...

"வாழ்க வளமுடன்"

23 ஜூலை, 2011

கருவுருதலும் கருவின் வளர்ச்சியும் - Embryo and Fetus - part = 2

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


ஆண் சிசு

உருவான சிசு ஆணாக அல்லது பெண்ணாக மாற்றமடைதல்:
கருவில் வளரும் குழந்தை ஆணாகயிருப்பின் androgens எனப்படும் ஒருவகை ஹார்மோன்களை உற்பத்தி செய்வதால் 49 ஆவது நாள் வரையிலும் ஆண் மற்றும் பெண் குழந்தைக்கான கருவில் ஒரே மாதியாக இருக்கும் பிறப்புறுப்பு ஆணுக்குரியதாக வளர்கின்றது.கருவில் வளரும் குழந்தை பெண்ணாகவிருப்பின் இந்த androgens எனப்படும் ஹார்மோன் சுரப்பதில்லை. ஆதனால் பிறப்புறுப்பு பெண்ணுக்குரியதாக வளர்கின்றது.பிறப்புறுப்புக்கள் (reproductive organs) நான்காவது மாதத்திற்குப் பின்னரே முழுவளாச்சியடைந்து முழுமையான ஆணுறுப்பாகவோ, அல்லது பெண்ணுறுப்பாகவோ மாறுகிறது.கருவுற்ற 70 நாட்களுக்குள் கருவினுள் மனித உறுப்புகள் அனைத்தும் தோன்ற ஆரம்பித்து இதுவரையிலும் பார்ப்பதற்கு அனைத்து உயினங்களின் கருவோடு ஒத்திருந்த கருவானது இப்போது மனிதனின் முகம், கை, கால்கள் உட்பட முழு தோற்றமும் பெற்று விடுகிறது.கவனித்துக் கொள்க: இந்நிலையில் அனைத்து மனித உறுப்புகளும் உருவாக துவங்கியிருந்தாலும் அவைகள் முழுவளர்ச்சியைப் பெற்றுவிடவில்லை. உறுப்புகள் தொடாந்து வளர்ந்துக்கொண்டே இருக்கின்றன. இதுவரை ‘embryo’ என்றழைக்கப்பட்ட மனிதக் கரு இப்போது ‘fetus’ என்றழைக்கப்படுகிறது.கருவுற்ற 33 ஆம் நாள் ‘branchial arches’ என்ற பகுதிகளுக்கிடையில் உருவாக ஆரம்பித்த காதுகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துக்கொண்டே இருக்கின்றன. 5 ஆவது மாதத்திற்குப் பின்னரே அவைகள் முழுவளாச்சி பெறுகின்றன. 6 ஆவது மாதம் அக்குழந்தை கேட்கும் சக்தியைப் பெற்றுவிடுகின்றன.கருவுற்ற 31 ஆம் நாளிலிருந்தே கண்கள் வளர துவங்கியிருந்தாலும் 40 ஆம் நாள் தான் இமைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. சில நாட்களில் இந்த இமைகள் கண்களை மூடிவிடுகிறது. மூடப்பட்ட கண்ணின் இமைகள் 7 ஆவது மாதம் வரையிலும் மூடியே இருக்கும். அதாவது கண்கள் ஏழாவது மாதம் தான் முழுவளாச்சியை அடைந்து பார்க்கும் சக்தியைப் பெறுகின்றது.5 ஆவது மாதம் குழந்தையின் நரம்பு மண்டலங்கள் முழு வளாச்சியைப் பெற்று விடுவதால், குழந்தை கருவறைக்குள் நகர ஆரம்பிக்கின்றது. இப்போது குழந்தையின் அளவு 9 அங்குல நீளமாகும்.

6 ஆவது மாதம் 13 அங்குல நீளமும், ஒரு றாத்தல் எடையும் உடையதாக இருக்கும் அக்குழந்தையின் கண் இமையின் முடிகள் வளாந்து விடுகின்றது. ஆனால் தலை முடி இதுவரை வளராமலே இருக்கின்றது.கருவுற்ற 22 ஆம் நாள் இதயத்துடிப்பு ஆரம்பித்திருந்தாலும் 56 நாட்களுக்குப் பிறகே முழு இருதயத்திற்கான வடிவத்தை அது பெறுகிறது. எனினும் கர்பப்பைக்குள் இருக்கும் குழந்தையின் இருதயத்திற்கும், பிறந்த குழந்தையின் இருதயத்திற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. பிறந்த குழந்தையின் இதயம் இயங்கும் போது இது இரத்தத்தை நுரையீரக்குள் நெலுத்தி அங்கிருந்து சுவாசக் காற்றை பெற்றுக் கொண்டு பின்னர் மீண்டும் இருதயத்திற்கு வந்து பின்னர் உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பப்படும்.ஆனால் காப்பப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான சுவாசக் காற்று தாயின் இரத்தம் வழியாக குழந்தையின் தொப்புள் கொடி மூலம் குழந்தையின் இரத்தத்தை அடைவதால், குழந்தையின் இரத்தம் நுரையீரலுக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகின்றது. அதனால் இருதயத்திலிருந்து இரத்தம் நேரடியாக உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பப்படுகின்றது. எனினும் குறிப்பிட்ட அளவு இரத்தம் நுரையீரலுக்கும் சென்று வருகின்றது.


குழந்தை பிறந்ததும் அது நுரையீரல் வழியாகச் சுவாசிப்பதால் இரத்தம் நுரையீரலுக்கு அனுப்பப்பட்டு பின்னர் மீண்டும் இருதயத்திற்குச் சென்று அங்கிருந்து உடலின் மற்ற பாகங்களுச் செல்கின்றது. முன்னர் இருதயத்திலிருந்து நுரையீரலுக்குச் செல்லாமல் நேரடியாக மற்ற பாகங்களுக்குச் சென்ற வழி குழந்தை பிறந்ததும் அடைக்கப்படுகின்றது.

கருத்தரிக்கும் காலம்...


தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் வரப்பிரசாதம் ஆகும். ஒரு பெண் ஒருகுழந்தையை பெற்றெடுக்கும்போது மறு ஜென்மம் எடுக்கிறாள். இயற்கையின்கொடையான தாய்மை ஏற்படும் காலம் பற்றி சித்தர்கள் பலர் தெளிவாகக்கூறியுள்ளனர்.புதிதாக திருமணமான பெண்கள் கருத்தரிக்கும் காலம் பற்றி அவசியம் அறிந்திருக்க வேண்டும்.கருத்தரிக்கும் காலம் பற்றி அகத்தியர்

“ஆண்மையென்று மங்கையர்கள் பூக்குங்காலம்

அன்றுமுதல் பதினாறு நாளும் அந்தத்

தாண்மையன்றிப் பதினாறு இதழாய் நின்ற

தாமரைப் போல் மலர்ந்திருக்குஞ் சாற்றக் கேளு

காண்மையின்றித் தின மொன்று இதழ்தா னொன்று

கருவான கருக்குழிதான் இந்நாட் குள்ளே

பான்மைஎன்ற விந்தங்கே யூரும்போது

பாயுமப்பா வன்னியொடு வாயு தானே”அதாவது, மாதவிலக்கு சுழற்சி ஆன நாள் முதற்கொண்டு 14 நாட்கள் வரை, பதினாறுஇதழ்களுடைய தாமரையைப் போல் நங்கையின் பிறப்புறுப்புக்குள் ஜனன இந்திரியம்மலர்ந்திருக்கும்.இது பதினைந்தாம் நாள் முதல்கொண்டு ஒவ்வொரு இதழாக மூடிக்கொண்டே வரும்.இந்நாட்களுக்குள் அதாவது 15ம் நாள் முதல் 30ம் நாள் வரை கருவை அடைக்கலமாக வைத்திருக்கும்.கருக்குழிக்குள் விந்து சென்றால் தாமரை மலர் மூடிக்கொள்வதைப்போல் தினமும் ஒவ்வொரு இதழாய் மூடிக்கொண்டே வரும்.திருமணமான பெண்கள் உடனே கருத்தரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டால், மாதவிலக்கான 12ம் நாள் முதல் 18ம் நாட்களுக்குள் உறவு வைத்துக்கொள்ளவேண்டும்.நாத அணுவும், விந்து அணுவும் ஒன்று சேர்வதே கரு உருவாதலாகும்.விந்தணு ஒவ்வொருமுறை உறவு கொள்ளும்போதும் 2-4 மிலி விந்து நீர் வெளிப்படுகிறது. இந்த விந்தணு 0.5 மி.மீ நீளம் உடையது.விந்தணு உருவாக 74 நாட்கள் ஆகும்.விந்தணு கருப்பையில் 10 நாட்கள் வரை உயிர்வாழும். ஆனால் 24-48 மணி நேரத்தில் கருத்தரிக்கச் செய்யும் சக்தியை இழந்து விடுகிறது.விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள் உள்ளது.

நாதம் (சினைமுட்டை)சினைமுட்டையானது பெண்ணின் சினைப் பையிலிருந்து வெளியாகும். இதன் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம்.


சினை முட்டை வட்ட வடிவமுடையது. 0.2 மி.மீ அளவாகும்.


சினை முட்டை, சினைப் பாதையின் புறச் சுவர்களால் உறிஞ்சப்பட்டு சினைப்பையை அடைகிறது.
கருத்தரிக்கக்கூடிய காலம் என குறிப்பது


மாதவிலக்கு சுழற்சி நடந்த 12 முதல் 18 நாட்கள் வரை சினைமுட்டை வெளிப்படும்காலம். இந்தக் காலத்தில் உறவு கொண்டால் விந்தணு சினை முட்டையில் சேர்ந்துகரு உண்டாகும்.சினைமுட்டை வெளிப்பட்ட நேரம் முதல், சினைப்பாதையில் நகர்ந்து வர 2 நாட்கள்ஆகும். சினைமுட்டை வெளிவந்து 24 மணி நேரத்திற்குள் விந்தணு சினைமுட்டையை அடைய வேண்டும்.
கருத்தரிக்கும் நேரத்தை அறியும் முறைகள்1. தேதிகொண்டு அறியமுடியும்
மாதவிலக்கு சுழற்சி ஆன முதல் நாள், நாள் ஒன்று என்று கணக்கில் கொண்டு கணக்கிட வேண்டும்.பொதுவாக மாதவிலக்கு சுழற்சியானது 28-30 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும்.மாதவிலக்கு ஒழுங்கில்லாத மகளிருக்கு இது மாறுபட்டு இருக்கும்.மாத விலக்கு ஒழுங்கில்லாத மகளிருக்கு இந்த முறையில் கருத்தரிக்கும் காலத்தை கணக்கிடுவது கடினம். மாதவிலக்கு சுழற்சி 28-30 நாட்கள்உள்ளவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு 12 முதல் 16 நாட்களுக்குள் கர்ப்பம்தரிக்கும் வாய்ப்பு அதிகம்.2. யோனிக்கசிவு அதிகரித்து காணும்
யோனிக்கசிவு (Vaginal secretions) கருமுட்டை வளர்ச்சிமுழுமையானதாக ஆனபின்பு அது விந்தணுவுடன் சேரும் காலம் யோனிக் கசிவுஅதிகம் காணப்படும். இதனை வைத்து கருத்தரிக்கும் காலத்தை கணக்கிடலாம்.


கருத்தரிக்கும் காலம் அறிந்த பின்பு உறவு கொண்டால் விந்தணு கருப்பையினுள் எளிதாக ஊர்ந்து சென்று சினை முட்டையுடன் இணைய யோனிக்கசிவு உதவி செய்கிறது.3. காமக்கிளர்ச்சியின்போது Progesterone என்னும் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் உடல் வெப்பம் 0.30 அளவு உயர்கிறது. இதை வைத்து கருவுற ஏற்ற காலத்தை அறிந்துகொள்ளலாம்.12 முதல் 16ம் நாளுக்குள் கருப்பையின் உட்சுவர்கள், கனத்து, தடித்து கருவை ஏற்கக்கூடிய நிலையில் இருக்கும். இக்காலங்களின் நோயின் தாக்குதல்இல்லாமலும், மனச்சிக்கல் இல்லாமலும் உறவு கொண்டால் கரு உருவாகும்வாய்ப்புகள் கூடும்.

சுருக்கமாக:

விந்தணுவும் சினைமுட்டையும் ஒன்றுடன் ஒன்று சேருதலை கருக்கட்டல் என அழைக்கப்படுகிறது.ஒரு ஆணுடைய விந்தணு ஒவ்வொருமுறை உறவு கொள்ளும்போதும் அவனிடமிருந்து 2-4மிலி விந்து நீர் வெளிப்படுகிறது. இந்த விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள் உள்ளன. ஒவ்வொரு விந்தணுவும் 0.5 மி.மீ நீளம் உடையது.ஆணுடைய விந்து நீரிலிருந்து வெளிப்படும் விந்தணு பெண்ணுடைய சினைப் பையிலிருந்து வெளியாகும் சினை முட்டையுடன் கூடுகிறது. ஆணுடைய விந்தணு எவ்வாறு பெண்ணுடைய சினைமுட்டையை தேடிச் செல்லுகின்றது.

ஆணுடைய விந்தணுவிலிருந்து குரோமோசோம்களும் பெண்ணின் சினைமுட்டையிலிருந்து குரோமோசோம்களும் ஒன்றாக இணைந்து செல் அமைப்பாக உருவாகிறது. இந்த செல் அமைப்பு உப்பு போன்று காணப்படுகிறது. இதுதான் FERTILIZED EGG அதாவது கருக்கட்டப்பட்ட முட்டையாகும்.கருக்கட்டப்பட்ட முட்டை கர்பப்பை குழாய் என அழைக்கப்படும் பலோப்பியன் குளாய் FALLOPIAN TUBE ஊடாக கருப்பையை சென்றடைகிறது. பின்னர் கர்ப்பப்பை படிப்படியாக வளரஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது. இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறதுகர்பம்தரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன வளர ஆரம்பிக்கின்றன.கர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை வளர ஆரம்பிக்கின்றன

கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் வளர ஆரம்பிக்கின்றன

கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது

கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் வளர ஆரம்பிக்கின்றன. மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படும். மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறதுகருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது. பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது.கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது.கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது. பிறகு விழிக்க கற்றுக்கொள்கிறது. இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது.அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது!கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன. மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை செய்கின்றன.கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள் ஆய்வில் கூறுகிறார்கள்.கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது. தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது. என அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது.கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றனகருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது.கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.கருவுற்ற 9-வது மாதம் அதாவது 266 அல்லது 294ம் நாள் தன் கருவளர்ச்சியை முழுவதுமாக அடைந்து குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க தயாராகிவிடுகிறது.
***


"வாழ்க வளமுடன்"

இந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "