...

"வாழ்க வளமுடன்"

26 ஜூலை, 2011

கவனியுங்கள்! உங்கள் பிள்ளைகளின் பற்சுகாதாரம் மிக முக்கியம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


குழந்தைகள் சரியான வாய்ச் சுகாதாரத்தை சிறந்த முறையில் பேணுவதன் மூலம் அவர்கள் பெரியவர்களாகும் போது அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.தினமும் பல் துலக்குதல், வாய் கொப்பளித்தல், வாய் சுத்தம் செய்தல் போன்றவற்றை செய்வதன் ஊடாக பல் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.தமது குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கட்டாயமாக பற் சுகாதாரம் பற்றி செய்முறையாகவும், உதாரணத்துடனும் செய்து காட்ட வேண்டும். குடும்பத்துடன் பல் துளக்கி குடும்பத்துடன் புன்னகையுங்கள்.அறிவுறுத்தல்கள்.1. குழந்தைகளுக்கானது,

உங்கள் குழந்தையின் பற்கள் வெளிவரும் போது பற்களை மெருதுவான சுத்தம் செய்யும் துணி கொண்டு தினசரி 2 முறை சுத்தம் செய்யுங்கள். குழந்தைகளின் பற்களிலுள்ள ‘எனாமல்’ எனும் பதார்த்தம் வயது வந்தவர்களின் ‘எனாமலை’ விட மிகவும் மெல்லியது.தொடர்ச்சியான சுத்தப்படுத்தல் பற் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கும். இரண்டு வயது வரை சுத்தமான நீர் பயன்படுத்துங்கள். அல்லது சிறிய பயறளவு புளோரைட் அடங்கிய பற்பசையை பயன்படுத்துங்கள்.இது பற்களை சுத்தப்படுத்துவது மட்டுமல்ல பற்கள் வளரும் போது மென்மையான தன்மையை கொடுக்கும். மெருதுவான பற்கள் விரைவில் ஒன்றுடன் ஒன்று சேரும் போது, இரண்டு பற்களுக்குமிடையில் பற்றீரியா தொற்றை ஏற்படுத்தும்.குழந்தைகளை அவர்களின் முதலாவது பிறந்த நாளுக்கு அண்மித்தாக அவர்களை அவர்களின் பல் தொடர்பான ஆலோசனையை பெற பல் வைத்தியரிடம் அழைத்துச் செல்லும் படி அமெரிக்காவின் பல் வைத்தியர் சங்கம் கூறுகிறது.இதனால் பற்கள் தொடர்பான பிரச்சனைகளை மதிப்பிட்டு அவற்றுக்கான மருத்துவ சேவையையும் வழங்க முடியும்.

2. 3-7 வயது


3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தமது பற்களை, குழந்தைகளுக்கான, மென்மையான பற் தூரிகை கொண்டு பல் துளக்க வேண்டும்.ஒரு ஒழுங்கு முறையில் அவர்களை பல் துளக்க கற்றுக் கொடுங்கள். நீர் கொண்டு வாயை கொப்பளித்து, சுத்தம் செய்யவும் பழக்கிக் கொடுங்கள்.6-7 வயதை அடையும் வரை அவர்கள் அவர்களின் பெற்றோர்களின் மேற்பார்வையில் பல் துளக்க வேண்டும். சிறுவர் பெரியோர்களை பார்த்து செய்வதில் ஆர்வம் காட்டுவர்.ஆகவே பெற்றோர், பல் துளக்கும் போதும் சரியா முறையை பின்பற்றுங்கள். உங்களை பார்த்து உங்கள் பிள்ளைகளும் சரியாக செய்வர்.6-12 வாரங்களுக்கு ஒரு முறை பற்தூரிகையை மாற்றுங்கள். பற்தூரிகையின் அளவு அவர்களின் வயது அதிகரிக்கும் போது மாறுபடும். புபற்தூரிகைகளை தெரிவு செய்யும் போது நடுத்தர தூரிகைகளை கொண்ட, சிறிய தலையை உடையதை தெரிவு செய்யுங்கள்.
3. ‘ப்ளேக்’ பரிசோதனை


‘ப்ளேக்’ பரிசோதனை மூலம் உங்கள் குழந்தையின் பற் சுகாதாரம் பற்றி சோதித்துப் பாருங்கள். வெள்ளை நிற பதார்த்தமான இந்த ‘ப்ளேக்’ பற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவில் கலந்து வரும் பற்றீரியாவை விருத்தியடையச் செய்யும்.பல் துளக்கிய பின் ‘ப்ளேக்’ பற்களில் எந்தளவில் காணப்படுகிறது என்பதை அறிய, உணவிற்கு பயன்படுத்தப்படும் சிவப்பு நிறமூட்டியை 4 அல்லது 3 துளிகளை 2 மேசைக் கரண்டி நீருடன் ஒரு கடதாசி கோப்பையில் கலக்குங்கள்.10 நிமிடங்களுக்கு வாயிலிட்டு நன்றாக கொப்பளியுங்கள். தண்ணீர் தொட்டியினுள் அதனை துப்புங்கள். வாயை சிறிது நேரம் சுத்தம் செய்ய வேண்டாம். கண்ணாடியின் துணையுடன் உங்கள் பற்களில் சிவப்பு நிற புள்ளிகளாக தெரியும் ‘ப்ளேக்கை’ அடையாளம் காணுங்கள்.அதன் பின் பல்லை நன்றாக துளக்குங்கள். பற்களை துளக்கிய பின்னும் கண்ணாடியில் உங்கள் பற்களை நன்றாக கவனியுங்கள் எங்கெங்கு அந்த ‘ப்ளேக்’ காணப்படுகின்றன என்பதை.மீண்டும் பல் துளக்கி அவற்றை அகற்றுங்கள். நீங்கள் முதலில் பல் துளக்கிய போது நன்றாக துளக்குப்படவில்லை என்பதை உணருங்கள்.7 வயதின் பின் பெற்றோரின் நேரடியான கண்காணிப்பில் பல் துளக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இருப்பினும் பெற்றோர் உங்கள் குழந்தைகள் சரியாக பல் துளக்குகின்றனரா என கண்காணிக்க தவற வேண்டாம்.ஓவ்வொரு 6 மாதங்களும் குடும்பத்தினருடன் சென்று பல் வைத்தியரிடம் பற்கள் தொடர்பான ஆலோசனை பெறுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
***
thanks google
***

"வாழ்க வளமுடன்"

இந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "