இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
நார்ச்சத்து அடங்கிய உணவு, நமது குடலுக்கு வலிமையை சேர்க்கிறது. இந்த நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு மருந்தாக அமைகிறது.
அது மட்டுமல்லாமல் மலச்சிக்கலை வருமுன் காக்க இந்த நார்ச்சத்து மிகவும் முக்கியமானது. இந்த செல்லுலோஸ் எனப்படும். நார்ச்சத்து உணவுடன் செல்லும் நீரை ஈர்த்து கொள்ளும் வேலையை செய்கிறது. இதனால் எப்பொழுதும் மலம் இளக்கமாகவே இருந்து, குடலில் எங்கும் தங்காமல் அவ்வப்போது வெளியேறிவிடுகிறது.
இந்த நார்ச்சத்தை உண்ண நாம் தவறிவிட்டால், மலம் கெட்டிபட்டு காலைகடனை தினமும் செய்யமுடியாமல் இரண்டு (அ) மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் மலம் கழிக்க முடியும். மலம் கெட்டிபடுவாதல் சுலபமாக மலத்தை வெளியேற்ற முடியாமல், தேவைக்கும் அதிகமான சக்தியை கொடுத்து முக்கி, முனகி மலத்தை வெளியேற்றுவதால் மலவாயில் உள்ள இரத்த குழாய்கள் அதிக இரத்த ஒட்டத்தை கொடுக்க நேரிடுகிறது.
இதனால் நாளடைவில் அந்த இரத்த குழாய்களுக்கு இரத்த தேக்கம் ஏற்பட்டு, அந்த இரத்த குழாய்கள் வீக்கம் அடைந்து நாளடைவில் வெடித்து விடுகின்றன. இதை தான் மூலநோய் என்று சொல்கிறோம்.
இதனால் சரிவர உட்கார முடியாமை, அதிக இரத்தபோக்கு, அடிக்கடி மலம் கழிக்க வேண்டும். போன்ற உணர்வு, இரத்த சோகை, உடல் மற்றும் மனச்சோர்வு, பசியின்மை, போன்றவை ஏற்படுகின்றன. இந்த மூலநோய் முற்றிவிடாத இரத்த போக்கால் குடல்களில் சோர்வு ஏற்பட்டு, குடல்கள் வறண்டு குடல்புற்று நோயாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
ஒரு சாதாரண விஷயமான இயற்கையில் கிடைக்கும் பழங்கள், தானியங்கள் மற்றும் கீரைகளை குறிப்பாக நார்சத்து உள்ள தோல்பகுதியை நீக்காமல் உண்ண தவறுவதால் ஏற்படும் விளைவுகள் பலப்பல.
எனவே நார்சத்தின் பயன்களை அறிந்து அவற்றை உணவில் சேர்த்து பலன் பெறுவோம். குறிப்பாக தினமும் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கத்தை கொண்டாலும் கூட 50% மலச்சிக்கலை தவிர்க்கலாம். பொதுவாக நாம் அனைவரும் வீட்டில் செய்யும் தவறுகள் பலப்பல.
அவை முதலில் அரிசி பொதுவாக தவிடு நீக்கிய அரிசியை தான் நாம் வாங்குகிறோம். தவிடு நீக்கிய அரிசியின் மேல் உமி என்னும் நார்ச்சத்து படர்ந்து காணப்படும். இது மிக மிக முக்கியமானது. அரிசியை கழுவுவதின் மூலம் 50% உமியை நாம் இழந்து விடுகின்றோம். அரிசியை ஊற வைத்து பின்பு கழுவி சமைப்பதனின் மூலம் 80% நார்சத்தை நாம் இழந்து விடுகின்றோம். சமைத்த சாதத்தை வடிப்பதின் மூலம் 100% நார்சத்தை நாம் இழந்து விடுகின்றோம். மீதம் நாம் உண்பது ஒன்றுமே இல்லாத சாதம். அதை சாப்பிடுவதின் மூலம் ஒரு பயனுமில்லை.
இதற்கும் மேலாக ஒரு படி மேலே போய், ஒரு சிலர் தவிடு நீக்கிய அரிசியை பாலீஷ் போடுவதின் மூலம் உமி என்கிற அந்த நார்சத்தை 100 முதலிலேயே இழந்து விடுகின்றனர். பிறகு சமைத்து சாப்பிடுவதால் சக்தி, நேரம் போன்றவை வீணாவதை தவிர வேறு ஒரு பலனும் நம்மை வந்தடைவதில்லை. எனவே அரிசியை பாலீஷ் போடுவதை அவசியம் தவிர்க்க வேண்டும்.
மேலும் அரிசியை ஒரு முறை கழுவிவிட்டு, இரண்டாவது முறை ஊறவைக்கும் தண்ணீரோடு அரிசியை வேக வைத்து, கஞ்சி வடிக்காமல் சாதம் செய்து சாப்பிட்டால் அரிசியிலுள்ள 80 நார்ச்சத்தை நாம் பெறலாம் என்பதில் சந்தேகமில்லை.
மேற்கூரிய தவறுகளை திருத்தி கடைபிடித்தால் வேண்டிய நார்சத்தை பெற்று நலமோடிருக்கலாம்.
***
thanks உ நலம்
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக