இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
நீங்கள் சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் கர்ப்ப காலத்திலும், மகப்பேற்றின் போதும் பிரச்னைகள் ஏதும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
1. திட்டமிடுங்கள்
உங்கள் கர்ப்ப கால ஆரோக்கியத்திற்காக ஆரம்பத்திலேயே திட்டமிடுங்கள்
கர்ப்ப காலத்தில் ஆரோக்கியத்தைப் பற்றி மிகவும் கவனமாக இருப்பது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். உங்கள் ஆரோக்கியத்தை ஆரம்பத்திலேயே திட்டமிடுவது என்பதன் அர்த்தம் உங்கள் டாக்டருடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்வதுடன் குழந்தை பேற்றிற்கு தயராவதும் ஆகும்.
*
2. நன்றாக சாப்பிடுங்கள்
நல்ல ஆரோக்கியமான, சத்தான உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். சத்தான உணவு வகைகள் பற்றி உங்கள் டாக்டரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கர்ப்பமாக இருக்கும் போது சில ஆகாரங்கள் உங்களுக்கு சாப்பிட பிடிக்காமல் போகலாம். அதைப் பற்றியும் டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
*
3. நீங்கள் உண்ணும் உணவு சுத்தமாக இருக்க வேண்டும்
சில ஆகாரங்களை கர்ப்ப காலத்தின் போது தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை வயிற்றில் இருக்கும் உங்கள் குழந்தைக்கு நல்லதல்ல.
உதாரணமாக:
• சீஸ் (பாஸ்ட்ரைஸ் செய்யப்படாத அதாவது நன்கு சுத்திகரிக்கப்படாத பால் பொருட்கள்)
• சரியாக வேகாத மாமிசம்
• நன்கு கழுவப்படாத காய்கறிகள்
• நன்கு வேகாத கோழிக்கறி மற்றும் வேகாத முட்டைகள்
கர்ப்பமாக இருக்கும் போது உண்பதற்கான நல்ல உணவுகள் பற்றி உங்கள் டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
4. போலிக் ஆசிட் மாத்திரைகள் மற்றும் மீன் வகைகள் சாப்பிடுங்கள்
கர்ப்பத்தின் போது போலிக் ஆசிட் (போலேட் என்றும் இது அழைக்கப்படுகிறது) மிகவும் அவசியம். இது குழந்தைகளின் முதுகுத்தண்டு வளர்ச்சியில் ஏற்படும் குறைபாட்டையும் அதனால் உருவாகும் பிற ஊனங்களையும் தவிர்க்க உதவுகிறது.
கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு தினமும் 400 மைக்ரோ கிராம் போலிக் ஆசிட் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இது காய்கறிகளிலும், சில தானியங்களிலும் இருக்கிறது.
எண்ணை சத்து மிகுந்த மீன்கள் உங்கள் குழந்தைக்கு நல்லது. ஆனால் வாரத்திற்கு இரண்டு தடவைகளுக்கு மேல் மீன் சாப்பிடக்க் கூடாது என்று சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
ஆனாலும் மற்ற வகை மீன்களை நீங்கள் விரும்பும் அளவிற்கு உண்ணலாம். உங்களுக்கு மீன் பிடிக்கவில்லை என்றால் மீன் எண்ணை மாத்திரைகள் கிடைக்கிறது. ஆனால் அது எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது மற்றும் அது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு உகந்ததா என்பதை கவனித்து வாங்குங்கள்.
*
5. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்
கர்ப்பமாக இருக்கும் போது உங்கள் எடை அதிகரிக்கும். அதை சமாளிக்கவும், பிரசவத்தின் போது ஏற்படும் வலியை சமாளிக்கவும் உடற்பயிற்சி செய்வது அவசியம். குழந்தை பிறந்த பிறகு உங்களது பழைய உடற்கட்டை மீண்டும் பெற இந்த உடற்பயிற்சி உதவும்.
உற்சாகமான மனநிலையுடன் இருக்கவும் கர்ப்பத்தின் போது ஏற்படும் மனத்தொய்வை தவிர்க்கவும் உடற்பயிற்சி உதவும். நடப்பது, நீச்சல் மற்றும் யோகா போன்ற எளிதான, மென்மையான உடற்பயிற்சிகளை செய்யவும்.
*
6. இடுப்பிற்கான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்குங்கள்
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்கள் தும்மும் போதோ, சிரிக்கும் போதோ அல்லது உடற்பயிற்சி செய்யும் போதோ சிறிய அளவில் சிறுநீர் கசிவு ஏற்படுவது சாதாரணமான ஒன்று.
இடுப்பிற்கான உடற்பயிற்சிகளை கர்ப்பமாகும் முன்பே செய்யத் துவங்கி கர்ப்ப காலத்தின் போதும் தொடர்ந்து செய்து வந்தால் இதை தடுக்கலாம். இதைப் பற்றி மேலும் அறிய உங்கள் டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள்.
*
7. மது அருந்துவதை குறையுங்கள்
நீங்கள் அருந்தும் மது உடனடியாக உங்கள் ரத்தத்தில் கலந்து உங்கள் குழந்தையைச் சென்றடையும். ஆகவே மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. மீறி அருந்த விரும்பினால் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை சிறிய அளவில் அருந்தலாம். அனுமதிக்கப்பட்ட அளவு தோராயமாக:
• அரை கிளாஸ் அளவு பீர்
• சிறிய கிளாஸ் அளவு ஒயின்
கர்ப்பமாக இருக்கும் போது அதிக அளவு மது அருந்தும் பெண்களுக்கு (தினமும் ஆறு கிளாஸ்) பிறக்கும் குழந்தைகள் கல்வி கற்பதில் மிகவும் மந்தமாக இருப்பார்கள். மேலும் பலவிதமான உடற் குறைபாடுகளும் பிறப்பிலேயே ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
*
8. கேஃபைன் அளவைக் குறையுங்கள்
காபி, டீ, கோலா போன்ற பானங்களில் கேஃபைன் என்ற பொருள் இருக்கிறது. இது உடலில் அதிகமானால் இரும்புச் சத்தை உடல் ஏற்பது குறையும். கேஃபைன் அளவு மிகவும் அதிகரிப்பது குழந்தையின் எடை குறைவிற்கும், கர்ப்பம் கலைவதற்கும் காரணமாகிறது.
ஆனால் நான்கு கப் காப்பி அல்லது ஆறு கப் டீ அருந்துவது உங்கள் குழந்தையை பாதிக்காது. ஆனாலும் இதை குறைத்துக் கொள்வது நல்லது. கேஃபைன் நீக்கப்பட்ட காபி, டீ அல்லது பழரசங்கள், சில துளி எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் ஆகியவற்றை குடியுங்கள்.
*
9. சிகரெட் புகைப்பதை நிறுத்துங்கள்
புகைப் பழக்கம் உள்ள பெண்களுக்கு கர்ப்பம் கலைவதற்கான, குறைப்பிரசவம் நடப்பதற்கான, குழந்தை இறந்தே பிறப்பதற்கான ஆபத்துகள் அதிகம். சில சமயங்களில் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும் போது விவரிக்க முடியாத சில காரணங்களால் திடீரென இறந்துவிடுவதும் உண்டு.
கர்ப்பமாகும் முன்னரே புகைப்பதை நிறுத்துவது நல்லது. புகைப்பதை எவ்வளவிற்கு எவ்வளவு குறைக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் குழந்தைக்கு நல்லது.
*
10. ஓய்வெடுங்கள்
கர்ப்பத்தின் ஆரம்ப மற்றும் இறுதிக் காலங்களில் உங்களுக்கு ஏற்படும் களைப்பின் அர்த்தம் வேலை செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள் என்பதாகும்.
மதிய நேரத்தில் சிறிது தூங்குவது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்லது. தூக்கம் வரவில்லையென்றால் கால்களை சற்றே உயர்த்தி வைத்து அரை மணி நேரமாவது ஓய்வெடுங்கள்.
***
thanks google
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக