...

"வாழ்க வளமுடன்"

14 மே, 2011

மருத்துவ கேள்வி - பதில்கள் !!!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


இருதய நோய் வராமல் இருக்க உணவில் எவற்றை தவிர்க்க வேண்டும்?
எஸ்.சீதாராமன், மதுரை:

மாரடைப்பு என்பது ரத்தக்குழாய் நோய். உடலில் உள்ள ரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே, கொடூர ரத்தக் குழாய் நோய்களான பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக கோளாறு போன்றவற்றை தடுக்கலாம். தற்போதுள்ள நவீன மருத்துவத்தில், உங்கள் உண்மையான வயதைவிட, ரத்தக் குழாயின் வயதே (வாஸ்குலர் ஏஜ்) முக்கியத்துவம் பெறுகிறது.


ரத்தக்குழாய் நோய்க்கு வாழ்க்கை முறை மாற்றமே அத்தியாவசியமானது. குறிப்பாக மனதை நிம்மதியாக வைத்துக் கொள்வது, தினமும் நடைப் பயிற்சி, சரியான அளவு ஓய்வு ஆகியவை முக்கியமானவை.


உணவுப் பழக்கத்தை பொறுத்தவரை, எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது அவசியம். உப்பு, சர்க்கரையை நன்கு குறைக்க வேண்டும். காய்கறி, பழங்களை அதிகம் உண்பது, அரிசி உணவை குறைப்பது, நொறுக்குத் தீனிகளை அறவே தவிர்ப்பது ஆகியவை முக்கியம். இந்த பழக்கங்களை கடைபிடித்தால் பெருமளவு ரத்தக்குழாய் நோய்களை தடுக்கலாம்.

***

எனக்கு மூன்று ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. தற்போது ரத்தக் கொதிப்பும் வந்துவிட்டது. இது சர்க்கரை நோயைவிட மோசமான வியாதியா? வி.சீனிவாசன், நத்தம்:

சர்க்கரை நோயும், ரத்தக் கொதிப்பும் மிகக் கொடூரமான வியாதிகள். உடல் உறுப்புகளை, பல வகைகளில் பாதிக்கும் தன்மை படைத்தவை. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, ரத்தக் கொதிப்பு ஏற்பட்டால், அதை சரியாக கட்டுப்பாட்டில் வைப்பது முக்கியம். இதற்கு தற்போது, நவீன மருந்து வகைகள் உள்ளன.


சர்க்கரை நோயுடன், ரத்தக்கொதிப்பும் சேர்ந்துவிட்டால், ஒன்றும், ஒன்றும் இரண்டு என்பதற்கு பதில், ஒன்றும், ஒன்றும் 11 என்றாகி விடும். அதாவது நம் உடலை அது பல வழிகளில் பாதிக்கச் செய்கிறது. ஆகவே, சர்க்கரையையும், ரத்தக் கொதிப்பையும் கட்டுப்பாட்டில் வைத்து, வாழ்க்கை முறை மாற்றத்துடன், சரியான மருந்தையும் எடுத்தால், இந்நோய்களின் பாதிப்பை தடுக்க முடியும்.


***

கூணூடிட்ஞுtச்த்டிஞீடிணஞு என்ற மருந்து இருதய நோய்க்கு நல்லதா? சி.ராமலிங்கம், திண்டுக்கல்:

கூணூடிட்ஞுtச்த்டிஞீடிணஞு என்பது பல ஆண்டுகளாக இருதய மருத்துவத்தில் உபயோகப்படுத்தும் மருந்தாகும். இருதய செல்களுக்கு, பல வகைகளில் பயன் தருகிறது. ரத்த ஓட்டத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்கிறது.


இருதயத்தின் பம்பிங் திறனை அதிகரிக்கச் செய்கிறது. குறிப்பாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள இருதயத்திற்கு, இது ஒரு நல்ல டானிக் ஆக உள்ளது. நெஞ்சு வலி உள்ளவர்களுக்கும், இம்மருந்து நல்ல பலனளிக்கிறது.

***

எனக்கு நான்கு ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. நான் எந்த மாதிரியான பழங்களை தவிர்ப்பது நல்லது? பி.பார்த்தசாரதி, விருதுநகர்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாராளமாக பழங்களை எடுத்துக் கொள்ளலாம். ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, கொய்யா போன்றவற்றை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். அதேசமயம் முக்கனிகளான மா, பலா, வாழைப் பழங்களை அவசியம் தவிர்த்தாக வேண்டும். சத்தான காய்கறிகளையும் நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி உணவை குறைப்பது மிக நல்லது.

***

திவ்யா, திருப்போரூர்: நான் நன்றாக தான் தூங்குகிறேன். ஆனால், எனக்கு எப்பொழுது பார்த்தாலும் கண்கள் எரிச்சலுடன், கண்ணீர் வடிந்துகொண்டே இருக்கிறது. இதற்கு என்ன செய்வது?

நீலாஞ்சன மை என்னும் மருந்து அல்லது இளநீர் குழம்பு என்னும் கண் மருந்தை தொடர்ந்து மூன்று நாட்கள் கண்களில் விட்டு, குளிர்ந்த நீரால் கண்களை கழுவலாம். அசுககந்தா பலாலாட்சாதி தைலம் அல்லது சீரகத்தைலம் அல்லது பொன்னாங்கண்ணி தைலத்தால் தலை முழுகி வர, கண்ணீர்ப்பை பலமடையும். கண்களின் ஒவ்வாமை நீங்கும்.

***

ஒற்றடம் கொடுப்பது பலன் தருமா?

சித்த மருத்துவத்திற்கே உள்ள சிறப்பான சிகிச்சை முறை ஒற்றடமாகும். சூடான மண் ஓட்டை கையிலும், தலையிலும் வைத்து, பாண்டி விளையாடுவது பெண்களின் வழக்கம். சூடான ஓட்டால் உள்ளங்கை மற்றும் உச்சந்தலையில் ஒற்றடமிட மாதவிலக்கு சீராகும். அதுமட்டுமின்றி, கால்களை பிடித்து இழுக்கும் தசைப்பிடிப்பும் நீங்கும்.


ஆகவே, பெண்கள் "டிவி' முன் அமராமல் மாலை நேரத்தில் இது போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவது நல்லது. மண்சட்டியை நெருப்பிலிட்டும், முட்டை ஓட்டை சுட்டும், தவிடு, உப்பு, கருங்கல் தூள் போன்றவற்றை வறுத்தும் ஒற்றடமிடுவது வழக்கம்.


கட்டிகள் பழுக்க கம்பளி துணியை லேசாக சூடு செய்தோ அல்லது சூடான நீரில் முக்கியோ ஒற்றடமிடலாம். மார்பு சளியை வெளியேற்ற கோதுமை தவிட்டால் மார்பில் ஒற்றடமிடலாம். ஆமணக்கு விதையால் ஒற்றடமிட, பெண்களுக்கு மாதவிலக்கின் போது தோன்றும் வயிற்றுவலி நீங்கும்.


நல்லெண்ணெய் ஊறிய மண்விளக்கு சட்டியை சூட்டுடன் கன்னம், தாடைபோன்ற பகுதிகளில் ஒற்றடமிட, பல்வலி நீங்கும். எளிய பக்க விளைவுகள் இல்லாத இதுபோன்ற ஒற்றட முறைகளை பயன்படுத்துவதால், வீரியமிக்க மருந்துகளிலிருந்து தப்பிக்கலாம்.


***

- டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை
- டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை

***
thanks தினமலர்
ஹலோ டாக்டர்
***




"வாழ்க வளமுடன்"


இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "