...

"வாழ்க வளமுடன்"

23 ஜூலை, 2011

கருவுருதலும் கருவின் வளர்ச்சியும் - Embryo and Fetus

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


பெண்ணின் கரு முட்டை:

ஒரு பெண்ணானவள், குழந்தையாகப் பிறக்கும்பொழுதே ஒரு மில்லியன் முட்டைகளை உருவாக்கும் கரு அணுக்களை உடையதான இரு சூலகங்களுடன் பிறக்கின்றது. கருவானது ஒரு பருவமடைந்த பெண்ணில் ஒரு பாதாம் பருப்பு விதையினைப் (almond-sized) போன்ற இரு சூலகங்களில் அல்லது கருவறைகளில் உற்பத்தியாகின்றன. இந்த சூலகங்கள் இரண்டும் கர்ப்பப்பைக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக அமைந்துள்ளது.ஒரு பெண் பருவமடைந்தது முதல், மாதவிடாய் நிற்கும் காலம் வரை, ஒவ்வொரு மாதமும் சுமார் 20 கரு முட்டைகள் தயாராகி வளர்ச்சி அடைய ஆரம்பிக்கின்றன. ஆனால் அவற்றுள் பெரும்பாலும் ஒன்றோ அல்லது சிலவே மாத்திரம் முதிர்ச்சி அடைந்து வெளிவருகின்றன. வெளிவரும் முட்டைகள் பலோப்பியா குளாய் வழியாக கர்ப்பப்பைக்கு செல்லுகின்றது. கருக்கட்டல் பலோப்பியா குளாயினுள்ளே நடைபெறுகின்றது.இந்தக் கருமுட்டைக்கு தானாகவே நகரும் திறன் கிடையாது. சினைப்பையிலிருந்து வெளிவந்த முட்டை கருப்பைக் குழாயினால் (பலோபியன் குளாயினால்) உறிஞ்சிக் கொள்ளப்பட்டு, கருப்பைக் குழாயின் தசை அசைவுகளால் மெல்ல மெல்ல முன்னேறி கருப்பையினுள்ளே நுழைகிறது.இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் விந்தணு வந்து அந்த கருமுட்டையோடு சேரும் வாய்ப்பு உருவானால் மட்டுமே அந்த கருமுட்டை சினைப்பட்டு தொடர்ந்து உயிர்வாழ முடியும். கரு முட்டையை கருவாக்கும் (சினைப்படுத்தும்) ஆணின் விந்து உயிரணு வந்துசேரும் வாய்ப்பு ஏற்படாவிடில், அந்த முட்டை கருப்பையிலேயே செயலிழந்து அழிந்து போகிறது. அவை கழிவாக மாதவிடாயின்போது வெளியேறிவிடுகிறது.பெண்ணின் சினைப்பையிலிருந்து உருவாகும் முட்டையுடன் இந்த விந்தணு (உயிரணு) இணையும்போதுதான் புதிய சிசுவுக்கான கரு உருவாகும். இதனை கருக்கட்டல் என அழைக்கப்படும். கருக்கட்டல் நிகழாதுவிடின் பெண்ணில் உருவாகிய கருமுட்டை அழிந்துவிடும். அதுவே மாதவிடாய் என கழிவாக வெளிவருகின்றது.

ஆணின் விந்தணுக்கள்:


உடலுறவின்போது ஆண் குறியில் இருந்து ஒருமுறை வெளியேறும் 2-4மிலி விந்து நீரில் சுமார் 100 மில்லியனிலிருந்து 300 மில்லியன் விந்தணுக்கள் இருக்கும். இந்த விந்து நீரில் உள்ள விந்தணு 0.5 மி.மீ நீளம் உடையது. இந்த விந்தணுக்கள் ஒரு தலைப்பகுதியும் நீண்ட வால் பகுதியும் கொண்டவை. இந்த வால்பகுதியை அசைத்து அசைத்து விந்தணுக்களால் மிக மிக வேகமாக நகர்ந்து செல்ல முடியும். ஆணின் உடலில் இருந்து வெளியேறிய இந்த விந்தணுக்கள் சுமார் 72 மணி நேரம் வரையில் உயிரோடிருக்கும்.உடலுறவின்போது வெளிவரும் விந்தணுக்கள் பெண்ணின் பிறப்புறுப்பின் வழியே நீந்திக் கருப்பையின் வாய்ப் பகுதியை அடைந்து அதன் உள்ளே புகுகின்றன. 100 - 300 மில்லியன் விந்தணுக்கள் ஒருதடவையில் வெளி வந்தாலும் முட்டை கருவுற ஒரே ஒரு விந்தணு மட்டுமே தேவையாகின்றது.
கருவுறுதல் அல்லது சினைப்படுதல்:


கருமுட்டையின் மேற்பகுதிச் சுவர்கள் கெட்டியாக இருக்கும். விந்தணுக்கள் எளிதில் அதனுள் புகுந்துவிட முடியாது. ஆனால் ஆணின் விந்தணுக்களின் தலைப்பகுதியில் ஒருவித வேதிப்பொருள் சுரக்கும். இது கருமுட்டையின் மேற்பரப்பைக் கரைத்து மிக மிக நுண்ணிய ஒரு துளையை உண்டு பண்ணி, அந்தத் துளையின் வழியாக விந்தணு உள்ளே நுழைந்துவிடும்.பல மில்லியன் விந்தணுக்கள் ஒன்றோடொன்று முட்டி மோதி கருமுட்டையின் உள்ளே நுழைய முயற்சி செய்யும். கடைசியாக ஒன்றே ஒன்று மட்டுமே வெற்றிவாகை சூடும்.உள்ளே நுழைந்த விந்தணு கருமுட்டையின் குரோமோசோம்களோடு இணைந்துவிடும். இதையே முட்டை கருவுறுதல் என்கிறோம். இதுதான் FERTILIZED EGG அதாவது கருமுட்டையாகும்.கருவுற்ற முட்டையிலுள்ள குரோமோசோம்கள் இரண்டிரண்டாகப் பிரிந்து புதிய செல்கள் உருவாகும். ஒன்று இரண்டாகி, பின்னர் 4, 8, 16, 32, 64 என பல்கிப்பெருகும். இந்த கரு வளரும் நிலைக்கு வந்துவிடும், இது இரண்டு வாரங்களுக்குட்பட்ட வளர்ச்சியாகும்.இரண்டு மாதம் வரை வளர்ச்சியடைகின்ற இந்த கட்டத்தை எம்பிரையோ Embryo என்று அழைக்கப்படும். இதன் பிறகு கருவை சிசு Fetus என்று கூறுகின்றோம். இந்த நிலையில் ஒரு புழுவைப்போன்று 1 அங்குல அளவு தான் இருக்கும். அதனால் தான் நமது பெண்கள் ஏதேனும் புழு, புச்சி உண்டாகி இருக்கிறதா? என்று கேட்பார்கள். இதற்கு மேலும் வளருகின்ற கருவைத் தான் குழந்தை என்று அழைக்க இயலும்.பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா?


ஒரு பெண், கருத்தரிக்கும் போது அது ஆண் குழந்தையாகவோ அல்லது பெண் குழந்தையாகவோ ஆவதற்கு அவளுடைய கணவனின் விந்தணுவே காரணமாகின்றது. பொதுவாக பெண்ணின் சினை முட்டையில் X என்ற குரோமோசோம் மட்டுமே இருக்கும், ஆணின் விந்தணுவில் X அல்லது Y என்ற குரோமோசோம் இருக்கும். இதில் X என்ற குரோமோசோம் பெண்ணை உருவாக்கும். Y என்ற குரோமோசோம் ஆணை உருவாக்கும்.X என்ற குரோமோசோம் உடைய பெண்ணின் சினை முட்டையுடன் X என்ற குரோமோசோம் உடைய ஆணின் விந்தணு சேர்ந்தால் அது X-X என்ற ஜோடியைக் கொண்ட செல் உருவாகி அதன் மூலம் பெண் குழந்தையாக உருவாகின்றது. (X-X என்ற குரோமோசோம் ஜோடியைக் கொண்ட செல் பெண் குழந்தையை உருவாக்கும் தன்மையைக் கொண்டது)X என்ற குரோமோசோம் உடைய பெண்ணின் சினை முட்டையுடன் Y என்ற குரோமோசோம் உடைய ஆணின் விந்தணு சேர்ந்தால் அது X-Y என்ற ஜோடியைக் கொண்ட செல் உருவாகி அதன் மூலம் ஆண் குழந்தையாக உருவாகின்றது. (X-Y என்ற குரோமோசோம் ஜோடியைக் கொண்ட செல் ஆண் குழந்தையை உருவாக்கும் தன்மையைக் கொண்டது)பெண்ணின் சினை முட்டை வெறும் X என்ற குரோமோசோமை மட்டுமே உடையதாக இருக்கிறது. ஆனால் பெண்ணின் கர்ப்பப் பையினுள் செலுத்தப்படும் விந்தணுக்களில் X என்ற குரோமோசோம்களைக் கொண்ட ஆண் விந்தணுக்களும், Y என்ற குரோமோசோம்களைக் கொண்ட ஆண் விந்தணுக்களும், கோடிக்கணக்கில் உள்ளன. ஆனால் ஆணின் ஒரே ஒரு விந்தணு மட்டுமே பெண்ணின் சினை முட்டையுடன் சேர்ந்து கருவாக வளர்கின்றது. பெண்ணின் சினை முட்டையுடன் சேர்ந்த ஆணின் விந்தணு X என்ற குரோமோசோம் உடையதாக இருந்தால் அது பெண் குழந்தையாகவும், பெண்ணின் சினை முட்டையுடன் சேர்ந்த ஆணின் விந்தணு Y என்ற குரோமோசோம் உடையதாக இருந்தால் அது ஆண் குழந்தையாகவும் உருவாகிறது.கர்ப்பக் கோளறையில் (கர்ப்பப்பையினுள்) செலுத்தப்படும் ஆணின் இந்திரியத் துளியே பெண் குழந்தையாகவோ அல்லது ஆண் குழந்தையாகவோ உருவாகுவதற்கு காரணமாக அமைகின்றது, பெண்ணின் சினை முட்டையால் அல்ல.குழந்தை தன் தாயின் கருவறையில் வளர்ந்துக் கொண்டிருக்கும் காலக் கட்டங்களில் அவனுடைய அனைத்து உறுப்புகளுமே திடீரென தோன்றிவிடுவதில்லை. ஓவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு காலக்கட்டங்களில் வளர ஆரம்பித்து முழு வளாச்சியை அடைகின்றது.மனித கருவளர்ச்சிகளின் நிலைகளை கருவுறுதல் முதல் குழந்தை பிறக்கும் வரை ஆராய்ந்தறிந்த கருவியலின் நவீன ஆய்வாளாகள் பின்வருமாறு விளக்குகிறார்கள்:பெண்ணிற்கு மாதவிடாய் வெளிவந்த 14 ஆம் நாள் சினைமுட்டை ஒன்று சினைப்பையிலிருந்து வெடித்து பலோப்பியன் டியூப் என்ற குழாய்க்கு வருகிறது. இந்த சினை முட்டை 1/175 அங்குலம் அளவுக்கு மிகச் சிறியதாகும்.ஆண், பெண் சேர்க்கையின் போது, ஆணின் உயிரணுவும் இந்த பலோப்பியன் டியூப் என்ற குழாய்க்கு வந்து சேர்கின்றது.. ஆணின் உயிரணுவும், பெண்ணின் முட்டையும் சேர்ந்து கருவுறுதல் இங்கு தான் (பலோப்பியன் டியூப்) நடைபெறுகிறது. கருவுற்றபின் ஆணின் உயிரணுவும், பெண்ணின் சினைமுட்டையின் கரு (Nucleus) வும் சோந்த ஒரு பரிபூரண செல் ஆக அந்த மனித கரு மாறுகிறது. இதற்கு ‘Zygote’ என்று ஆங்கிலத்தில் கூறுகின்றார்கள்.கருவுற்ற 12 மணி நேரம் வரை ஒரே செல் (Single Cell) ஆக இருந்த அந்தக் கரு அதற்கு பிறகு 30 ஆவது மணி நேரத்திற்குள், ஒரு செல் இரண்டு செல்களாக மாறுகின்றது.

கருவுற்ற 45 ஆவது மணி நேரத்திற்குள் அந்த இரண்டு செல்கள் நான்கு செல்களாகின்றது. இவ்வாறு அந்த செல்கள் இரட்டிப்பாகிக் (Cell Division) கொண்டே சென்று, 72 மணி நேரத்திற்குள் அவைகள் 16 செல்களாகின்றது.கருவுற்ற 4 வது நாள் இந்தக் கரு ‘blastocyst’ என்ற நிலைக்கு வருகிறது. இந்த நிலையில் தான் cell differentiation என்ற நிகழ்வு ஏற்பட்டு தனித்தனி தன்மைகளையுடைய செல்கள் தோன்றுகிறது.அதாவது இரத்தத்தை உருவாக்கும் அணுக்கள், தோல்களுக்கான அணுக்கள், தசைகளுக்கான அணுக்கள், நரம்புகளுக்கான அணுக்கள் போன்ற தனித்தனியான குணங்களையுடைய செல்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன.ஒரு செல்லிலிருந்து தோன்றிய அந்தக் கரு தொடர்ந்து செல் பிரிதல் என்ற நிகழ்ச்சியின் மூலம் தொடர்ந்து இரட்டிப்பாகிக் கொண்டே வந்து குழந்தை பிறக்கும் போது அக்குழந்தை 2 பில்லியனுக்கும் அதிகமான செல்களையுடையதாக இருக்கிறது.‘blastocyst’ என்ற நிலையில் பலோப்பியன் டியூப் (fallopian tube)-ல் உள்ள அந்த மனிதக் கரு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து 8 அல்லது 9 ஆவது நாட்களில் கர்பப்பையை வந்தடைந்து, அதன் சுவர்களில் (uterus lining) ஒரு அட்டையைப் போன்று ஒட்டிக் கொண்டு தொங்குகிறது. இப்போது அந்தக் கரு ‘embryo’ என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது.கருவுற்ற 15 முதல் 21 ஆம் நாட்களில் கருவைச் சுற்றியுள்ள ‘chorianic layer’ என்ற உறைக்கு உள்பகுதியில் தோன்றிய ‘yolk sac’ என்ற பகுதியிலிருந்து கருவிற்குத் தேவையான ‘blood cells’ உற்பத்தியாகி பின்னர் இரத்த நாளங்கள் (blood vessels) தோன்றுகிறது.இதே நேரத்தில் இந்த கருவைச் சுற்றியுள்ள இந்த சவ்வுக்கு வெளிப்புறம் Lucunae என்ற பகுதியில் தாயின் இரத்த நாளங்கள் தோன்றுகிறது. இதிலிருந்தே கருவிற்குத் தேவையான ஆக்ஸிஜனும், சத்துப் பொருட்களும் அளிக்கப்படுகின்றன.

கருவுற்ற 18 ஆம் நாள் கருவின் உட்புறம் தோன்றிய இரு குழாய்கள் ஒன்றினைந்து பின்னர் அவைகள் நகர்ந்து இருதயம் இருக்க வேண்டிய பகுதிக்கு வருகிறது. இதுவே பின்னர் இருதயமாக வளாகின்றது.கருவுற்ற 21 ஆம் நாள், கருவின் உட்புறம் தோன்றிய இரத்த நாளங்கள் placenta வாக வளாச்சியுற்று (தொப்புள் கொடி என்றும், நஞ்சுக் கொடி என்றும் அழைக்கும்) அவைகள் கருவைச் சுற்றியுள்ள சவ்வுக்கு (blood barrier) வெளிப்புறமாக உள்ள தாயின் இரத்த நாளங்களிலிருந்து தனக்குத் தேவையான சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் (சுவாசக்காற்று) எடுத்துக் கொள்கிறது.கவனத்தில் கொள்ளவும்: தாயின் இரத்தம், கருவின் இரத்தத்தோடு எந்த நேரத்திலும் நேரடித் தொடாபுக் கொள்வதில்லை. கருவைச் சுற்றியுள்ள Blood barrier என்ற சவ்வு இவ்வாறு நேரடித் தொடர்பு ஏற்படாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றது. தாயின் இரத்தமும், குழந்தையின் இரத்தமும் வெவ்வேறு தன்மையுடையவைகளாகக் கூட இருக்கலாம் ((Positive or negative blood group)தொப்புள் கொடியின் வேலை என்னவெனில், இது கருவிற்குத் தேவையான சத்துக்களையும், சுவாசக் காற்றையும் தாயின் இரத்த நாடிகளிலிருந்துப் பெற்றுக் கொண்டு, கருவின் கழிவுப் பொருட்களை (காபன்டை ஆக்ஸைடு) தன் தாயின் இரத்த நாளங்களுக்கு அனுப்பி தாய் மூலம் வெளியேற்றுகிறது.இந்நிலையில் இந்தக் கருவின் அளவு (Size) 6 மில்லி மீட்டருக்கும் குறைவாக இருக்கிறது.கருவுற்ற 18 ஆம் நாள் தோன்றிய இருகுழாய்கள் ஒன்றினைந்து இதயம் இருக்க வேண்டிய பகுதிக்கு வந்த பின் 22 ஆம் நாள் தாயின் இரத்த நாளங்களிளிலிருந்து சுவாசக்காற்றை தொப்புள் கொடிவழியாகப் பெற்று முதன்முறையாக துடிக்கத் தொடங்குகின்றது. இதுவே கருவின் முதல் இதயத் துடிப்பாகும். பின்பு இந்தக் குழாய்கள் வளைந்து, நெளிந்து முழு இருதயமாக வளர்வதற்கு சில மாதங்களாகின்றன.
கருவுற்ற 22 ஆம் நாள் கருவின் முகம் வளரத் துவங்குகின்றது.

கருவுற்ற 31 ஆம் நாள் கருவின் மூக்கு மற்றும் கண்கள் வளரத் துவங்குகின்றது.

கருவுற்ற 33 ஆம் நாள் கருவின் branchial arches எனப்படும் பகுதிகளுக்கிடையில் காதுகள் வளரத் துவங்குகின்றது.

கருவுற்ற 49 ஆம் நாள் வரை ஆண், பெண் சிசுக்களும் ஒரே மாதிரியாக இருக்கும்.


***
"வாழ்க வளமுடன்"

இந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "