...

"வாழ்க வளமுடன்"

25 மே, 2011

சரும பிரச்சினைகளுக்கு மருத்துவம் மூலம் தீர்வு ( அழகு குறிப்பு )

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


அழகாகத் தோன்ற எல்லோருக்கும் ஆசை தான். அந்த ஆர்வத்தில் அலங்கரித்துக் கொள்ளும்போது சில தவறுகளை அடிக்கடி செய்வதுண்டு. அவை எவை, அதை எப்படித் தவிர்ப்பது என்று தெரிந்துகொள்ளலாம்…


முகத்தில் கிரீம், பவுடர்களை திட்டுத்திட்டாகப் போட்டுக்கொள்வதுதான் பெரும்பாலானவர்கள் செய்யும் முக்கியத் தவறு. கிரீம் மற்றும் பவுடர் திட்டாகப் படிந்திருந்தால் சருமத்தின் அழகை கெடுத்துவிடும். அத்துடன் அவை வியர்வை துளைகளையும் அடைப்பதால் நாளடைவில் சரும பாதிப்புகள் ஏற்படக்கூடும்.


பலர் செய்யும் தவறுகளில் குறிப்பிடத்தக்கது இரட்டை அலங்காரம். இவர்கள் முதலில் அலங்காரம் செய்துவிட்டு கண்ணாடியைப் பார்ப்பார்கள். திருப்தி இல்லாமல் அலங்காரத்தை கலைப்பார்கள். பிறகு மீண்டும் அலங்காரம் செய்வார்கள். இப்படி இரண்டு அல்லது மூன்று முறை அலங்காரம் செய்துவிட்டு திருப்தியே இல்லாமல் வெளியே செல்வார்கள். இவர்கள் அலங்கார நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு சருமத்திற்கேற்ற அலங்காரத்தைச் செய்துகொள்ள வேண்டும்.


மாறுபட்ட தோற்றத்திற்காக அலங்கரிக்கும் ‘கான்ட்ராஸ்ட் மேட்சிங்’ அலங்காரமும் சில நேரங்களில் கேலிக்கூத்தாகிவிடும். சிலர், சருமத்திற்கு எதிரான நிறத்தில் ஆடை, அணிகலன்கள் அணிந்துகொண்டால் அழகாக இருக்கும். இப்படி கான்ட்ராஸ்ட் மேட்சிங் செய்வதாக நினைத்துக் கொண்டு தாறுமாறான வண்ணங்களை தேர்வு செய்து அலங்கரித்தால் அழகு அலங்கோலமாகி விடலாம். சரியாக அலங்காரம் செய்து கொண்டால் மட்டுமே ஜொலிக்க முடியும்.


முகத்தில் சிறு பருக்கள் அல்லது கருவளையங்கள் இருந்தால் அதை மறைப்பதற்கு பலரும் பெருமுயற்சி எடுத்துக்கொள்வதுண்டு. அவற்றின் மீது அழகு கிரீம்களை அதிகமாக பூசுவது, கருவளையம் மறையும் அளவுக்கு கிரீம், பவுடர் பூசுவது என்று தீவிர முயற்சியில் இறங்குவார்கள். இது அவர்களது சருமக் குறைகளை இயல்பை விட மோசமாக காட்டிவிடும். எனவே சரும பிரச்சினைகளுக்கு மருத்துவம் மூலம் தீர்வு காணுங்கள். அலங்காரம் மூலம் மறைத்துக்கொள்வதால் பயனில்லை.


அலங்கார கிரீம், பவுடர்களை பூசும் முறையில் தவறு செய்வதாலும் அழகு பாழ்படும். பவுடர், கிரீம் எதுவாக இருந்தாலும் விரல்களில் தொட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் விரல்களை முகத்தில் வைத்து வட்ட வாக்கில் கைகளை இயக்கி பூச வேண்டும். பக்கவாட்டிலோ, மேலும் கீழுமோ இழுத்துப் பூசிக் கொண்டால் திட்டுத்திட்டாகப் படியும். திரவ வடிவிலான லோஷன்களை உள்ளங்கையில் எடுத்து மேற்சொன்னதுபோல் பூசிக்கொள்ள வேண்டும். அலங்காரத்திற்கு கைகளே போதும். பிரஷ்களை பயன்படுத்துவதாக இருந்தால் அனுபவம் அவசியம்.


அளவு அதிகமாகிவிடுவதே பலநேரங்களில் அழகைக் கெடுக்கும். லிப்ஸ்டிக், பவுடர், புருவ மை என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு அளவு இருக்கிறது. அது ஒவ்வொருவரின் முக அமைப்புக்கு ஏற்ப மாறும். நீங்கள் இயல்பிலேயே நல்ல நிறமுடைய மேனியைப் பெற்றிருந்தால் அதிக பவுடர் தேவையிருக்காது. அழகான உதடுகள் பெற்றிருந்தால் லிப்ஸ்டிக்கே தேவையில்லை.


உதடு சிறிதாய் இருந்தால் உதட்டிற்கு சற்று வெளியில் லிப்ஸ்டிக் போட்டால் தான் அழகாகத் தெரியும். பெரிய உதடு இருந்தால் உதடுகளை சிறிதாக காட்டும் அளவுக்கு லிப்ஸ்டிக் போட வேண்டும். புருவ மை தீட்டுவதிலும் இப்படி அளவுகள் வேறுபடும். இப்படி அதனதன் அளவுகள் உங்கள் அழகிற்கு ஏற்ப மாறுபடும்.



***
thanks vayal
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "