...

"வாழ்க வளமுடன்"

30 ஜூன், 2015

டயட் கொழுக்கட்டை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்



எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் மாலை சிற்றுண்டி.மிகவும் சத்து வாய்ந்தது.


நீழிவு நோய்யாளிக்கு ஏற்ற உணவு.


தேவையான பொருட்கள்:


கோழ்வரகு ( ராகி ) மாவு : 2 கப்

வெல்லம் : 1/2 கப்

ஏலக்காய் : 3

உப்பு : 1/2 சிட்டிகை


செய்முறை:


1. மாவை கிண்ணத்தில் போட்டு அதில் உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.


2. வெல்லத்தை 2 கப் தண்ணிர் சேர்த்து கரைத்து அதை ( கரைந்த வெல்ல கட்டி நீரை ) வடிக் கொள்ளவும்.


3. அந்த வெல்லத் தண்ணிரை சூடாக ( உங்களால் சூடு தாங்கும் அளவுக்கு ) அந்த மாவில் ஊற்றி மத்தின் பின்புற‌ம் வைத்து கலக்கவும்.


4. கொழுக்கட்டை பிடிக்கும் பதம் வந்ததும்(மாவு) கொழுக்கட்டை பிடித்து இட்லி சட்டியில் வைத்து ஆவியில் வேக விடவும்.


5. 8 நிமிடம் கழித்து எடுத்து பரிமாரவும்.



குறிப்பு:


இந்த உணவு அனைவருக்கும் எற்ற உணவு. நீரிழிவு இருப்பவர்கள் வெல்லத்திற்க்கு பதில் ஈக்குவல் பவுடர் சேர்த்து செய்ய‌லாம்.


***
புத்தகத்தில் படித்தது.
***

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "