...

"வாழ்க வளமுடன்"

09 ஜூலை, 2015

அதிக புரோட்டீன் வேண்டாமுங்க!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தாவர உணவு உண்ணும் ஒருவருக்கு தேவையான அளவு புரதம் ஒருபோதும் கிடைக்காது என்ற மூடநம்பிக்கை பரவலாகக் காணப்படுகின்றது. ஆனால், தாவர உணவு வகைகளே உடலுக்கு தேவையான சரியான அளவு புரதத்தை கொண்டுள்ளன என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், புரதம், அளவுக்கு சற்று மிஞ்சினாலும் கொழுப்பாக மாறி ஆரோக்கியத்திற்கு பாதகமாகிவிடும். கட்டுடல் பெறவும், உடல் எடை அதிகரிக்கவும் சிலர் மாமிச உணவே புரதத்தின் சிறந்த ஆதாரமாக கருதுகின்றனர். ஆனால், மாமிச உணவும், பால் பொருட்களும் கொண்டுள்ள புரதம், கொழுப்பின் வடிவமே என்பது பலரும் அறியாத ஒன்று.
இது, அளவுக்கு அதிகமான புரதத்தை கொண்டுள்ள உணவு முறை. இது, உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வகையான பிரச்னைகளைக் கொடுக்கும். சிறுநீரக உபாதை: அளவுக்கதிகமான புரதத்தை உட்கொள்ளும் போது, நாம் அளவுக்கு அதிகமான நைட்ரோஜென் வாயுவை உட்கொள்ளுகிறோம். இது சிறுநீரகத்தில் தேவையற்ற நைட்ரோஜென் வாயுவை, சிறுநீர் மூலம் வெளியேற்றும் வகையில் ஒரு அழுத்தத்தை உருவாக்குகிறது. இதுவே நாளடைவில், சிறுநீரகத்தின் செயல்பாட்டுக்கு ஊறு விளைவிக்கிறது. எனவே, சிறுநீரக பிரச்னைகள் உள்ளவர்கள், புரதம் குறைந்த உணவு முறையை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. அத்தகைய உணவு முறை, அளவுக்கதிகமான நைட்ரோஜென் அளவை குறைப்பதோடு மட்டுமல்லாமல், சிறுநீரகப் பிரச்னைகள் வராமல் தடுக்கவும் செய்கிறது.


புற்றுநோய்:

புரதமும் புற்றுநோய் உருவாக ஒரு காரணம் என்பது பலரும் அறியாத ஒன்றாகும். நார்ச்சத்து இல்லாத உணவுகள் மற்றும் மாமிச உணவுகளில் இருக்கும் இயற்கையான புற்றுநோய் காரணிகள் புற்றுநோய் உருவாக பெரும் காரணமாக விளங்குவதாக, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மாமிச உணவை உண்ணும் மக்கள், கோலான் புற்றுநோயின் தாக்கத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். அமெரிக்கப் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகத்தின், உணவு, ஊட்டச்சத்து மற்றும் புற்றுநோய் தடுப்பு பிரிவின் ஆராய்ச்சியில், மாமிச உணவு சில குறிப்பிட்டத்தக்க புற்றுநோய் வகைகளின் காரணியாக விளங்குவது தெரிய வந்துள்ளது.

மிருக புரதம் நிறைந்த உணவு, மனிதனின் செரிமானத்தில் அபாயகரமான சில விளைவுகளை உருவாக்குகின்றன. அவை, சிறுநீரகத்தை இயல்பு நிலைக்கு அதிகமான கால்சியத்தை சிறுநீர் மூலமாக வெளியேற்றச் செய்கிறது. இதன் மூலம், எலும்புகளுக்குத் தேவையான சுண்ணாம்புச்சத்து கிடைக்காமல் போவதால், எலும்புகள் எளிதில் தேய்மானத்திற்கு உள்ளாகின்றன. அபரிமிதமான கால்சியம் வெளியேற்றப்படுவதால், சிறுநீரகத்தில் கல் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது


***
By vayal
***



"வாழ்க வளமுடன்"
      

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "