...

"வாழ்க வளமுடன்"

13 ஜனவரி, 2011

மிளகாய் பஜ்ஜி… சமோசா!சாப்பிட சாப்பிட ருசி : சாப்பிட்ட பின் :(

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சாப்பிட சாப்பிட ருசி : சாப்பிட்ட பின் கொலஸ்ட்ரால்



யாருக்கு தான் பிடிக்காது, மிளகாய் பஜ்ஜி, சமோசா. ஆனால், தரமானது தானா என்று பார்த்துச் சாப்பிட் டால் உடலுக்கு நல்லது தானே. இல்லாவிட்டால், கெட்ட கொலஸ்ட்ரால் பூதம் பாடாய்ப்படுத்தி விடும்.


அப்புறம் என்ன…? ரத்தத்தில் கொழுப்பு ஏறி, மார்பை பிடித்துக்கொள்ள வேண்டியது தான். அதற்கு பின் தான் பலருக்கே ஞானோதயம் வரும். கண்ட கண்ட எண்ணெய், காயவைத்த எண்ணெய் போன்றவற்றில் செய்யப்படும் பஜ்ஜி சமாச்சாரங்கள் மூலம் நம் உடலில் புகுந்து கொள்ளும் கொழுப்பு தான் “டிரான்ஸ் பேட்’ என்ற புது வகை கொழுப்பு.

***

புதுக் கொழுப்பு இது

எந்த ஒரு உணவிலும் சாச்சுரேட்டட் மற்றும் “நான் – சாச்சுரேட்டட்’ கொழுப்பு உள்ளதாக தான் இதுவரை கருதப்பட்டது. ஆனால், புதிதாக ,சர்வதேச அளவில் கண்டுபிடிக்கப்பட்டது தான் “டிரான்ஸ் பேட்’ கொழுப்பு.


சாச்சுரேட்டட் கொழுப்பு தான் கெட்ட கொழுப்பை, ரத்தத்தில் சேர்க்கி றது. அதுபோல, “டிரான்ஸ் பேட்’ கொழுப்பு சேர்ந்தால் அதை விட 15 மடங்கு கெட்ட கொழுப்பு சேருமாம். அமெரிக்கா உட்பட, பல நாடுகளில் இந்த வகை கொழுப்பு கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.


***

யப்பா… 30 சதவீதமா?

“டிரான்ஸ் பேட்’ கொழுப்பு, அதிக பட்சம் இரண்டு சதவீதம் வரை இருக்கலாம் என்று சர்வதேச அளவில் மருத்துவ நிபுணர்கள் வரையறுத்துள்ளனர். ஆனால், இந்தியாவில் சமீப காலம் வரை நடத்தப்பட்ட பல்வேறு அமைப்புகளின் ஆய்வுகளில், “இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்களில் 10 முதல் 23 சதவீதம் வரை “டிரான்ஸ் பேட்’ கொழுப்பு உள்ளது ‘ என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சில எண்ணெய்களில் 30 சதவீதம் வரை கூட இந்த மோசமான கொழுப்பு உள்ளதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. “டிரான்ஸ் பேட்’ கொழுப்பு நமக்கு புதிது; அதை தடுக்க தனியாக சட்டம் கொண்டு வந்தால் தான் நல்லது; இல்லாவிட்டால் தயாரிப் பாளர்கள் இது பற்றி பெரிதாக கண்டுகொள்ளமாட்டார்கள்’ என்று மருத்துவ தரப்பில் வேதனை தெரிவிக்கப்பட்டது.

***

உஷாருங்க உஷாரு

எண்ணெயில் பொரித்த அப்பளம், பஜ்ஜி, போண்டா, சமோசா போன்றவற்றுக்கு நம்மில் பலரும் அடிமையாகி விட்டனர். எண்ணெய் இல்லாமல் செய்து தரப்படும் உணவுகளில் நாட்டம் இல்லை. சாலையோர கடைகளில் கூட, பஜ்ஜி, சமோசா விற்பனை கன ஜோர் தான்.



எந்த எண்ணெயில் பொரித்தது, தரமானது தானா என்று எத்தனை பேர் பார்க்கின்றனர்? “ஒரு நாளைக்கு சாப்பிட்டா கொலஸ்ட்ரால் வந்துடுமா… என்ன?’ என்று தத்துவம் பேசியே பல நாள் சாப்பிடுவோர் பலரும் உள்ளனர்.



நாற்பது வயதை தாண்டியபின் தான் , ஒரு முறை டாக்டரிடம் போய் பி.பி.,செக்கப் செய்யும் போது இந்த “டிரான்ஸ் பேட்’பூதம் எந்த அளவுக்கு வேலை காட்டிவிட்டது என்று புரியும். அதற்கு பதில் இப்போதே காத்துக்கொள்ளலாமே!


***

சர்க்கரை நோய்க்கும்…

இதய நோய் வருவதற்கு காரணம், கொலஸ்ட்ரால் தான். சாச்சுரேட்டட் கொலஸ்ட்ரால் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் , ரத்தத்தில் சேரும். அப்படி சேரும் போது தான், ரத்த கொலஸ்ட்ரால் அதிகரித்து, ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.


சாச்சுரேட்டட் கொலஸ்ட்ரால் மூலம் ஏற்படும் கெட்ட கொலஸ்ட்ராலை விட, “டிரான்ஸ் பேட்’ மூலம் 15 மடங்கு வரை கொலஸ்ட்ரால் சேர்க்கும் ஆபத்து உள்ளது. இது மட்டுமில்லாமல், “சி – சியாக்டிவ்’ ப்ரோட்டீன் என்ற ஒரு தீய சத்தும், இதன் மூலம் உடலில் சேர்கிறது. இது தான் இதய பாதிப்புக்கு இன்னும் துணை போகிறது.


இதயத்தை தான் பாதிக்கிறது என்றால், ரத்தத்தில் உள்ள க்ளூக்கோஸ் அளவையும் அதிகரிக்க “டிரான்ஸ் பேட்’ துணை போகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.

***

எது தான் நல்லது?

பலருக்கும் எந்த எண்ணெய் தான் நல்லது என்று தெரியாமல் குழம்புகின்றனர். “பாலி அன் சாச்சுரேட்டட் பேட்டி ஆசிட் (புபா) உள்ள மக்காச்சோள அடிப்படையிலான எண்ணெய்கள், சன் பிளவர், ஆகியவற்றுடன், “மோனோ அன் சாச்சுரேட்டட் பேட்டி ஆசிட்’ (முபா) கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், சோயா எண்ணெய் ஆகியவற்றை கலந்து பயன்படுத்துவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.


இவற்றை எல்லாம் விட, ஆலிவ் எண்ணெய் மிகச் சிறந்தது; ஆனால், விலையும் கையை கடிப்பது தான்.


***

ஈசியான வழி இதோ

இப்போதுள்ள எண்ணெய் பழக்கத்தை கைவிட முடியாது தான்; ஆனால் , கட்டுப்படுத்திக்கொள்ளலாமே. இதோ சில வழிகள்:


* எண்ணெய்யை வாணலியில் ஊற்றி பொறிக்கும் போது, அதிக சூட்டில் வைக்க வேண்டாம்; தீப்பிடிக்கும் அளவுக்கு வைக்கவே வேண்டாம்.


* காய்ந்த எண்ணெயை மீண்டும் பயன் படுத்தவே கூடாது; இது தான் மிகப் பெரிய தவறு.


* பிளாஸ்டிக் பாட்டிலில் எண்ணெய், சூரிய வெளிச்சம் படும் வகையில் வைக்க வேண்டாம்.


* கரண்டியை பயன்படுத்தாமல், ஸ்பூனை வைத்து எண்ணெய் எடுத்து சமைக்கவும்.


* காய்கறிகளை வேகவைத்து, அதன் பின் சிறிய அளவு எண்ணெயில் வதக்கலாமே.


***
thanks தினமலர்
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "