...

"வாழ்க வளமுடன்"

01 பிப்ரவரி, 2011

எந்த பிளான் தேர்ந்தெடுக்கலாம்…( கைப்பேசி )

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

சட்டைப் பையில் பணம் இருக்கிறதோ இல்லையோ? கட்டாயம் மொபைல் போன் ஒன்று தேவையாய் உள்ளது.


அதுவே நமக்கு பணம் தரும் கிரெடிட் கார்டாகவும் இப்போது உருவாகி வருகிறது. ஆனால் புதியதாய் மொபைல் இணைப்பு வாங்க விரும்புபவர்களை மொய்த்திடும் விளம்பரங்களும் விற்பனை பிரதிநிதிகளும் வாடிக்கையாளர்களை ஏதோ ஏதோ சொல்லிக் குழப்பத்தான் செய்கின்றனர் என்பது ஒரு குறை.


இவர்களுக்கு உதவிட பொதுவான சில வழிகாட்டுதல்கள் இங்கு தரப்படுகின்றன. இந்தியாவில் மொபைல் பயன்பாடு இயங்கும் ஒவ்வொரு மண்டலத்திலும் நான்கு முதல் ஏழு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன.



ஒவ்வொரு நிறுவனமும் பத்து முதல் பன்னிரண்டு வகையான சேவைத் திட்டங்களை வழங்குகின்றன. சென்னையில் ஏர்செல் செல்லுலர், ஏர்டெல், வோடபோன் எஸ்ஸார், பி.எஸ்.என்.எல்., ரிலையன்ஸ் மற்றும் டாட்டா நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன. முதல் நான்கு நிறுவனங்கள் ஜி.எஸ்.எம். வகை இணைப்பினையும் அடுத்த இரண்டு நிறுவனங்கள் சி.டி.எம்.ஏ. வகை இணைப்பினையும் தருகின்றன.


சென்னை நீங்கலாக தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் ஏர்செல், வோடபோன், பி.எஸ்.என்.எல்., ரிலையன்ஸ் மற்றும் டாட்டா நிறுவனங்கள் இயங்குகின்றன. ரிலையன்ஸ் மற்றும் டாட்டா இங்கும் சி.டி.எம்.ஏ. வகை இணைப்பினையே தருகின்றன.



முதலில் உங்களுக்கு எந்த வகை இணைப்பு வேண்டும் என்பதனை முடிவு செய்து கொள்ளுங்கள். ஜி.எஸ்.எம (GSM – Global System for Mobile Communications) மற்றும் சி.டி.எம்.ஏ (CDMA – Code Division Multiple Access) என்ற இரண்டு வகையான தொழில் நுட்பத்தில் தான் உலக அளவில் போட்டி உள்ளது. இந்த இரண்டின் அம்சங்களையும் வேறுபாடுகளையும் தெரிந்து கொண்டால் நீங்கள் உங்களுக்கான தொழில் நுட்பத்தினைத் தேர்ந்து எடுக்கலாம்.



ஜி.எஸ்.எம். வகையைப் பொறுத்த வகையில் நிறைய மாடல் போன்கள் உள்ளன. இந்தியாவைப் பொறுத்த வரை எகுM 900/1800 என்ற இரண்டு பேண்ட் அளவில் இயங்கும் தன்மையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இவ்வகையில் எக்கச் சக்கமாய் போன் மாடல்கள் உள்ளன. அதன்பின் இதற்கான சிம் கார்டை ஏதேனும் ஒரு சர்வீஸ்புரவைடரிடம் வாங்கி இதில் இணைத்து தொடர்பினை மேற்கொள்ளலாம். இந்த கார்டை எந்த ஜி.எஸ்.எம். வகை போனிலும் பயன்படுத்தலாம்.



இணைப்பு சேவை வழங்குபவர் நீங்கள் எந்த போனைப் பயன்படுத்துகிறீர்கள் என்று கவலைப்பட மாட்டார். அதே போல ஒரே போனில் பல சர்வீஸ் புரவைடர் தந்த சிம் கார்டுகளை மாற்றி மாற்றி பயன்படுத்தலாம். நீங்கள் நான்கு பேண்ட் ஜி.எஸ்.எம். மொபைல் வைத்திருந்தால் அதனையே எந்த நாட்டிலும் ஜி.எஸ்.எம்.



இணைப்பு தரும் நிறுவனத்தின் சிம் இணைத்து பயன்படுத்தலாம். சி.டி.எம்.ஏ. வகையில் இப்போது சிம் கார்டு தரப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட போன் வகையுடன் இணைந்தே தரப்படுகிறது. ரிலையன்ஸ் அல்லது டாட்டா இண்டிகாம் நிறுவனங்களிடம் இவை கிடைக்கின்றன. முன்பு ஒரு போனுக்கு ஒரு எண் என்று இருந்தது. இப்போது போன் செட்டை மாற்றிக் கொள்ளலாம். எனவே போன் மாடல்கள் மிகவும் குறைவு.



வாங்கிய போனை அதனை வாங்கிய சர்வீஸ் புரவைடர் தரும் இணைப்புடன் மட்டுமே பயன்படுத்த முடியும். எந்த வகை என முடிவு செய்த பின்னர் உங்கள் ஏரியாவில் மேலே குறிப்பிட்ட நிறுவனங்களில் எந்த சர்வீஸ் புரவைடர்கள் இயங்கு கிறார்கள் என்று பார்க்கவும்.



நீங்கள் தொழில் ரீதியாகவோ அல்லது அலுவல் ரீதியாகவோ அடிக்கடி மாநிலம் விட்டு மாநிலம் செல்பவராக இருந்தால் நீங்கள் செல்லும் இடங்களில் இங்கு சேவை வழங்கும் நிறுவனம் மொபைல் சேவையினை வழங்குகிறதா என்று பார்த்துத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இங்குள்ள நிறுவனம் நீங்கள் செல்லக் கூடிய இடங்களில் ரோமிங் வசதியினைத் தருகிறதா என்று கேட்டு அறியவும்.



அடுத்தது உங்கள் மொபைல் போனின் விலை. உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் பல மாடல் போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. எனவே உங்களுக்கான விலையில் உள்ள போன்கள் அனைத்தையும் பட்டியலிட்டு பின் ஒப்பிட்டு வாங்கவும். அடுத்து போன் பேசுவதற்கான செலவு.


மாதம் இவ்வளவு தான் போனுக்கு செலவழிக்க வேண்டும் என முடிவு செய்தால் பிரீ பெய்டு எனப்படும் முன் கூட்டியே பணம் செலுத்தும் கார்டினை வாங்கவும். ஒவ்வொரு முறை பேசி முடித்தவுடன் எவ்வளவு செலவழிந்துள்ளது. கார்டில் எவ்வளவு மிச்சம் உள்ளது என அறியலாம். அதற்கேற்றார் போல் பேசுவதைக் குறைத்துக் கொள்ளலாம்.


அவ்வப்போது சர்வீஸ் புரவைடர்கள் தரும் திட்டங்களுக்கேற்பவும் சலுகைகளுக்கேற்பவும் புதிய இணைப்புகளை வாங்கிப் பயன்படுத்தலாம். நீங்கள் வசிக்கும் ஏரியாவில் எந்த நிறுவனத்தின் சேவை நல்ல முறையில் உள்ளது எனக் கேட்டு அறியலாம்.



நீங்களும் சோதித்துப் பார்க்கலாம். போஸ்ட் பெய்ட் என்பதில் மாதந்தோறும் அதனைப் பயன்படுத்த லேண்ட் லைன் போல மாதம் ஒரு குறிப்பிட்ட வாடகை கட்டணமும் பயன்படுத்துவற்கான கட்டணமும் கட்ட வேண்டும். இதிலும் உங்களுடைய பயன்பாடு முறைதான் எத்தகையது வேண்டும் என்பதனை முடிவு செய்கிறது.


குறைந்த மாதக் கட்டணத்தில் உள்ள ஒரு இணைப்பினை வாங்கி பின் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள் என்பதனைக் கணக்கிட்டால் போஸ்ட் பெய்ட் இணைப்பினைச் சிக்கனமாகப் பயன்படுத்தலாம்.


பிரீ பெய்ட் கார்டில் குறிப்பிட்ட அளவிற்கான பணத்திற்கு பேசலாம் என்றாலும் இதற்கான கால அளவு இருக்கும். அதற்குள் பேசாவிட்டால் மீதமுள்ள பணம் கேள்விக் குறியாகிவிடும். நீங்கள் உடனே ரீசார்ஜ் கார்ட் மூலம் புதுப்பித்தால் ஏற்கனவே மீதம் உள்ள பணம் இதில் சேர்ந்துவிடும். இல்லை என்றால் பணம் வீண். ரீசார்ஜ் கூப்பன்களிலும் வேறுபாடு உண்டு.


ஒரு சில நிறுவனங்கள் சில வேளைகளில் கார்ட் வேல்யூ முழுவதும் அல்லது சற்று கூடுதலான அளவிற்கு மதிப்பு வழங்குவார்கள். சிலர் குறிப்பிட்ட சதவிகிதம் மட்டுமே வழங்குவார்கள். எடுத்துக் காட்டாக ரூ.2,000 க்கு வாங்கி ரீ சார்ஜ் செய்தால் ரூ.2,250க்கு பேசும் திட்டம் உள்ளது. ரூ.300க்கு வாங்கினால் ரூ.185 மட்டுமே பேச முடியும் என்ற திட்டமும் உள்ளது. இரண்டின் கால அளவு வேறுபடலாம்.



சில நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் மற்ற போன்களுக்கான அழைப்புகளுக்கு மிகக் குறைந்த கட்டணம் விதித்திருப்பார்கள். எனவே நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்பவர்கள் எந்த இணைப்பு வைத்திருக்கிறார்கள் என்று பார்த்து அதே நிறுவன இணைப்பு வாங்க முடிவுசெய்திடுங்கள். வாங்கியவுடன் உங்கள் போன் இணைப்பிற்கான இந்த சலுகைகளுக்கான ஏற்பாடுகளை உங்கள் போனில் செட் செய்திடுங்கள்.




இவ்வளவு விஷயங்களையும் ஆய்வு செய்து ஒப்பிட்டுப் பார்த்து வாங்க வேண்டும். இணைப்பு வாங்கச் செல்கையில் உங்கள் முகவரி, போட்டோ அடையாள அட்டை கேட்பார்கள். போட்டோ ஒன்றும் விண்ணப்பத்துடன் இணைக்கச் சொல்வார்கள். உண்மையான முகவரி, உங்கள் போட்டோ கொடுத்து கார்டை வாங்கிச் சரியான நோக்கத்திற்குப் பயன்படுத்தி தொழில் நுட்பத்தை உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் அடுத்தவருக்கு உதவுவதற்கும் பயன்படுத்துங்கள்.

***

சென்னையும் தமிழ்நாடும்

மொபைல் போன் சேவை உரிமத்தினை தமிழ் நாட் டில் இரண்டு வகையாகத் தந்துள்ளனர். சென்னை ஒரு மண்டலம். இதில் ஏர்செல் செல்லுலர், ஏர்டெல், வோடபோன் எஸ்ஸார், பி.எஸ்.என்.எல்., ரிலையன்ஸ் மற்றும் டாட்டா இண்டிகாம் ஆகிய நிறுவனங்கள் இயங்குகின்றனர். சென்னை அல்லாத மற்ற தமிழகம் ஒரு மண்டலம்.


இங்கே வோடபோன் எஸ்ஸார், ஏர்செல், பி.எஸ்.என்.எல்., ரிலையன்ஸ் மற்றும் டாட்டா ஆகிய நிறுவனங்கள் இயங்குகின்றன. இரண்டு மண்டலங்களிலும் டாட்டா மற்றும் ரிலையன்ஸ் சி.டி.எம்.ஏ. வகை இணைப்பி னையும் மற்றவை ஜி.எஸ்.எம். வகை இணைப்பினையும் தருகின்றனர்.

**

டிப்ஸ்…

பஸ்களில் ட்ரெயின்களில் செல்கையில் மொபைல் போனில் பேசுவதைத் தவிருங்கள். பேஸ் மேக்கர் என்னும் இதயத் துடிப்பை இயக்கும் கருவி வைத்திருப்பவர்கள் மொபைல் போனுக்கு வரும் ரேடியோ அலைகளினால் பாதிப்படைந்து உயிருக்கு ஆபத்து வரலாம். மேலும் பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் மொபைல் பேச்சினால் எரிச்சல் அடையலாம்.



***
thanks google
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "