அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ளது ஹார்வர்ட் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்.
அதன் சார்பில் 1989 முதல் சில ஆண்டுகள் ஆய்வு நடந்தது. அதில் 18,414 பெண்கள் பங்கேற்றனர். அனைவரும் 25 முதல் 42 வயதுக்கு உட்பட்டவர்கள். அதன் தொடர்ச்சியாக 2வது கட்ட ஆய்வு 2005ல் தொடங்கி கடந்த மாதம் வரை நடந்தது. மொத்தம் 1.16 லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.
*
பங்கேற்றவர்களில் குண்டு பெண்கள் தனியாக பிரிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் மெதுவாக நடக்கும் வழக்கம் கொண்டவர்களாகவும், சைக்கிள் ஓட்டி பழக்கம் இல்லாதவர்களாகவும் இருந்தனர்.
*
அவர்களில் ஒரு பிரிவை வாரத்துக்கு4 மணி நேரம் சைக்கிள் ஓட்ட கேட்டு கொள்ளப்பட்டது. இன்னொரு பிரிவை தினமும் அரை மணி நேர நடைபயிற்சி செய்ய வைக்கப்பட்டது.
*
இடையே அவர்களது எடையில் ஏற்படும் மாற்றங்கள் அவ்வப்போது சோதிக்கப்பட்டது. வாரத்துக்கு 4 மணி நேரம் சைக்கிள் ஓட்டிய பெண்கள் பிரிவினர் பிரமிக்கத்தக்க வகையில் எடை குறைந்திருந்தனர்.
*
வேகமான நடைபயிற்சி சென்றவர்களின் எடையும் கணிசமாக குறைந்தது. மெதுவாக நடந்ததாக கூறியவர்களின் எடையில் பெரிய மாற்றம் இல்லை.
*
வயதுக்கு ஏற்ற சரியான எடை இருந்த மற்ற பெண்கள் அனைவரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்களில் 3ல் ஒருவர் சைக்கிள் ஓட்டுவதும், 25 சதவீதத்தினர் தினசரி உடற்பயிற்சி செய்வதும் தெரிய வந்தது. வேகமாக நடப்பதாக கூறியவர்களும் நார்மலான உடல் எடையுடன் இருந்தனர்.
*
இதையடுத்து, சைக்கிள் ஓட்டுவது, விரைவாக நடப்பது ஆகியவை பெண்களின் உடலில் கலோரிகளை வேகமாக இழக்கச் செய்துஎடையை குறைக்க உதவுகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
***
நன்றி - தினகரன்.
***
0 comments:
கருத்துரையிடுக