இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
நாகரிக உலகில் பெரும்பாலான பெண்கள், "எடுப்பாக' காட்டிக்கொள்ள பயன்படுத்தும் ஹை ஹீல்ஸ்
வகை செருப்புகள், பல ஆபத்துகளை வரவழைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
பிரிட்டனில் ஏராளமான பெண்களிடம் இது தொடர்பாக ஆராய்ச்சி நடத்தப்பட்டது. 2 ஆயிரம் பெண்களிடம் கருத்து கேட்ட போது, அதில் நான்கில் ஒரு பங்கு பேர் தினமும் ஹை ஹீல்ஸ் அணிகின்றனர் என தெரிய வந்தது. ஆராய்ச்சி முடிவில், பிரிட்டனில் மட்டும் 80 லட்சம் பெண்கள் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இவ்வகை செருப்புகளை அணிவதால் உடல் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. காலில் வலியும் உண்டாகிறது. முழங்காலுக்கும், கணுக்காலுக்கும் இடையே பாதிப்பு உருவாகிறது என்றும் ஆராய்ச்சி யாளர்கள் எச்சரிக்கின்றனர். ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு மூட்டுவலி பிரச்னையும் ஏற்படுகிறது. குதிகாலின் உயரம் அதிகமுள்ளதால், முன்னங்கால் களுக்கு அழுத்தம் அதிகரிக்கிறது. பெரும்பாலான நேரங்களில் ஹை ஹீல்ஸ் அணியும் பெண்கள், சாதாரண செருப்பு களை அணிய முடியாமலும் போகிறது.
எப்படி தப்பிப்பதுஹை ஹீல்ஸ் அணியும் அனைத்து வயதினருக்கும் இந்த பிரச்னை ஏற்படுகிறது. இதில் வயதானவர்களுக்கு தான் அதிக பிரச்னை என்பது உண்மையல்ல. கால்களுக்கு சரியான அளவில் செருப்பு அணிவது மிக முக்கியம். இதனால் பாதம் மற்றும் கால்களின் இணைப்பு பகுதி பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம். 2-3 செ.மீ., (ஒரு இன்ச்)க்கு மேல் உயரமுள்ள செருப்பை அணியக் கூடாது. உங்கள் கால்களிலும் வலி ஏற்பட்டால் துவக்கத்திலேயே டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஹை ஹீல்ஸ் அணிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கணுக்கால் காயம் ஹை ஹீல்ஸ் அணிவதால் காலில் பேலன்ஸ் குறைகிறது. எனவே கீழே விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாக கணுக்கால் எலும்பு உடையும் ஆபத்து ஏற்படுகிறது.
பெருவிரல் வீக்கம்இறுக்கமான ஷூ அணிவதால் கால் பெருவிரல் எலும்பு பெரிதாக வளர்ந்து விடுகிறது. இதனால் கால்விரலில் வலி உண்டாகிறது.
"ஆச்சில்ஸ்' தசைநார்பாதம் கீழ்நோக்கி போகும் போது, தசையினை எலும்போடு சேர்க்கும் "ஆச்சில்ஸ்' தசைநார் இறுகுகிறது. ஹீல்ஸ் உயர்கிற அதே சமயம் தசைநார் இறுகுகிறது. இதனால் குதிகாலில் வலி ஏற்படுகிறது.
முழங்கால் ஹை ஹீல்ஸ் செப்பல் அணிவதால் முழங்காலுக்கு 26 சதவீத கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது.
உடல் அமைப்புஇடுப்பு மற்றும் முதுகெலும்பு ஆகியவற்றை முன்னோக்கி தள்ளுகிறது.
அழுத்தம்ஹை ஹீல்ஸ் கால்களை, நீளமானதாக காண்பிக்கிறது. ஆனால் ஹீல்ஸ்சின் உயரம் கூடும்போது கால் பாதத்துக்கு அழுத்தம் அதிகமாகிறது.
எப்போது3 இஞ்ச் ஹீல்ஸ் +76 சதவீதம்2 இஞ்ச் ஹீல்ஸ்+57 சதவீதம்1 இஞ்ச் ஹீல்ஸ் +22 சதவீதம்
நரம்புத்தளர்ச்சிஹீல்ஸ் செப்பல் அணிவதால் காலின் 3வது விரலுக்கும், 4வது விரலுக்கும் இடையே உள்ள நரம்பு பாதிக்கிறது. இதனால் நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டு கால் நடுக்கம் ஏற்படுகிறது.
பெருவிரல் முண்டுஇறுக்கமான ஷூ அணிபவர் களுக்கு பெருவிரல் முண்டு ஏற்படுகிறது. காலின் பெருவிரலின் அடியில் உள்ள எலும்பு பாதிக்கப்பட்டு பக்கவாட்டில் வளைகிறது.
***
thanks ஞானமுத்து
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக