துக் கொள்வது என்பது குறித்து மருத்துவ தாதி உங்களுக்கு கற்றுக் கொடுப்பாள். மருத்துவரது தனிச் சிறப்பு மருத்துவ மனையின் மருத்துவர் அவற்றை நீக்கலாமா என்பதையும் நிர்ணயிப்பார்.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "