...

"வாழ்க வளமுடன்"

21 மே, 2011

மும்தாஜின் உடல் முதலில் அடக்கம் செய்யப்பட்டது எங்கே..? சுவாரஸ்ய தகவல்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


மும்தாஜின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம்தான் ஆக்ராவில் இருக்கும் தாஜ்மஹால் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் தாஜ்மஹால் கட்டுவதற்கு முன்பு வரை மும்தாஜின் உடல் புர்ஹாம்புரில் உள்ள புலாரா மஹாலில் தான் இருந்தது என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.


மேலும், இந்த புலாரா மஹாலில் தான் மும்தாஜின் ஆவி உலவுவதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் புலாராவில் முகாலயப் பேரரசியான பேகம் மும்தாஜ் மரணமடைந்த போது, மும்தாஜின் நினைவாக ஒரு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்று ஷாஜஹான் ஆசைப்பட்டார். அப்போதுதான் தாஜ்மஹால் கட்டுவது என்ற எண்ணம் ஷாஜகானின் எண்ணத்தில் உதித்தது.




மேலும், தாஜ்மஹாலை புர்ஹாம்புரில் கட்டுவது என்றே திட்டமிட்டார். ஆனால் பல்வேறு காரணங்களால் தாஜ்மஹால் ஆக்ராவில் கட்டப்பட்டது. அதுவரை மும்தாஜின் உடல் புலாரா மஹாலில்தான் வைக்கப்பட்டிருந்தது.


தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்டதும், மும்தாஜின் உடல் அங்கு கொண்டுவரப்பட்டது. மும்தாஜின் உடல் மட்டுமே புலாரா மஹாலில் இருந்து தாஜ்மஹாலுக்கு கொண்டுவரப்பட்டது.


ஆனால் மும்தாஜின் ஆவி இன்னமும் புலாரா மஹாலில் தான் உலாவிக் கொண்டிருக்கிறது என்று அங்கு வாழும் மக்கள் கருதுகின்றனர்.

புலாரா மாளிகையில் இருந்து அவ்வப்போது சத்தங்களும், கத்துவது போன்றும், அலறுவது போன்றும் சத்தங்கள் வருவதாகவும், ஆனால் அந்த ஆவி இதுவரை யாரையும் துன்புறுத்தியது இல்லை என்றும் அங்கு வாழும் மக்கள் கூறுகின்றனர்.


அதாவது, கடந்த 1631ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துவிட்டு மும்தாஜ் மரணமடைந்துவிட்டார். அதனால்தான் அந்த இடத்திலேயே அவரது ஆவி இன்னமும் அலைந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

*

இந்த தகவல் உண்மையா என தெரியவில்லை .....

***
thanks puthuulakam
***





"வாழ்க வளமுடன்"






இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "