...

"வாழ்க வளமுடன்"

09 பிப்ரவரி, 2011

யோகாவும் பெண்களும் :)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


யோகாவின் அருமை பெருமைகளின் அகிலமெல்லாம் பரவி வருகின்ற காலம் இது. நம்மை விட வெளிநாட்டினர் யோகாவில் ஈடுபாடு செலுத்தி பயின்று வருகின்றனர். நாமே இனி யோகா கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் கலிஃபோர்னியா சென்றால் தான் நல்ல ஆசிரியரிடம் பயில முடியுமென்னும் நிலைமை இப்போது நிலவி வருகிறது.


பெண்கள் இயற்கையாக நளினமானவர்கள் என்றாலும், அவர்கள் வாழ்க்கையில் சுமக்க வேண்டிய சுமைகள் எளிதானவை அல்ல. குழந்தை பேறு ஒரு பெரிய பொறுப்பு. மாதவிடாய் சுழற்சிகள், பேறுகால உபாதைகள், கூட குடும்பப் பொறுப்பு, வயதானவர்களை மட்டுமன்றி குழந்தைகளையும் வளர்க்க வேண்டிய கடமை இவைகளை தாங்கும் சுமைதாங்கிகள் பெண்கள்.

*

இவர்கள் உடலை வளைத்து, நிமிர்த்தி செய்யப்படும் யோகாசனங்களை செய்யலாமா? மாதவிடாய் காலத்தின் போது செய்யலாமா? பாதியில் நிறுத்தி விட்டால் என்ன ஆகும்? இந்த மாதிரியான கவலைகளும், பயங்களும் இருப்பதால் பெண்கள் அதிக அளவில் யோகாவை பயில்வதில்லை. இந்த நிலைமை இப்போது மாறிவருகிறது.


பெண்கள் யோகாசனங்கள் கற்றுக் கொள்வதில் எந்த விதமான தடையும் இல்லை. பெண்களுக்கு, மேற்சொன்ன சுமைகளை சுமக்க நல்ல ஆரோக்கியம் அவசியம். அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது குடும்பத்திற்கு, சந்ததிகளுக்கு நல்லது என்று நாத முனி யோக ரஹஷ்யத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.


பெண்களானாலும் சரி, ஆண்களானாலும் சரி, திறமையான குருவிடம் பயில்வது அவசியம். அதுவும் பெண்கள் ஆசிரியர் இல்லாமல் யோகா ஆரம்பிக்கவே கூடாது. பெண் யோகா ஆசிரியராக இருந்தால் நல்லது. பெண்களின் இயல்பான கூச்சம், ஆசிரியர்களாக இருந்தால், கற்றுக் கொள்வதை தடை செய்யலாம்.


யோகாசனங்கள் மெதுவாக செய்யப்படுவதால், உடலில் வலிகள், காயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. பெண்களை அதிகம் தாக்கும், முதுகு வலி, சோகை, ஆர்த்தரைடீஸ், தலை வலி, உயர் ரத்த அழுத்தம், உடற்பருமன், போன்றவற்றுக்கு ஆசனங்கள் பயனளிக்கின்றன. மாதவிடாய் சமயத்தில் சில ஆசனங்களை தவிர்க்க வேண்டும். இந்த சமயத்தில் சில பெண்களுக்கு அடி வயிற்றில் வலி, கோபம், எரிச்சல், பலவீனம் தோன்றும்.



இதற்கு யோகாசனங்கள் சிறந்தவை. யோகா டென்ஷனை குறைக்கிறது. இதனால் வேலைக்கு போகும் பெண்கள் அவசியம் யோகா கற்க வேண்டும். பருமனான பெண்கள் யோகாவால் எடையை குறைக்க முடியும். ஆனால் நிறுத்திவிட்டால் மறுபடியும் எடை கூடலாம்.


கர்ப்பிணி பெண்கள் யோகாசனங்களை செய்யலாமா?

செய்யலாம். ஆனால் முதல் மூன்று மாதங்களில் யோகாசனம் செய்யலாம். அதன் பிறகு குருவின் அனுமதியுடன் கர்ப்பிணிகளுக்கு என்று பிரத்யேகமான ஆசனங்களை செய்யலாம். தடாசனம் பக்தகோணாசனம், வஜ்ராசனம், நமஸ்காராசனம், ஆனந்த சயனாசம், மகாமுத்திரா பாலாசனம், சவாசனம் போன்றவை நல்ல ஆசனங்கள். மகாமுத்திரா, குறிப்பாக, கர்ப்பமாய் இருக்கும் பெண்களுக்கு நல்லது.

ஆசனங்கள் கர்ப்பிணிப் பெண்களின் இரத்த ஒட்டத்தை அதிகரித்து, முதுகெலும்புக்கு இரத்த ஒட்டத்தை அதிகரிக்கும். தவிர உடலின் கீழ் பாகங்களுக்கு ரத்த ஒட்டம் அதிகரிக்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். இடுப்பு தசைகள், நரம்புகள் வலிமை பெறும். இதனால் குழந்தை பிறப்பு சுலபமாகும். ஆசனங்களால் கருவுக்கும் நல்லது. பெண்கள் யோகாசனங்கள் செய்வது பற்றிய குறிப்புகள் நமது இதிகாசங்களில் உள்ளன.

பரமசிவன் பார்வதிக்கு யோகாசனம் பற்றி விவரிப்பது “சிவ சம்ஹிதை”யில் காணலாம். யாக்ஞவல்க முனிவர் தன் மனைவிக்கு தனியாக யோகா கற்றுத் தந்ததாக, இவர் எழுதிய நூலில் சொல்லுகிறார். நாதமுனி பெண்கள் எந்த ஆசனங்களை செய்யலாம். எவற்றை செய்யக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்.

பிராணாயமம் குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, ஏற்றது. ஸ்ட்ரெஸ், மனச்சோர்வு, கழுத்து வலி (ஸ்பான்டிலோஸிஸ்) இவற்றுக்கு பிராணாயமம் சிகிச்சை அமைதிப்படுத்தி குணமாக்கும். பெண்கள் நினைவில் கொள்ள வேண்டிய பாதுகாப்புகள்.
ஆசனங்களை சரியான எண்ணிக்கையில் செய்யுங்கள். தவறாக அதிக நேரம் அல்லது அதிக தடவை செய்யக் கூடாது. இரவு சாப்பாட்டுக்குப் பின் செய்யக் கூடாது. இலகுவான, எளிய ஆசனங்களை செய்யவும். குறிப்பாக ஆரம்ப நிலையில்.

குரு இல்லாமல் ஆசனங்களை பயிலக் கூடாது. ஆஸ்துமா போன்ற நாட்பட்ட நோய்களுக்கு ஆசனங்கள் மிக நல்லது.பெண்களின் ஹார்மோன் கோளாறுகளை யோகா களைகிறது.
கர்ப்பிணி பெண்கள் மட்டுமல்ல, குழந்தை பிறந்த பின்பும் ஆசனங்களை தொடரலாம்.
வயிறு திரும்பி இயல்பான நிலையை அடையும். கர்ப்பிணி பெண்கள் சிரசாசனம், பஸ்சிமோத்தாசனம் இவற்றை செய்யக் கூடாது.
சூர்ய நமஸ்காரம் பெண்களும் செய்யலாம்.


**

பெண்களுக்கேற்ற யோகா

1. மாதவிடாய் கோளாறுகள் – வலியுடன் கூடிய உதிரப்போக்கு, அடிவயிற்றில் வலி, தசை இசிவு, வாந்தி, எரிச்சல் முதலிய பிரச்சனைகளுக்கு (ஞிஹ்sனீமீஸீஷீக்ஷீக்ஷீலீஷீமீணீ) மாதவிடாயின் போது – வஜ்ராசனா, சசாங்காசனா.

இதர நாட்களில் – சூர்ய நமஸ்காரம், ஹாலாசனா, மத்ஸ்யாசனா, புஜங்காசனா, பத்தகோனாசனா, சலபாசனா, தனுராசனா, பஸ்சிமோத்தாசனா மற்றும் பிராணயாமம். யோகாசனங்களுடன் பிராணாயமம் (பஸ்திரிகா, கபால பூதி முதலியன செய்யலாம்). பந்தங்கள், யோகமுத்திரைகள் – மூல பந்தம், வஜ்ரோலி முத்திரை.


2. கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய ஆசனங்களை நல்ல யோகா குருவிடமும், உங்கள் டாக்டரையும் கலந்தாலோசித்து மேற்கொள்ளவும்.


3. லிமீuநீஷீக்ஷீக்ஷீலீஷீமீணீ : இது மாதவிடாயின் போது ஏற்படும் அதீத போக்கு. இதற்கு உடல் உறுப்புக்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆசனங்கள் – சூர்ய நமஸ்காரம், வஜ்ராசனம், உஷ்ட்ராசனம், சசாங்கசனம், விபரீத கரணி ஆசனம், சவாசனம்.

பிராணாயாமம் – பஸ்திரிகா, உஜ்ஜையி, நாடிசோதன்
பந்தம் – மூல பந்தம், யோகநித்ரா.


4. பெண்களின் அதீத உடல் பருமனுக்கு (ளிதீமீsவீtஹ்) – உடலுழைப்பும், நடமாட்டமும் குறைந்து விட்ட இந்த கால சூழ்நிலையில் பெண்களில் பலர் அதிக குண்டாகி விடுவது சகஜம். சுற்றுப்புற சூழ்நிலை மாசுகளும், ஹார்மோன் கோளாறுகளும் காரணமாகும்.


ஆசனங்கள்

ஆசனங்களால் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் இதர கொழுப்புகள் குறைக்கப்படும். தொய்வைடைந்த சதைகள் வலுப்படுத்தப்படும். ஹார்மோன் கோளாறுகள் சீராககும். எடை குறைப்பு உடல் முழுவதும் சீராக ஏற்படும். செய்ய வேண்டிய ஆசனங்கள் – தடாசனம், சக்கராசனம், சூரிய நமஸ்காரம், புஜங்காசனம், சஸாங்காசனம், சவாசனம்
பிராணாயாமம் – பஸ்திரிகா, நாடி சுத்தி
உணவு – நிறைய தண்ணீர் குடிக்கவும், சூப்புகள் நல்லது, காய்கறிகளும், பழங்களும் அதிகம் சாப்பிடவும். இனிப்பு, கொழுப்பு, நெய், எண்ணெய், வறுத்த உணவுகள் இவற்றை தவிர்க்கவும்.


**

பெண்களின் மனச்சோர்வு

பெண்களுக்கு ஏற்படும் மனக்கோளாறுகளில் சகஜமானது ஞிமீஜீக்ஷீமீssவீஷீஸீ எனும் மனச்சோர்வு இந்த மனக்கோளாறு முதுகு வலி, தலைசுற்றல், பசியின்மை, தூக்கமின்மை, மலச்சிக்கல் முதலிய உடல் ரீதியான பாதிப்புகளை உண்டாக்கும். இதனால் பெண்களின் இயல்பு வாழ்க்கை எளிதாக பாதிக்கப்படுகிறது. மனச்சோர்வுக்கு மருந்துடன் யோகா சேர்ந்தால் சிறந்த பலனளிக்கும்.

ஆசனங்கள்

சூர்ய நமஸ்காரம், புஜங்காசனம், தனுராசனம், சசாங்காசனம், சர்வங்காசனம் முதலியன.

பிராணாயாமம் – கபால பூதி, வஸ்திரிகா, நாடி சுத்தம்
பந்தங்கள் – மகா பந்தம்
மெனோபாஸ் (பெண்களின் நிரந்தரமாக மாதவிடாய் நிற்பது) – சாதாரணமாக நாற்பத்தைந்து வயதிலிருந்து ஐம்பத்தைந்து வயது வரை பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்படுகிறது. இது பெண்களின் ஆரோக்கிய வாழ்வில் ஒரு முக்கியமான கட்டம். இதனால் சிலருக்கு மனநல பாதிப்புகளும், உடல் நல பாதிப்புகளும் உண்டாகலாம். இந்த பாதிப்புகளை யோகாவால் குணப்படுத்திக் கொள்ள முடியும்.


ஆசனங்கள்
பாவன்முத்தாசனம், புஜங்காசனம், தனுராசனம், சசாங்காசனம், மஸ்த்யேந்ராசனம், பஸ்சிமோத்தாசனம், விபரீத கரணி ஆசனம், ஹலாசனம், சர்வங்காசனம், வஜ்ராசனம், பத்மாசனம், சவாசனம் முதலியன.
பிராணாயாமம் – வஸ்தி, கபால பதி, நாடி சுத்தம், உஜ்ஜையினி,
யோக முத்திரை
பந்தம் – இருதய முத்திரை, பிராண முத்திரை, மகா பந்தம்.
தியானம் மற்றும் ஜெபம் செய்வது மெனோபாஸ்ஸால் உண்டாகும் மன உளைச்சலை போக்கும்.


***
thanks worldyogasuda
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "