...

"வாழ்க வளமுடன்"

20 ஜனவரி, 2011

சகல நோய் நிவாரணி பப்பாளி!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இது ஒரு பழந்தரும் மரமாகும். முருங்கை மரத்தைப் போன்று அதிக பலம் இல்லாத மரவகையைச் சேர்ந்தது. இதன் பூர்வீகம் மெக்சிக்கோ. தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது.



இதன் விளைச்சல் காலம் பிப்ரவரி, மார்ச் மாதங்களும், மே முதல் அக்டோபர் வரையான மாதங்களும் என சொல்லப்படுகிறது. பப்பாளி காயாக இருக்கும் போது பச்சையாகவும், நன்கு கனிந்ததும் மஞ்சளாகவும் தோற்றமளிக்கும். விதைகள் கசப்பாக இருக்குமும். பார்ப்பதற்கு கரு மிளகு போன்றிருக்கும்.


இது மத்திய அமெரிக்காவிலிருந்து 16ம் நுõற்றாண்டில் டச்சு வணிகர்களால் இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


மற்றவகை பழங்களைக்காட்டிலும் பப்பாளியில் குறைந்த அளவு கலோரி உள்ளது. மேலும் ஆப்பிள் ஆரஞ்சு பழங்களைவிட அதிகபடியான உயிர்ச்சத்துக்கள் பப்பாளியில் அதிகம் உள்ளது. இருப்பினும் ஏனோ மற்ற பழங்கள் பெறும் மதிப்பை அதிக சத்து இருந்தும், விலை மலிவாக இருந்தும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் மதிப்பை பெறாமல் இருக்கிறது.


இதன் கனிகள், காய், விதைகள், இலை ,பால் மருத்துவ பயன் உடையது.

காய், பால் ருது உண்டாக்கி, சிறுநீர்ப் பெருக்கி, மலமிளக்கி.

பழம்: உரமாக்கி, சிறுநீர்ப்பெருக்கி, மலமிளக்கி.

**

100 கிராம் பப்பாளியில் உள்ள சத்துகள்:

39 கலோரி,
கார்போஹைட்ரேட் 9.81 கிராம்,
சர்க்கரை சத்து 5.90 கிராம்,
நார்சத்து 1.8 கிராம்,
கொழுப்பு 0.14 கிராம்,
புரதச்சத்து 0.61 கிராம்,
விட்டமின் எ 55 மி.கிராம்,
பி.கரோட்டீன் 276 மி.கிராம்,
தையமின் 0.04 மி.கிராம்,
ரிபோப்ளோவின் 0.05 மி.கிராம்,
நியாசின் 0.338 மி.கிராம்,
விட்டமின் பி6 0.1 மி.கிராம்,
கால்சியம் 24 மி.கிராம்,
இரும்பு சத்து 0.10 மி.கிராம்,
மெக்னீசியம் 10 மி.கிராம்,
பாஸ்பரஸ் 5 மி.கிராம்,
பொட்õசியம் 257 மி.கிராம்,
சோடியம் 3 மி.கிராம்.


மேலும் இதில் புரதங்களை சிதைக்கும் நொதி ( என்சைம்கள்) பப்பைன் இருக்கிறது. மாலிக் அமிலும், அஸ்கார்பின் அமிலம் உள்ளது. உடலுக்கு தேவையான அனைத்து உயிர்சத்துக்களும் நிறைந்த கொழுப்பு அற்றி உணவுப்பொருளமாகும்.


***

பப்பாளியினால் குணமாகும் நோய்கள்:

செரியாமையை நீக்கும்.

வயிற்றுப் புழுவை அழிக்கும்.

எலும்பு மூட்டுகள் வலியை ( அர்த்ரிட்டிஸ்) குணப்படுத்தும்.

ரத்தம் உறைதலை அகற்றும்.

தீப்பட்ட புண்ணை ஆற்றும்.

ரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்தும்.

மலச்சிக்கலை நீக்கும்.

மன அழுத்த நோயை குணப்படுத்தும்.

வீங்கிய நிணநீர் சுரப்பினை கரைக்கிறது.

கண்நோய்களை நீக்கும்.

பித்தப்பை கல்லை கரைக்கும்.

வாயு தொல்லையை போக்கும்.

ரத்த குழாய் தடிப்பை நீக்கும்.

இதயநோயைத் தடுக்கும்.

மூலநோயை போக்கும்.

தோல் நோயான காளான்சக பபையை குணமாக்கும்.

சுவாச கோளாரை போக்கும். கட்டிகள், புண்கள் குணமாகும்.

சிறுநீர்பை தாபிதம் குணமாகும்.

முகப்பொலிவை உண்டாக்கும்.

உடல்கொழுப்பை குறைத்து உடல் பருமனை குறைக்கும்.

***

பப்பாளியும் மருத்துவ குணங்களும்:

பப்பாளியில் விட்டமின் இ இருப்பதால் வயது முதிர்ச்சியினால் ஏற்படும் தோல் சுருக்கத்தை தடுத்து இளமையை தருகிறது.


பப்பாளியின் அதிக அளவு விட்டமின் சி இருப்பதால் மூட்டுவலி, இடுப்புவலி வராமல் தடுக்கிறது.


ப்பாளியின் நார்சத்து அதிகளவு இருப்பதால் தொடர்ந்து 4 வாரம் பப்பாளியை உண்டால் உடலில் மொத்த கொழுப்பில் 19.2 சதவீதத்தைக் குறைத்து அதிக உடல் எடையை குறைக்கிறது.


பப்பாளிச்சாறு கல்லீரல் புற்று நோயை தடுக்கிறது.


பப்பாளியில் நார்ச்சத்து, இரும்பு சத்து, விட்டமின் சி, பி கரோட்டீன், விட்டமின் இ இருப்பதால் புற்று நோய் தடுக்கிறது.


பப்பாளி விதையில் இருந்து எடுக்கப்படும் சத்து சிறுநீரக செயலிழப்பை தடுக்கிறது.


விட்டமின்கள் எ,சி, இ இருப்பதால் இதயநோயை வராமல் தடுக்கும்.


நரம்புகளை பலப்படுத்தி ஆண்மை தன்மையை அதிகரிக்கும்.


உடலில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும்.


பப்பாளியை தொடர்ந்து சாப்பிட நோய் எதிர்ப்ப சக்தியை அதிகரிக்கும். எந்த தொற்று நோயும் உடலை தாக்காது.


பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.



பப்பாளி மரத்தோலானது கயிறு தயாரிக்கவும், இலைகள் சோப்புக்கு மாற்றாகவும் சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஜாவா தீவு மக்கள் பப்பாளி பூக்களை சாப்பிடுகின்றனர்.

*

by-தேவராஜன்

***
thanks தினமலர்
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "