...

"வாழ்க வளமுடன்"

06 ஆகஸ்ட், 2011

உணவில் கட்டுப்பாடு எதற்காக?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


தற்காலத்தில் யாரை உணவு அருந்தும் படி கேட்டாலும் நாம் உணவுக் கட்டப்பாட்டில் இருக்கிறோம் என்பார்கள். இது எதற்காக அவர்கள் தங்களது உடல் எடையை குறைப்பதற்காக தானே.பத்தியமான உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் மட்டும் உடலின் எடை அதிகரிப்பதனை கட்டுப்படுத்த முடியாது.உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவோரின் உடல் எவ்வாறு பருமனடைகின்றது என்பதனை பற்றி எப்போதாவது சிந்தித்து பார்த்தீர்களா?
உண்மையில் உடல் எடையை குறைப்பதற்கு உணவுக் கட்டுப்பாடு மட்டும் போதுமானதல்ல. பத்தியமான உணவுகள் என வகையீடுப்படுத்தப்பட்ட பல உணவுப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பாதகமானது என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குறிப்பாக சிப்ஸ், கோலா வகைகள் போன்றன உடல் ஆரோக்கியத்திற்கு உசிதமானதல்ல. கட்டுப்பாடான உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதனாலும் உடல் உடை உயர்வடைகின்றது. நாம் அனைவருமே கட்டழகான, எழிலான தோற்றமுடைய உடல் அமைப்பை பெற்றிருக்க வேண்டுமென விரும்புகின்றோம்.எனினும் வேலைப்பளு, அழுத்தம் மற்றும் வேறும் பொறுப்புக்கள் காணமாக எம்மால் உடற்பயிற்சி செய்வதற்கு போதியளவு நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடிவதில்லை. இதனால் அநேகமானவர்கள் உணவுக் கட்டுப்பாட்டு பழக்கங்களை பின்பற்றுவதில் அதிக நாட்டம் காட்டுகின்றனர்.


ஒன்றிரண்டு மணித்தியாலங்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்வதனை விடவும் வழமையாக உட்கொள்ளும் உணவு வகைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது சுலபமானது. உணவுக் கட்டுப்பாடு தொடர்பான பிழையான கருதுகோள்களினால் முன்பு இருந்ததை விடவும் இவர்கள் அதிகளவு பருமனடைகின்றனர்.


பல்வேறு உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் உடலின் எடையை குறைக்க முடியும் என கருதுகின்றனர். எனினும் அவற்றின் கலோரிப் பெறுமதியை உன்னிப்பாக அவதானித்தால் வழமையாக உட்கொள்ளும் உணவுப் பொருட்களையும் விடவும் அதிகமானவை என்பது புலனாகும்.


உணவுப் பொருட்கள் கலோரி அளவுகள் பற்றி தெரிந்து கொள்வதற்கு சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பத்திய பானங்கள் Diet Drinks: குறைந்த கலோரியுடைய பானங்களில் இனிப்புச் சுவையூட்டிகளாக பயன்படுத்தப்படும் செயற்கைப் பொருட்கள் உங்களின் உடல் எடையை மேலும் அதிகரிக்கக் கூடும் என அமெரிக்க ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


இந்த பானங்களில் காணப்படும் இனிப்புச் சுவையூட்டிகள் அதிக பசியை ஏற்படுத்தி நீங்கள் அதிகமாக உணவு உட்கொள்ள வழிவகை செய்வதாகத் தெரிவித்துள்ளனர். சிறந்த உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு சுத்தமான நீர் மிகவும் உசிதமானது. எனினும் சுவை விரும்பினால் இயற்கையான பழச்சாறுகளை சுத்தமான நீருடன் கலந்து பருக முடியும்.


பழச்சாற்றை விடவும் நீரின் அளவை அதிகரிப்பதன் மூலம் கலோரி அளவை வரையறுக்கலாம். தேசிக்காய் சாறு உணவு சமிபாட்டுக்கு உதவியாக அமையும். சிரீயல் பார் காலை உணவு: குறைந்தளவு கலோரிகளைக் கொண்ட சீரியல் பார்கள் காண்போரின் கவனத்தை ஈர்க்ககக் கூடியவை. இவை அநேகமாக 90 கலோரிகளை மட்டுமே கொண்டிருக்கும்.


எனினும் இந்த வகை சீரியல் பார்களை காலை உணவாக உட்கொள்ளும் பழக்கத்தை முடிந்தால் தவிர்க்கவும். இந்த வகை சீரியல் பார்களுடன் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் சீனி போன்றன சேர்க்கப்பட்டிருக்கும். இவை உங்களது உடலுக்கு உடனடி சக்தியை வழங்கும் அதேவேளை, குருதியின் குளுகோஸ் அளவை அதிகரித்துவிடும். இதன் காரணமாக உங்களுக்கு உடல் சோர்வும், பசியும் ஏற்படலாம்.


இந்த சிறிய சீரியல் பார்கள் ஒருவரின் பசியை போக்கக் கூடியதல்ல. கலோரிப் பெறுமதியை வரையறுப்பதற்கு: பொறுபொறுப்பான உணவு வகைகளை விரும்புவராக இருந்தால் நிலக்கடலை போன்ற பருப்பு அல்லது கொட்டை வகைகளை உட்கொள்ள முடியும்.


பருப்பு அல்லது கொட்டை வகைகளை உட்கொள்வதன் மூலம் அதிகளவு புரதச் சத்து கிடைப்பதுடன் ஓர் நிறைவான அனுபவம் ஏற்படுகின்றது. ஓட் கேக்: ஓட் கேக் அல்லது புல் அரிசி கேக் வகைகள் நார்ச் சத்து அதிகமான சிறந்த ஆரோக்கியமான உணவாகும்.


எனினும் அநேகமான ஓட் கேக் வகைகள் ஒவ்வொன்றும் 50 கலோரியைக் கொண்டது. ஆறு துண்டுகளைக் கொண்ட பொதியாக சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கேக் வகைகள் சுவையானவை என்பதால் முழு பக்கட்டையுமே முடித்து விடத் தோன்றும்.


இவ்வாறு ஆறு ஓட் கேக் துண்டுகளை உட்கொண்டால் 300 கலோரி சக்தியை உடல் பெற்றுக்கொள்ளும். எவ்வாறெனினும் 300 கலோரி சக்தியுடைய கோழி இறைச்சி அல்லது மீன் சன்ட்ஜ்விஜ் ஒன்றை உட்கொள்ளும் திருப்தி கடைக்காது. பீனாட் பட்டர் அல்லது சீஸ் ஆகியவற்றுடன் ஓட் கேக் உட்கொண்டால் கலோரியின் அளவு இரட்டிப்பாக உயர்வடையும்***
thangs tags
***"வாழ்க வளமுடன்"

இந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "