இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ஆரோக்கியமான உணவை மட்டும் நாம் எப்போதும் சாப்பிட்டு வர வேண்டும். தேவைக்கேற்பவோ அல்லது ருசிக்காகவோ கூட பாஸ்ட் புட் உணவுகளை சாப்பிடக்கூடாது.
உடற்தகுதிக்குரிய உடற்பயிற்சிகளை தவறாமல் தினமும் செய்து வர வேண்டும். குறிப்பாக சிட் அப்ஸ் எனப்படும் உட்கார்ந்து எழுந்திருக்கும் பயிற்சியை தினமும் கட்டாயம் செய்ய வேண்டும்.
உணவை நன்றாக மென்று தின்ன வேண்டும். தினமும் ஒரு நிமிடமாவது, நாம் செய்யும் வேலைகளில் ஏதாவது ஒரு வகையில் உடற்பயிற்சி செய்கிறோமோ என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
இதயத் தசைகளை வலுவடையச் செய்யும் வகையில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வரும் போது, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புச் சத்தைக் குறைத்து விடலாம். இதுவே உடலைக் கட்டுமஸ்தாக ஆக்குவதற்குரிய சிறந்த முறையாகும்.
கொழுப்பைக் குறைப்பதற்காக தேவையற்ற வழிமுறைகளில் வீணாகச் செலவு செய்ய வேண்டாம். சிறப்பு வகை டானிக் போன்ற மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டிய தேவையில்லை.
கொழுப்பைக் குறைத்து உடலை வாளிப்பாக மாற்றும் என்ற கவர்ச்சி விளம்பரங்களை நம்பி தேவையற்ற பொருட்களை வாங்கி உடலைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
உங்கள் உடலமைப்பிற்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகளை தகுந்த பயிற்சியாளர்களின் ஆலோசனையுடன் தினமும் செய்து வந்தாலே போதும். நீங்களும் சிக்ஸ் பேக்-அப் உடம்பை பெறலாம்
***
thanks luxinfonew
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக