...

"வாழ்க வளமுடன்"

07 ஜூலை, 2011

குளிர்காலத்தில் `புளிப்பு' வேண்டாம்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


குளிர்காலம் என்றாலே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது. அந்த நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சட்டென்று வந்து ஒட்டிக்கொண்டு விடுகின்றன.


பொதுவாக, கோடைகாலத்தில் குளிர்பானங்களுக்கு எல்லோருமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். காரணம், அப்போது வெயில் காரணமாக உடலில் அதிக அளவில் வியர்வை வெளியாகும், சக்தி இழப்பு உடனே ஏற்படும். இதுதவிர, `அல்கலைன் சிட்ரைட்' என்ற அமிலமும் அதிக அளவில் வெளியாகிறது.



புளிப்பு சுவை கொண்ட மோர், பானகம் உள்ளிட்ட பானங்களை அப்போது அருந்துவதன் மூலம், அந்த அமில இழப்பை சரி செய்து கொள்ளலாம். இதே புளிப்பு சுவை கொண்ட குளிர்பானங்களை குளிர்காலத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது.



மீறி எடுத்துக்கொண்டால், உடலில் உள்ள `அக்கலைன் சிட்ரைட்' அமிலத்தின் அளவு அதிகரித்து சைனஸ், மார்புச்சளி, ஜலதோஷம் போன்ற பாதிப்புகளை அதிகப்படுத்திவிடும். அதனால், குளிர் காலத்தில் `கூல் டிரிங்ஸ்' மட்டுமின்றி புளிப்பு சுவை கொண்ட பானங்களும் வேண்டவே வேண்டாம். ஏன்... புளிப்பு சுவை கொண்ட வைட்டமின்-சி பழங்களைக்கூட அளவோடுதான் சாப்பிடவேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.



***
thanks படித்ததில் பிடித்தது
***





"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "