இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
பரவி வரும் மேலை நாட்டுக் கலாச்சாரம் காரணமாக நம்மூரிலும் சர்வ சாதாரணமாக பீட்சா, பர்கர் என்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அதிலும் குழந்தைகள் இவற்றை விரும்பி விழுங்குகிறார்கள். உங்கள் வீட்டிலும் அப்படித்தானா?அப்படியானால் கொஞ்சம் கவனம்! வாரம் மூன்று அல்லது அதற்கு மேல் பர்கர் சாப்பிடும் குழந்தைக்கு ஆஸ்துமா அல்லது மூச்சிரைப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று எச்சரிக்கை மணி அடிக்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு. ஜெர்மனி, ஸ்பெயின், பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், உலகம் முழுவதும் உள்ள 50 ஆயிரம் குழந்தைகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை ஆராய்ந்தனர். அப்போதுதான் பர்கர்களுக்கும், ஆஸ்துமாவுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
அதிலும் பணக்கார நாடுகளில் அந்தப் பாதிப்பு அதிகமாகவே இருப்பது தெரிந்தது. அங்குதான் `ஜங் புட்’ எனப்படும் துரித உணவுப் பழக்கம் அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உணவில் அதிகம் இறைச்சி எடுத்துக்கொள்வது கூட ஆஸ்துமாவுக்கான அபாயத்தை ஏற்படுத்துவதில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மாறாக, அடிக்கடி பர்கர் சாப்பிடுவது ஆஸ்துமா அபாயத்தை உண்டாக்கும் காரணிகளை ஊக்குவிக்கக் கூடும் என்கிறார்கள் அவர்கள்.
“ஆஸ்துமாவுக்கும் பர்கருக்குமான இணைப்பு நேரடியாகப் பலம் வாய்ந்தது என்று கூடக் கூற முடியாது. ஆனால் உடல் பருமன், தொந்தி போன்ற மறைமுக வழிகள் மூலம் அது ஆஸ்துமாவுக்கு வழி ஏற்படுத்தி விடுகிறது” என்று ஆய்வுக் குழுவுக்குத் தலைமை வகித்தவரான ஜெர்மனி உல்ம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெண் கேப்ரியல் நெகல் கூறுகிறார்.
அதேநேரம் அவர் ஆறுதலாகத் தெரிவிக்கையில், பழங்கள், காய்கறிகள், மீன் ஆகியவற்றை அதிகமாகச் சாப்பிடுவது ஆஸ்துமாவுக்குத் தடை போடும் என்கிறார். பழங்கள், காய்கறிகளில் காணப்படும் `ஆன்டி ஆக்சிடன்ட்கள்’, மீனில் உள்ள `ஒமேகா 3 பாலிஅன்சாச்சுரேட்டட் பேட்டி ஆசிட்ஸ்’ ஆகியவை ஆஸ்துமாவுக்கு எதிராகச் செயல்பட வல்லவை என்கிறார் கேப்ரியல்.
***
thanks news
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக