நமது உடம்பில் ஓடும் ரத்தத்தில் உள்ள சிகப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் எனும் புரதசத்து உள்ளது. இது தான் நமக்கு தேவையான பிராண வாயுவை உடலிலுள்ள அனைத்து பாகங்களுக்கும் கொண்டு செல்லுகிறது. இந்த ஹீமோகுளோபின் அளவு குறையும் போது இரத்த சோகை நோய் ஏற்படுகிறது.
***
2. இரத்த சோகை நோயின் அறிகுறிகள் யாவை?
மயக்கம், கிறுகிறுப்பு, உடல் சோர்வு, தோல் மற்றும் நகங்கள் வெளுத்து விடுவது, முகம், கை, கால் வீங்கி விடுவது, மூச்சுவிடச் சிரமம்.
***
II. இரத்த சோகை நோய் வருவதற்கான காரணங்கள்:
1. சத்து குறைவான உணவினால் இரத்தச்சத்து மற்றும் ஃபோலிக்ஆசிட் எனும் சத்து நமது உணவில் குறைவதால்.
*
2. அணைத்து வித புற்று நோய்களுக்கும் தரப்படுகின்ற கீமோதெரப்பி, ரேடியம் தெரப்பி எனப்படும் மருத்துவ சிகிச்சையால்
*
3. நம் குடலில் உண்டாகும் குடல் புழுக்களால்
***
III. நமது உடலின் தலை முதல் பாதம் வரை உண்டாகும் பல்வேறு வியாதிகளால்:
1. மூளையில் ஏற்படும் புற்றுரநோய் கட்டியால் ஏற்படும் இரத்தக்கசிவுகளால் மூக்கில் இரத்தம் வருவதால்.
*
2. வாய் மற்றும் தொண்டை புண்களில் இருந்து இரத்து கசிவு ஏற்படுவதால்.
*
3. சுவாசப்பையில் நுரையீரல் புற்று நோய் மற்றும் டிபி நோய்களால் இரைப்பையில் அல்சர் ஏற்படும் புண்களில் இருந்து இரத்த கசிவு ஏற்படுவதால்.
*
4. மஞ்சள் காமாலை, மலேரியா மற்றும் டைபாய்டு போன்ற காய்ச்சல்களால் கல்லீரல் மற்றும் கணையம் போன்றவகைகளில் வீக்கம் ஏற்பட்டு இரத்த வாந்தி வருவதால்.
*
5. குடல் புண்களால் குடல் இரத்தத்தை உறிஞ்சக்கூடிய தன்மை இழப்பதால்.
*
6. சிறுநீரகத்தில் புற்று நோய்கட்டிகளால் மேலும் டி.பி.நோய் போன்றவற்றின் பாதிப்புகளால் இரத்த கசிவு ஏற்படுவதால்.
*
7. கர்ப்பப்பையில் புற்றுநோய் கட்டிகள் மற்றும் உதிரக்கட்டிகளால் உதிரப்போக்கு அதிகம் ஏற்படுவதால்.
*
8. நாளமில்லா சுரப்பிகளின் வேறுபாடுகளால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்படுவதால்.
*
9. குடல் மற்றும் மலம் கழிக்கும் ஆசனவாய் போன்ற பகுதிகளில் புற்று நோய் கட்டிகள் ஏற்படுவதால்.
*
10. ஆசனவாயில் மூலம் மற்றும் பவுத்திரம் போன்றவைகளால் இரத்த கசிவு ஏற்படுதல்
***
IV. கர்பிணிப்பெண்கள் பேறுகாலத்திலும், குழந்தைகளுக்கு பாலுட்டும் காலத்திலும் சத்தான உணவை சாப்பிடாமல் இருத்தல்
*
V இரத்த சோகையைக் கண்டறிவது எப்படி ? இரத்த சோகை நோய் கண்டறியும் முறை:
மேற்கூறிய அறிகுறிகள் எது இருந்தாலும் மருத்துவரை அனுகி ஆலோசனை பெற்று, இரத்தத்தில் ஹீமோகுளோபின் (HB%) அளவு எவ்வளவு உள்ளது என்பதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
*
மருத்துவரின் அலோசனைப் பெற்று 6 மாதங்களுக்கு ஒருமுறை குடல் புழுக்களை அழிக்கும் பூச்சி மாத்திரைகள் சாப்பிடவேண்டும்.
*
இரத்த சோகை அதிகம் இருப்பின் இதற்கும் மருத்தவரின் ஆலோசனை பெற்று 3 மாதங்களுக்கு தொடர்ந்து இரத்தச்சத்து மாத்திரை மற்றும் Folic Acid மாத்திரையும் சாப்பிடவேண்டும்.
*
தினமும் ரத்தச்சத்து அதிகமுள்ள உணவு வகைகள், பழங்கள், பச்சைகாய்கறிகள், பசுமையான கீரைகள், தானிய வகைகள், காய்ந்த பழம் மற்றும் கொட்டை வகைகள், வெல்லம், மாமிச வகைகள், ஈரல், முட்டை, பால் ஆகியவைகளை உணவில் சேர்ந்து கொள்ளவேண்டும்.
***
நமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்த பட்சம் கீழ்கண்டவாறு இருத்தல் நலம்:
HB % அதிக பட்சம் - 14.08 gm %
ஆண்கள் - 13.00 gm %
பெண்கள் - 11.00 gm %
கர்ப்பிணி பெண்கள் - 10.00 gm %
குழந்தைகள் - 12.00 gm %
பள்ளி செல்லும் வயதினர் - 12.00 gm %
முதியோர்கள் - 10.00 gm %
*
"இரத்த சோகை இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்"
:)
***
thanks ஆத்தூர்.
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக