...

"வாழ்க வளமுடன்"

06 ஆகஸ்ட், 2011

மயக்கம் வந்தால் உடனடிச் சிகிச்சை முறைகள்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மூளையில் போதுமான ரத்த ஓட்டம் இல்லாதபோது மயக்கம் உண்டாகும். பயப்படுவதாலும், கெட்ட செய்தியைக் கேட்பதாலும், திடீர் தாக்குதல், விபத்தாலும், பயங்கரமான காட்சியைக் காண்பதாலும், வியாதிகளாலும், களைப்பு, உஷ்ணத்தினாலும், நீண்ட நேரம் நிற்பதினாலும் மயக்கம் ஏற்படும்.


அறிகுறிகள்

1. திடீரென்று உணர்ச்சியற்றுப் போவார். தலை கிறுகிறுக்கும். தடுமாற்றம் ஏற்படும்.


2. முகம் வெளுத்துப் போகும்.


3. தோல் குளிர்ச்சியடைந்து, பிசுபிசுப்பாகும்.


4. நாடித் துடிப்பு பலவீனமாகவும், மெதுவாகவும் இருக்கும்.


5. மூச்சு லேசாக இருக்கும்.


***

உடனடிச் சிகிச்சை முறைகள்:

* ஒருவருக்கு மயக்கம் ஏற்படுவதைப் போலத் தோன்றினால் சீக்கிரமாய் தலையைக் கீழே குனிய வைக்க வேண்டும். குறிப்பிட்ட நபர் உட்கார்ந்திருந்தால் முழங்கால்களுக்கு இடையே தலையைத் தாழ்த்தி வைக்க வேண்டும். அல்லது தாழ்த்திப் படுக்க வைக்க வேண்டும்.


* போதுமான தூய காற்றுப் படும்படி செய்ய வேண்டும்.


* கழுத்திலும், இடுப்பிலும், மார்பிலும் சுற்றியுள்ள ஆடைகளைத் தளர்த்திவிட வேண்டும்.


* மயக்கம் அடைந்தவர் மறுபடி தன்னிலைக்கு வரும்போது அவரை நிமிர்த்தி தண்­ணீர் அல்லது ஏதாவது ஒரு பானத்தை சிறிது சிறிதாகக் கொடுக்க வேண்டும்.



***
thanks tags
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "