இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
பொதுவா ஏதாவதொரு விசயம் நடக்கணும்னு நெனச்சு, ரொம்ப நம்பிக்கையா அதுக்கான முயற்சிகள்ல ஈடுபட்டுகிட்டு இருக்கும்போது, அந்த விசயம் நடக்காதுங்குற மாதிரி யாராவது பேசினா நமக்கு எவ்ளோ கோவம் வரும்???
“ஏய்.. அபசகுனமாப் பேசாதே“னு அவங்கள திட்டுவோம். சகுனம் பாக்குற பழக்கம் தவறுங்குறது பலருடைய கருத்து. ஆனா அப்டி நெனைக்கிறவங்க கூட, அபசகுனமா பேசுறத விரும்புறதில்லை. ஆனா நா இங்க சொல்ல வர்றது என்னனா.. அபசகுனமான எண்ணங்களும் நமக்குள்ள வேணும்குறது தான்.
நமக்குள் பாசிட்டிவான எண்ணங்கள் இருப்பது நல்லதுதான், ஆனா எப்போதும் அதுவே பழக்கமாகிவிடும் பட்சத்துல, நெகடிவ்வாக நடக்கும் சம்பவங்களை ஏற்றுக்கொள்ளும் தைரியம் பலருக்கு இருப்பது கிடையாது. “ஓவர் கான்ஃபிடன்ட், உடம்புக்கு ஆகாது“னு சொல்வாங்க.. அது கிண்டலுக்கு சொல்றதுனு தோணலாம். ஆனா அதுதான் உண்மையும் கூட. அளவுக்கு அதிகமான நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பு வைக்கும்போது, ஒருவேளை அது ஏமாற்றம் குடுத்துவிட்டால், அதைத் தாங்கும் மன வலிமை நமக்கு ஏற்படுவதில்லை.
அதுக்காக தன்னம்பிக்கை இருக்கக் கூடாதுனு சொல்ல வரல. எந்த விதமான மாற்றத்துக்கும் மனதைப் பழக்கப்படுத்திக்கணும்னு சொல்ல வர்றேன். நமக்குப் பிடிச்சமாதிரியான சூழல்கள்ல மட்டுமே நம்மள பொருத்திப் பாக்குறது தான் மனித நடைமுறை. நமக்குப் பிடிக்காத அல்லது நமக்கு எதிரான ஏதாவது சம்பவம் நடந்துருச்சுனா உடனே.. “எனக்கு மட்டும் ஏன் தான் இப்டி நடக்குதோ“னு நொந்துக்குறது தான் மனுஷங்களோட இயல்பு.
உதாரணத்துக்கு ஒரு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டு, அந்த வேலை கட்டாயம் தனக்கு கிடைக்கும்னு அபாரமான நம்பிக்கைல, முதல் மாசம் வாங்கப்போற சம்பளத்துல என்னென்ன செலவு பண்ணலாம்குறது வரைக்கும் திட்டம் போட்டு வச்சிருப்பாங்க. சட்டுனு அந்த வேலை அவங்களுக்கு கிடைக்காதுங்குற சூழ்நிலை வரும்போது, அந்த ஏமாற்றத்த அவங்களால தாங்கிக்க முடியிறதில்ல. தனக்கு இனிமே வேலையே கிடைக்கப் போறதில்லையோங்குற மாதிரியான விரக்தி நிலைக்குப் போயிட்றாங்க.
ஒரு விசயம் நடக்கணும்னு நெனைக்கலாம்.. ஆனா அதே விசயம் நடக்கலனா மேற்கொண்டு என்ன பண்றதுன்னும் முன்கூட்டியே யோசிக்கணும். நேர்மறையாவே யூகம் பண்ணிட்டு, ஒருவேளை எதிர்மறையா நடக்கும்போது அந்த நேரத்துல என்ன செய்றதுனு தெரியாம முழிக்க கூடாது.
ஆனா.. அடுத்தவன் ஏதாவது காரியத்துக்கு முயற்சி செஞ்சுகிட்டு இருக்கும்போது லூசு மாதிரி “இதெல்லாம் நடக்காதுடா, விட்டுடு“னு சொல்லி அடி வாங்கிடாதீங்க.. நா சொல்றது உங்களோட தனிப்பட்ட உணர்வுகளப் பத்தி மட்டும் தான்.
இன்னும் தெளிவா சொல்லணும்னா... உதாரணத்துக்கு காதல் விசயத்த எடுத்துக்கலாம். (இப்ப படிப்பீங்களே..). ஒரு பொண்ண சின்சியரா லவ் பண்ணும்போது ரொம்பவே நம்பிக்கையோட அவகிட்ட சொல்லலாம். ஆனா உங்க லவ்வ அந்தப் பொண்ணு ஒருவேளை நிராகரிச்சுட்டா, மனசுடஞ்சு போய்டாம அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கணும்.
மறுபடியும் அவளுக்குப் (பிடிச்ச மாதிரி) புரிய வைக்க முயற்சி பண்ணணும். இல்லனா உருப்படியா வேறு ஏதாவது வேலையிருந்தா போய்ப் பாக்கணும். (லவ் பண்ற பொண்ணு செட் ஆகலனா, அவளோட தங்கச்சிக்கு ரூட் போட்றவங்களப் பத்தி நா பேசல.. நா சொன்னது சின்சியரா ஒரே பொண்ண லவ் பண்றவங்களுக்கு தான்).
காதல், வேலை வாய்ப்புனு மட்டுமில்ல.. நம்மளோட சின்னச் சின்ன விசயத்துல கூட ஏதாவதொரு எதிர்பார்ப்பு இருந்துகிட்டு தான் இருக்கும். குறிப்பிட்ட சம்பவம் நடக்கும்னு நாம எந்தளவு நம்புறோமோ.. அதே அளவு, அந்த சம்பவம் நடக்காமலும் போகலாம்.. அப்ப அடுத்தகட்ட நடவடிக்கையா என்ன பண்றதுணும் யோசிச்சு வைக்கணும். அப்படி எதிர்மறையான விளைவுகளப் பத்தியும் முடிவெடுத்து வைக்கிறது, நம்மல தோல்வியால ஏற்பட்ற பாதிப்புல இருந்து மீட்கும்.
அதுக்காக எப்ப பாத்தாலும், தோத்துடுவோம்னு நெனச்சுகிட்டே எந்த முயற்சியும் பண்ணாம இருக்குறது முட்டாள் தனம். நம்மளால முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணணும். அது நடக்காத பட்சத்துல அந்த முடிவ ஏத்துகிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைய எடுக்கணும். அந்த ஏமாற்றத்தோட பாதிப்புலயே மூழ்கிடக் கூடாது.
ஆல் த பெஸ்ட்.
***
நன்றி இந்திரா
***
"வாழ்க வளமுடன்"
1 comments:
சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
=====>
நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும். <===
.
கருத்துரையிடுக