...

"வாழ்க வளமுடன்"

02 ஜூலை, 2011

நாம் அனைவரும் நல்லதை பலக்கிக்கொல்லுவோம் :)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


நாம் நினைக்கும்போது நமது விருப்பத்துக்கு ஏற்றவாறு குறிப்பது, குளியல் முறைக்கு மாறானது மட்டுமல்ல, அதனால் எந்தப் பயனும் கிடையாது. எதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதைப்போல, எப்படிக் குளிக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டால் நல்லது .

குளிக்கும் பழக்கம்

நாம் தினந்தோறும் குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள். அதிகாலையில் குளிக்க வேண்டும். அதுதான் நல்லது. நதியிலும், நீர் நிலையிலும் குளித்தால் நன்மை உண்டு. நதியும் நீர் நிலையும் இல்லாத நகர வாசிகள் 8′ஜ்3′ என்னும் அளவுடைய நீர்த் தொட்டியில் நீரைவிட்டு அதில் குளிக்க வேண்டும். சித்திரை வைகாசி மாதங்களில் சூரியன் உதயமாகி (5 நாழிகை) மணிக்குள் குளிக்க வேண்டும்.



ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சூரிய உதயத்துக்குப் பின் (4 நாழிகை) மணிக்குள் குளிக்கவேண்டும். மார்கழி, தைமாதங்களில் (2 நாழிகை) மணிக்குள்ளும் மாசி, பங்குனி மாதங்களில் (3 நாழிகை) மணிக்குள்ளும் குளிக்க வேண்டும். நோயற்ற வாழ்க்கையை விரும்புகின்றவர்கள் இவ்வாறு குளித்துவந்தால், உடல் நலம் பெற்று வாழ்வார்கள்.



குளிக்கும்போது, எண்ணெயைப் பாதத்தில் தேய்த்துக் கொண்டு குளித்தால், கண்களில் உள்ள குறைபாடுகள் நீங்கும். கண்களில் எண்ணெய் விட்டுக் கொண்டு குளித்தால், காதுகளில் உள்ள குறைபாடுகள் நீங்கும். தலைக்கு எண்ணெய் விட்டுக்கொண்டு குளித்தால், உடம்பிலுள்ள அனைத்துக் குற்றங்களும் நீங்கும்.


குளிக்கும்போது, இரண்டு மூன்று மாவிலைக் கொத்துகளை வேகும் அளவுக்குக் காய்ச்சி ஆற வைத்து, அந்த நீரை குளியல் தொட்டியில் ஊற்றி, தண்ணீர் ஊற்றி அதில் அமர்ந்து குளித்தால், உடலுக்குத் தேவையான நன்மைகள் தானே கிடைக்கும்.



குளிக்கும் போது, தண்ணீரை முதலில் தலையில் ஊற்றிக் கொள்ள வேண்டும். தலையில் ஊற்றும் தண்ணீல் உடல் முழுவதும் நனையுமாறு ஊற்றிக் குளிக்க வேண்டும் இது, குளிக்க வேண்டியமுறை. இதைச் செய்ய முடியாது. இதைச் செய்ய முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தால் நலமாக வாழ முடியாது.


நடை! நடை! நடை!


வைகறை துயில் எழு என்ற சொல்லைக் கேட்கும்போதே மனத்துக்குள் ஒரு கசப்பு. அதிகாலை தூக்கத்தானே சுகமானது.

அந்தச் சுகத்தையும் கெடுத்துவிட்டால்? காலையில் எழுந்திரு! சூரிய நமஸகாரஞ் செய்! நடைப் பயிற்சி செய்! யோகாசனஞ் செய்! என்று, ஊரெங்கும் உபதேச மொழிகளே உலா வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் எத்தனை பேர் அதை கடைப்பிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. நடைப்பயிற்சி செய்யும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நள்ளிரவில் வீட்டுக்கு வந்து விடியும் முன்னே எழுந்து வேலைக்குப் போகின்றவர்களால் எப்படி நடைப்பயிற்சி செய்ய முடியும்?



உள்ளம் செய்யும் தவத்தைப்போல உடல்செய்யும் தவம் நடைப்பயிற்சி! நடைப் பயிற்சி செய்யச் செய்ய உடல் உறுதி பெறும். உள்ளுறுப்புகளின் இயக்கம் சீராகும்.


நடைப் பயிற்சி செய்பவர்களுக்கு உடம்பு சுமையாகத் தோன்றாது. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். எப்போது எல்லா நேரத்திலும் நடைப்பயிற்சி செய்யக் கூடாது. நடைப்பயிற்சிக்கும் விதி இருக்கிறது.



அதற்குரிய நேரத்தில் நடைப்பயிற்சி செய்தால் நல்ல பயன் உண்டாகும். நடை பயிற்சி செய்தால் உடல் எடை குறையும். இளைஞர், முதியவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாரும் நடைப் பயிற்சி செய்யலாம்.


எப்போதெல்லாம் நடைபயிற்சி செய்யலாம்?’ என்பது பொதுவாக எழுப்பப்படுகிற கேள்வி. சூரிய உதயத்துக்கு முன்பும் சூரிய மறைவுக்குப் பின்பும் நடைப்பயிற்சி செய்தால், உடலின் உள்ளுறுப்புகள் சீராக இயங்கும். புத்துணர்வு பெறும்.



சூரிய உதயத்துக்குப் பின்பும் சூரிய மறைவுக்கு முன்பும் நடைப் பயிற்சி செய்தால் அது தசைப்பகுதியை மட்டுமே வலுவாக்கும்.

சூரிய உதயத்துக்கு முன்பு நடைப்பயற்சி செய்பவர்கள் கற்கள் பதிந்த பாதைகளில் அல்லது கற்கள் நிறைந்த பாதைகளில் நடக்க வேண்டும்.


சூரிய மறைவுக்குப் பின்பு நடைப்பயிற்சி செய்பவர்கள் புல்தரையில் அல்லது புற்கள் நிறைந்த வெளிகளில் நடக்க வேண்டும்.


கற்கள் நிறைந்துள்ள பாதைகளில் நடக்கும்போது காலின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள பதின்மூன்று வர்மப் புள்ளிகள் அமுக்கப்படுகின்றன. அதனால், உறக்கத்துக்குப்பின் செயல்பட வேண்டிய மிகமிக முக்கியமான உள்ளுறுப்புகள் சிறப்பாகச் செயல்படத் தூண்டப்படுகின்றன.



பகல் முழுவதும் பணியாற்றிவிட்டு ஓய்வெடுக்க வேண்டிய உறுப்புகளை மீண்டும் தூண்டக் கூடாது என்பதனால், சூரிய மறைவுக்குப் பின் புற்களின் மீது நடந்தால், வர்மப் புள்ளிகளுக்கு ஒத்தடம் இடப்படுவதுபோல அமைதி கிடைக்கும்.


உள்ளுறுப்புகளுக்கு அமைதி கிடைத்தால், இரவுப் பொழுது இனிமையானதாக இருக்கும். அவ்வாறு அல்லாமல், வெயிலில் நடைப்பயிற்சி செய்தால், நடைப்பயிற்சி உடற்பயிச்சியாக, உடம்பின் வெளிப்புறத்திலுள்ள தசைகள் நரம்புகளுக்குக் கொடுக்கப்படுகின்ற பயிற்சியாகவே இருக்கும்.



வெயிலில் செய்யப்படுகின்ற பயிற்சியினால் உடம்பிலுள்ள கொழுப்புச் சத்து குறையும். கலோரிகள் அதிகம் தேவைப்படும். உடல் எடை குறையும். மனத்தளர்ச்சி உண்டாகும்.


பயிற்சிக்குப்பின் ஓய்வும் தேவைப்படும். நடந்து செல்பவர்கள், சூரியன் தலைக்கு மேலே உச்சியில் இருக்கும் போது, தன்னுடைய நிழலின் நீளம் ஒரு அடி அளவு இருக்கும்போது, வெயிலில் நடக்க கூடாது.



அதேபோல், ஈரமான மண்ணில் நடக்கக் கூடாது! அதனால், நோய்க்கிருமிகள் பாதத்தில் படிந்து நோயை உருவாக்கலாம்.


உணவு உண்ணும்முறை

உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.



உடலில் இயக்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப்பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.



துவர்ப்பு & ரத்தப் பெருகச் செய்கிறது. இனிப்பு & தசை வளர்க்கிறது. புளிப்பு & கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு & எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு & நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு & உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.



துவர்ப்பு : உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.



இனிப்பு : மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.



புளிப்பு : உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது னீளவுக்கு னீதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நாரத்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.



காரம் : பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.



கசப்பு : பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.



உவர்ப்பு : அனைவரும் வரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.


இலையில் உணவு பரிமாறுதல்


உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக் கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.



சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு.


அடுத்து அடுத்ததாகப் புளிப்பி, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.



இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.



ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது.


கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்தட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது.



எப்போதும் உணவ உண்ணும்போது எந்த திசை அமர்வது நல்லது?

கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது ஆயுளை வளர்க்கும்.

தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது புகழை வளர்க்கும்.

மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது செல்வத்தை வளர்க்கும்.

வடக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது அழிவுக்கு வழி வகுக்கும்.


வாழை இலை நல்லது

எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும்.


உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது.


படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்டபின்பு அப்படியே படுத்துக் கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப் படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது.



உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம்.

உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம். உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்பம் குறைபாடுகளுக்குஏற்ப மனம் இருக்கும்.



நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது.


எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள்.


உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும்.



‘உண்பது நாழி’ என்று, உணவின் அளவு குறிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பதும் கூறப்பட்டுள்ளது.


வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழக்கையை« இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.



சில போதில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் போதில் உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்.


***
thanks படித்ததில் பிடித்தது
***



"வாழ்க வளமுடன்"

2 comments:

ஷர்புதீன் சொன்னது…

u can use the articles from my post!
thanking you!

prabhadamu சொன்னது…

/// ஷர்புதீன் கூறியது...
u can use the articles from my post!
thanking you!
////


:) good post.....

thanks :)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "