...

"வாழ்க வளமுடன்"

21 மே, 2011

அறியா விஷயம் அறிந்துக் கொள்வோம் !!!!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


நிலாவில் துப்பாக்கியால் சுட்டால் சத்தம் கேட்காது: ஏன் தெரியுமா??


நிலாவில் துப்பாக்கியால் சுட்டால் காதில் வெடியொலி கேட்காது. ஏனென்றால் நிலாவில் வளி மண்டலம் கிடையாது.


ஒலி அலைகளைத் தாங்கிச் செல்ல ஊடகம் தேவை. அதேபோல விண்வெளியும் வெற்றிடம்தான். எனவே விண்வெளி வீரர்களால் நம்மைப் போல் அங்கு உரையாட முடியாது.

ஊடகத்தின் அடர்த்தியும், வெப்பமும் ஒலி அலைகளின் வேகத்தை நிர்ணயம் செய்யும். ஒலி, காற்றில் செல்லும் வேகத்தைவிட திரவங்களில் செல்லும் வேகம் அதிகம்.

அதையும்விட அதிக வேகத்தில் திடப்பொருளில் செல்லும். மின் பல்பின் உள்பகுதியில் காற்று இல்லை. வெற்றிடமாக உள்ளது. பல்பு உடையும்போது அப்பகுதியின் வழியாக வெற்றிடத்தை நிரப்ப எல்லாப் பகுதிகளில் இருந்தும் காற்று வேகமாகச் செல்கிறது.

அவ்வாறு வேகமாகச் செல்லும் காற்றின் ஒலியே நமக்குச் சத்தமாகக் கேட்கிறது.


***



முதலையின் பற்களை சுத்தம் செய்யும் பறவை: சுவாரஸ்ய தகவல்!


`புளோவர்’ என்று ஒரு சிறுபறவை. இது முதலைகளின் பற்களைச் சுத்தம் செய்யும் வைத்தியராகப் பணியாற்றுகிறது. முதலை, உயிரினங்கள் எல்லாவற்றையும் தின்னக்கூடியது.


இரையின் எச்சங்கள் அதன் கோர மான பற்களிடையே சிக்கிக் கொண்டிருக்கும். முதலை அசைந்து வாயை மூடினால் போதும். பறவையின் உயிர் போய் விடும். ஆனாலும் முதலை அப்படிச் செய்வதில்லை.


தன் பற்களை பறவை சுத்தம் செய்வதற்காக பொறுமை யாகக் காத்திருக்கிறது. அதே நேரத்தில் பறவைக்கும் தாராளமாக உணவு கிடைத்து விடுகிறது. இதேபோல் கடல் மீன்களைச் சுத்தப்படுத்தும் ஒருவகை மீன் உள்ளது.

அவை ஒரு கோஷ்டியாக இருக்கும். மீன்கள் தம் உடலைச் சுத்தப்படுத்த இவற்றிடம் வருகின்றன. அவற்றின் உடம்பில் உள்ள ஒட்டுண்ணிகள், காளான், பாக்டீரியா போன்றவற்றை சுத்தப்படுத்தும் மீன்கள் சாப்பிட்டு சுத்தப்படுத்துகின்றன.


இவற்றின் வேலை முடியும் வரை பெரிய மீன்கள் பொறுமையாக ஒத்துழைக்கின்றன. சுறாமீன்கள் கூட இவ்வாறு தமது உடலைச் சுத்தம் செய்துகொள்கின்றன.


***


மலர்கள் மணம் பரப்புவது எப்படி?

எவ்வளவோ செடிகளைப் பார்க்கிறோம். எத்தனையோ மலர்கள். ஒவ்வொன்றும் ஒரு விதம். அந்த மலர்களின் அமைப்பு, மென்மை, அழகு ஆகியவை நம்மை வியக்க வைக்கின்றன.


சில செடிகளின் மலர்கள் என்று நினைப்பது உண்மையில் மலர்களாக இருக்காது. சில செடிகளில் வெண்ணிற உறைகளில் இருந்து எட்டிப் பார்ப்பவை மலர்களே அல்ல. மலர் போலத் தோற்றமளிக்கும் போலிகள்! சில செடிகளின் வண்ண இலைகளே மலர்கள் போல் காட்சியளிக்கும்.


மலர்கள் இல்லாதவற்றை மலர்கள் என்று எண்ணுகிறோம். சில செடிகளில் மலர்களை நம்மால் அடையாளம் தெரிந்துகொள்ள முடிவதில்லை.

புற்களின் நுனியில் உள்ள சிறுதுணுக்குகள் புற்களின் மலர்கள்தான்! சில தானியங்களின் இளங்கதிர்களே அவற்றின் மலர்கள்.


பூந்தாதையோ, விதைகளையோ அல்லது இரண்டையுமே உருவாக்கும் தொகுதியே மலர்களாகும். விதைகளை உடைய தாவரத்துக்கே மலர்கள் உள்ளன. விதைகள் உருவாக்குவதற்குக் காரணமாக உள்ள தாவரத்தின் பாகங்களே மலர்கள் என்று சொல்லலாம்.


மகரந்தச் சேர்க்கை புரிய உதவும் பூச்சியினங்களைக் கவர்ந்திழுக்க, பூக்கள் நறுமண வலையை வீசுகின்றன.

பூவிதழ்களிலேயே வாசனை தரும் மிகச் சிறிய துகள்கள் உள்ளன. அவையே நறுமணத்தை ஏற்படுத்துகின்றன. பூச்சிகளை மகரந்தம் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டியே நறுமணம் என்கிறார்கள், தாவரவியல் நிபுணர்கள்.


சில மலர்களின் இதழ்களில் உள்ள ஒருவித எண்ணை, நறுமணத்தை உண்டு பண்ணுகிறது. அந்த எண்ணைகளைத் தாவரங்கள் தங்கள் வளர்ச்சியின்போது உற்பத்தி செய்திருக்க வேண்டும்.


மிகச் சிக்கலான அப்பொருள், நடைமுறையில் உருக்குலைந்தோ, சிதைந்தோ எண்ணையாக மாறி காற்றிலோ, வெயிலிலோ ஆவியாகி நறுமணத்தை வெளியிடுகிறது.


எல்லா மலர்களின் நறுமணமும் ஒரேவிதமாக இருப்பதில்லை. சிலவற்றை நாம் விரும்புவோம். சில நமக்குப் பிடிக்காது. ஆனால் பூச்சியினங்களுக்கு ஒவ்வொரு நறுமணமும் நன்றாக நினைவில் இருக்கும். தங்களுக்கு விருப்பமான நறுமணத்தை அவை அறிந்திருக்கும்.



***



நரம்புகளை ஒளிர வைக்கும் திரவம்:வைத்தியத்துறையின் வளர்ச்சி!

மிகவும் சிக்கலான அறுவைச்சிகிச்சைகளின்போது நுண்ணிய நரம்புகளைக் கண்டுபிடிப்பது மருத்துவர்களுக்குக் கஷ்டமான விஷயம். மருத்துவர்களின் இந்தக் கஷ்டத்தைப் போக்கும்வகையில் ஓர் ஒளிரும் திரவத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.


அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டீகோ மருத்துவக் கல்லூரி ஆய்வாளர் குழு இதைத் தயாரித்திருக்கிறது. இதில் முக்கியமாக, அமினோ அமிலங்கள் அடங்கிய நுண் புரதத் துணுக் குகள் இருக்கின்றன. இனிமேல், மிக நுண்ணிய நரம்புகளைக் கண்டுபிடிப்பதற்கு மருத்துவர்கள் தங்களின் அனுபவத்தையோ, எலக்ட்ரானிக் வழி கண்காணிப்பையோ சார்ந்திருக்க வேண்டியதில் லை.

அறுவைச் சிகிச்சைக்கு முன் செலுத்தப் படும் இந்தத் திரவம், நரம்புகளை ஒளிரவைத்து, அவற்றை `பளிச்’ சென்று வெளிப்படுத்தும்.

அறுவைச் சிகிச்சையின்போது தவறான நரம்பைத் தேர்ந்தெடுத்துவிடாமல் இருப்பது மிகவும் முக்கியம். காரணம் அது கடுமையான வலியை ஏற்படுத்தக்கூடும் அல்லது உடம்பின் ஒரு பகுதியைச் செயலிழக்க வைக்கக்கூடும் என்கிறார்கள்.

ஆரம்பகட்டமாக, எலிகளுக்கு இந்தத் திரவத்தைச் செலுத்தி ஆய்வாளர்கள் பரிசோதித்திருக்கிறார்கள். அப்போது, அதன் நரம்புகளுக்கும் மற்ற செல்களுக்கும் இடையே அது ஒரு தெளிவான வேறு பாட்டைக் காண்பிப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.


***


பூனைகளால் இனிப்புச்சுவையை உணரமுடியாது ஏன்??


முலையூட்டிகளின் நாக்கில் சுவை கலங்கள் உள்ளன. நாக்கிலுள்ள சுவை கலங்கள் கொத்தாக சுவை அரும்புகளாக ஒன்றிணைந்துள்ளன. இரண்டு வெவ்வேறான நிறமூர்த்தங்களால் (Tas1r2 & Tas1r3) தோற்றுவிக்கப்பட்ட இரண்டு ஒன்றிணைந்த புரதங்களினாலேயே சுவை கலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


இந்த சுவை கலங்கள், உணவிலுள்ள குறிப்பிட்ட சுவையை அறிந்து அந்த தகவலினை மூளைக்கு அனுப்பும்.
புலி, சிறுத்தை உள்ளடங்களாக 6 பூனைகளின் உமிழ் நீர் மற்றும் இரத்த மாதிரிகளினை ஆய்வுசெய்த ஆய்வாளர்கள், இந்த விலங்கினங்கள் உபயோகமற்ற நிறமூர்த்தத்தினை கொண்டிருப்பதனை தமது ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஏனைய முலையூட்டிகள் இந்த நிறமூர்த்தத்தினையே தமது நாக்குகளில் சுவை கலங்களினை உருவாக்க பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


பூனையினை செல்லப்பிராணியாக வளர்ப்பவர்களில் சிலர், “எனது பூனை ஐஸ் கிறீம் சாப்பிடுகின்றது” , “எனது பூனை கேக் சாப்பிடுகின்றது” என்கின்றார்களே… இதற்கு ஆய்வாளர்கள் கூறும் பதில் என்னவெனில்,


அவை இனிப்பு சுவையினை ருசிபார்க்கின்றது என்பது மிக, மிக, மிக சந்தேகத்துக்குரியதாகும். ஏனெனில், அவை கொழுப்புக்காகவே அவற்றினை உண்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.


***
thanks புதியுலகம்
***





"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "