...

"வாழ்க வளமுடன்"

08 ஜூன், 2011

ஆண்கள் பெண்கள் எப்படி நடக்க வேண்டும்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


தலைப்பை பார்த்ததும் “நாங்க நடந்துக்கிறத பற்றி நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்” என்று டென்ஷன் ஆகிடாதீங்க.. இது அந்த நடக்கிறதில்லை “Walking” நடை

ஹலோ! நடக்கிறதுல என்னங்க பெருசா சொல்லப்போறீங்க! நாங்கெல்லாம் சிங்கம் மாதிரின்னு வசனம் பேசாம தொடர்ந்து படிங்க.

நம்ம ஊர்ல பெரும்பாலனவர்கள் ஒழுங்காக நடப்பதில்லை அது உங்களுக்கு தெரியுமா! நானெல்லாம் அதை பற்றியெல்லாம் யோசித்ததே இல்லைன்னு சொல்றீங்களா!


சரியா போச்சு போங்க… அழகா துணி உடுத்துவதும் நம்ம உடலை உடற்பயிற்சி மூலம் சிறப்பா வைத்துக்கொள்வதும் ஒப்பனை மூலம் நம் முகத்திற்கு அழகு சேர்ப்பதும் மட்டுமே ஒருவரின் அழகை கூட்டி விடாது! அதோட நமது நடையும் நம் அழகை மதிப்பை கூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அழகு என்றாலே அங்கே சந்தேகத்திற்கு இடமில்லாமல் பெண்கள் வந்து விடுவார்கள்.. ஹி ஹி இந்த விசயத்துல ஆண்களுக்கு இரண்டாம் இடம் தான்.. மனசை தேத்திப்போம். அதுவுமில்லாமல் நடையில் ஆண்களை விட பெண்களுக்கே அதிக முக்கியத்துவம் இருக்கிறது. கவிஞர்கள் கூட பெண்களின் நடையை பற்றித்தான் அதிக பாடல்கள் எழுதி இருக்கிறார்கள். எனவே முதலில் பெண்களுக்கு..

பெண்கள் தங்கள் நடையில் மிக மிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். அழகாக இருந்தால் மட்டும் போதாது நடையில் அதிக கவனம் கொள்ள வேண்டும். ஒரு சில… சரி பல பெண்கள் ரொம்ப அழகாக இருப்பாங்க ஆனால் நடையை பார்த்தால் பப்பரப்பேன்னு இருக்கும். காலை பரப்பிட்டு நடப்பாங்க பார்க்கவே கேவலமா இருக்கும். என்னது! இப்ப தான் யோசித்து பார்க்கறீங்களா! அது சரி!

பெண்கள் தங்கள் கால்களை எப்போதும் அகலமாக வைத்து நடக்கவே கூடாது ரொம்ப ரொம்ப தவறான செயல். அது உங்கள் தோற்றத்தையே முற்றிலும் மாற்றி விடும் நீங்கள் எவ்வளவு தான் அழகாக இருந்தாலும். கால்களை எப்போதும் நேராகத்தான் வைக்க வேண்டும் 11 போல, மறந்து கூட “V” போல வைக்க கூடாது (பெரும்பாலனவர்கள் இப்படித்தான் வைத்து நிற்பார்கள் மற்றும் நடப்பார்கள்).

அழகான உடலமைப்பு உள்ளவர்கள் “F” டிவியில் வருவது போல காலை மாற்றி வைத்து நடக்கலாம் இதற்கு புடவை சுடிதார் மிடி என்று எந்த உடையும் பொருத்தமாக இருக்கும் ஆனால் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது இது கண்டிப்பாக மெல்லிய தேகம் கொண்டவர்களுக்கும் அளவான உடலமைப்பை கொண்டவர்களுக்கும் மட்டுமே பொருந்தும் (அதுவும் நம்ம ஊருக்கு கொஞ்சம் பீட்டராக தெரியும்) மற்றவர்கள் தயவு செய்து முயற்சிக்க வேண்டாம். அப்புறம் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல

ஆண்களுக்கும் பெண்களுக்கு கூறியதில் பெரும்பகுதி பொருந்தும் அதாவது காலை “V’ போல வைக்க கூடாது. பெரும்பாலானவர்கள் இதைப்போலவே நிற்கிறார்கள் நடக்கிறார்கள். ஒரு சில ஆண்களை கவனித்தால் ஸ்டைல் ஆக நடக்கிறேன் பேர்வழி என்று கூன் விழுந்தது போல நடப்பார்கள். இது அவர்களுக்கு வேண்டும் என்றால் பந்தாவாக இருக்கக்கூடிய விசயமாக இருக்கலாம் ஆனால் மற்றவர்கள் பார்வைக்கு இது கேவலமாகவே இருக்கும்.



ஆண்கள் எப்போதும் நிமிர்ந்த நடையாக இருக்க வேண்டும் அதற்காக ரொம்ப முறுக்கிட்டு நெஞ்சை நிமித்திட்டு யாரையாவது அடிக்க போகிற மாதிரி போகாதீங்க… ரொம்ப செயற்கையாக இருக்கும். கால்களை எப்போதும் நேராகவே வைத்து நிற்க நடக்க வேண்டும் “11″ போல. நம்ம இந்திய ஆண்கள் (பெண்கள் கூட) நிற்கும் போது பலர் சொங்கி மாதிரி நிற்பாங்க.. அதோட இடுப்புக்கு கைய கொடுத்து ஒரு விளங்காத போஸ் ல நிற்பாங்க…பார்த்தாலே எரிச்சலை கிளப்பும். இது வரை நான் பல நாட்டு மக்களிடையே கவனித்ததில் நம்ம இந்திய ஆண்கள் மற்றும் பெண்களே இப்படி இடுப்புக்கு கையை கொடுத்து நிற்கிறார்கள். நிற்கிற போஸை வைத்தே சொல்லிவிடலாம் கண்டிப்பாக இது நம்ம மக்கள் என்று

எனவே நடையில் என்ன இருக்கிறது? என்று சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். நம்முடைய தன்னம்பிக்கை முதல் கொண்டு நம் நடையை வைத்து கணிக்கலாம். எனவே உங்கள் நடையை இதைப்போல தவறுகளை நீங்கள் சரி செய்து மாற்றியமைத்து புதிய பொலிவை மற்றவர்களுக்கு கொடுங்கள். நான் கூறியவற்றை நீங்கள் நடக்கும் போதும் நிற்கும் போதும் மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள் [இடுப்புல கைய வைக்காமதாங்க ]



***
thanks கிரி
***



"வாழ்க வளமுடன்"

1 comments:

shanmugasundharam kg சொன்னது…

நன்றி உபயோகமான தகவல்

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "