...

"வாழ்க வளமுடன்"

16 ஜனவரி, 2012

நார்சத்து தான் நம் அனைவருக்கும் உயிர்சத்து

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


                             
நமது உணவு முறை தவறுகளாலேயே பல நோய்கள் தோன்றுகின்றன. ஆகவே நமது உணவுகள் பற்றியும், அதன் தன்மைகளை பற்றியும் தெரிந்து கொண்டால் தான். அதனை நாம் பயன்படுத்த முயல்வோம். இல்லையேல் தேவையானவற்றை நீக்கியும், தேவையற்றவற்றை உபயோகித்தும் நோய்களுக்கு ஆளாகி விடுவோம். உணவுகளில் மிகவும் முக்கியமானது நார்ச்சத்து. இது பல நோய்கள் வராமல் தடுத்து காப்பாற்றவல்லது. இந்த நார்ச்சத்து மிகவும் அதிகமாக பழங்கள், காய்கள், கீரைகள், தானியங்கள் முதலியவற்றில் தான் அதிகமாக உள்ளது. இதனைப்பற்றி நாம் தெரிந்துக் கொண்டு, பயன்படுத்தி நோய்கள் நீங்கி நலமுடன் வாழ்வோம்.                     பழங்களிலும், காய்கறிகளிலும், தானியங்களிலும், கீரைகளிலும் மிக எளிதில் கிடைக்கும் உணவுப் பொருளாக இருப்பது நார்ச்சத்து ஆகும். பழங்கள், காய்களில் அதன் மேல் தோல்களிலும், தானியங்களில் உமிகளிலும் உள்ளது. தண்ணீர் உட்பட மிக எளிதில் கிடைக்கும். எந்த, பொருட்களையும் நாம் துதிப்பதுமில்லை, மதிப்பதுமில்லை உமி என்பது செல்லுலோஸ் என்னும் நார்சத்து ஆகும். தவிடு என்பது தையமின் ஆகும். தவிட்டில் ஏராளமான வைட்டமின்கள் உள்ளது என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் செல்லுலோஸ் பற்றி நாம் கண்டு கொள்வதில்லை. தற்போது தான் செல்லுலோஸ் என்னும் நார்ச்சத்து, நமது உடலுக்கும், குடலுக்கும் ஒர் இன்றியமையாத வேர் சத்து என்று புரிந்துக் கொண்டுள்ளனர். இருப்பினும் இன்னும் இதனை யாரும் பயன்படுத்துவதில்லை.


பல சாலிக்கு பாலிசாக்ரைடுகள் கூட்டு சர்க்கரை உடலுக்கு சக்தி தரும் உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் முக்கியமானவை. சக்தி மாற்றத்திற்கு நமது உடல், கார்போஹைட்ரேட்டைத் தான் தேர்ந்தெடுக்கிறது. இது இல்லாத போதே புரதமும், கொழுப்பும் எரிக்கப்படுகின்றன. இது நமது உடலில் கீழ்க்கண்டவாறு மாற்றப்படுகின்றன.

பாலி சாக்ரைடுகள் ஸ்டார்ச்சு, டெக்ஸ்டிரின், கிளைகோஜன், செல்லுலோஸ்

டைசாக்ரைடுகள் இரட்டை சர்க்கரை சுக்ரோஸ், மால்டோஸ், லாக்டோஸ்

மோனோ சாக்ரைடுகள் ஒற்றை சர்க்கரை குளூக்கோஸ், பிரக்டோஸ், காலக்டோஸ் ஆகவும் மாற்றப்படுகின்றன

                            நாம் பாலிசாக்கரைட்டுகளை உண்டு, அவைகள் நமது சீரண நீர்களால் டைசாக்கரைட்டுகளாகவும், மோனோ சாக்கரைட்டுகளாகவும், மாற்றப்படுவதே சரியான வழியாகும். அவ்வாறில்லாமல், மோனோ சாக்கரைட்டுகளையே நாம் உண்போமானால் செரிமான பாதையில் தடைகள் ஏற்படும். ஆரோக்கியமும் கெடும்.
 
 


நார்சத்து என்றால் என்ன?

 செல்லுலோஸ் பாலிசாக்கரைடுகளில் சேர்ந்தே உள்ளது. இது தாவரங்களில் மட்டுமே காணப்படும். நார்ப்பொருளாகும். தாவரங்களில் உள்ள உயிரணுக்களின் சுற்றுச்சுவரில் இந்த நார்ச்சத்து இருப்பதால் தான்,


தாவரங்களில் மட்டும் இது காணப்படுகிறது. விலங்குகளின் செல்களில் சுற்றுச்சுவர் கிடையாது. அதனால் இது, சீரண நீர்களால், சீரணிக்கப்படுவதில்லை. சீரணத்திற்குப் பிறகும் மாற்றம் அடையாது அப்படியே உள்ளது.

நார்ச்சத்து உள்ள உணவுப் பொருட்கள் முழு தானியங்கள், பயிறுகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் ஏராளமான செல்லுலோஸ் அடங்கி உள்ளது.


தானியங்களையும் பயிறுகளையும் முதல் நாள் ஊற வைத்து, இரண்டாம் நாள் முளை கட்டுகின்ற போது நார்ச்சத்து பெருக்கமடைகிறது.


முருங்கக் கீரைகளிலும், அகத்திக்கீரையிலும் இது நிரம்ப உண்டு. காய்கறிகளில் குறிப்பாக அவரை இனங்களில் இதற்கு குறைவில்லை. மாமிச உணவுகளிலும், தோல் நீக்கப்பட்ட தானியங்கள், பருப்புகள் மற்றும் கிழங்குகளில் இது இல்லை.

 
***
thanks   உ ந
***                                                                                    

"வாழ்க வளமுடன்"

                                               

இந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "