...

"வாழ்க வளமுடன்"

12 அக்டோபர், 2010

உடல் பருமனும், அதனால் நோயும், அதனை எப்படி குறைப்பது? - ( BMI ) - PART- 3

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
உடல் பருமனைக் கண்டு கொள்ள சில குறுக்கு வழிகள்:



1. அந்த குண்டா இருப்பாரே அவரா என்று சிலர் அடையாளம் காட்டும்போது

*

2. இதுவரை இரண்டாவது மாடியில் இருந்த நீங்கள் க்ரவுண்ட்ப்ளோருக்கு மாறி விடலாமா என்று யோசிக்கும் போது.

*


3. அப்பா தொப்பையில குத்து என்று உங்கள் சின்ன மகள் சிரித்து விளையாடும் போது

*

4. லிப்ட்டில் நீங்கள் சுகமாக நிற்க, கூட வருகிறவர்கள் நசுங்கி கசங்கும் போது

*

5. இரவு நிகழ்ச்சிகளில் தேவைக்கும் அதிகமாக மூச்சு வாங்கும்போது

*

6. பாத்ரூமுக்கு போகக் கூட ஏதாவது பஸ் கிடைக்குமா என்று யோசிக்கும்போது

*

7. நேராக நிற்கும் போது உங்கள் பாதங்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடும் போது

*

8. உங்கள் டாக்டர் 'எதுக்கு கொலஸ்டிரால் ஒரு தடவை பாத்துடுங்க' என்று சொல்லும்போது
*

9. 'சார்... ரெண்டு பொங்கல்... மூணு ஸ்பெஷல் சாதா சொல்லிரவா...' என்று நீங்கள் யோசிக்கும்போதே சர்வர் அசால்டாக கேட்கும்போது
*

10. வழக்கமாக உங்களை ஏற்றிக் கொண்டு பெரம்பூருக்குப் போகிற ஷேர் ஆட்டோ 'இல்ல சார். வண்டி புரசைவாக்கத்தோட சரி...' என்று சொல்லும்போது
*

11. இரயில் பயணங்களில் நீங்கள் மேல் பார்த்ததில் நிம்மதியாகத் துவங்க, கீழ் பார்த்ததில் இருக்கிறவர் எதற்கு வம்பு என்று பயத்தில் தூங்காமல் எதிர்பக்கமாக மாறி உட்கார்ந்து கொண்டு வரும்போது.


***


மற்ற நாடுகளில் பருமன் நபர்கள் எவ்வளவு இருக்கிறார்கள்:

அமெரிக்கா 30.6%
மெக்ஸிகோ 24.2%
இங்கிலாந்து 23%
செக்கோஸ்லோவாக்கியோ 22.4%
கிரீஸ் 21.9%
ஆஸ்திரேலியா 21.7%
நியுசிலாந்து 20.9%
கனடா 14.3%
ஜெர்மனி 12.8%
ஸ்வீடன் 9.7%
பிரான்ஸ் 9.4%
ஸ்விட்சர்லாந்து 1.7%
ஜப்பான் 3.2%


***

1200 கலோரிகள் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ள உடல் எடையை குறைப்பதற்கான உணவுப் பட்டியல்:



காலை 6.30:


காபி, டீ, பால் _ 100 மில்லி (ஆடை நீக்கியது)

*

காலை 8.30:

இட்லி (3)/தோசை (2)/ சப்பாத்தி (3) / இடியாப்பம்
அல்லது உப்புமா, சாம்பார் ஒரு கப், சட்னி ஒரு கப்.

*

காலை 10.30 :

காய்கறி சூப்/தக்காளி சூப்/ மோர்/இளநீர்.

*

மாலை 12.30 :

சாதம் ஒரு கப், சப்பாத்தி (1), சாம்பார், ரசம், மோர், கீரை, .

*
மாலை 3.30 : காபி/டீ/பால் 100 மில்லி (ஆடை நீக்கியது) மற்றும் மாரி பிஸ்கட்/தோசை (2)/சுண்டல்.

*

மாலை 7.30 மணி: இட்லி, (3)/தோசை (2)/சப்பாத்தி (3) அல்லது சாதம் ஒரு கப், சப்பாத்தி (1), சாம்பார், ரசம், காய்கறிகள்.

*

மாலை 9.00 மணி : பால் 100 மில்லி (ஆடை நீக்கியது).

சேர்த்துக் கொள்ள வேண்டியது:

1. காய்கறி, சாலட், கீரை, முளைகட்டிய பயறு நார்ச்சத்து மிக்க உணவுகள் (வாழைத்தண்டு, முழு கோதுமை மாவு, சீரகம்,
முருங்கை, காலிஃபிளவர்)

2. மீன் (75 கிராம்) _ வாரம் இருமுறை

3. தவிர்க்க வேண்டியவை:ஐ ஸ்கிரீம், கிரீம் கேக், பிஸ்கட்ஸ் மற்றும் பேக்கரி உணவுகள் பழச்சாறுகள், ஜுஸ் குளிர்பானங்கள் பூஸ்ட் ஹார்லிக்ஸ், காம்ப்ளான் எண்ணெய், வெண்ணெய், சீஸ், டால்டா வறுத்த மற்றும் பொதித்த உணவு வகைகள் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் எண்ணெய் வித்துக்கள் (வால்நட் பிஸ்தா, முந்திரி, வேர்க்கடலை) பழங்கள் (மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா) கிழக்கு வகைகள் (உருளை, கருணை, சேப்பங்கிழங்கு)


***


உலகம் முழுக்க அதிக எடையுடன் _ இருப்பவர்கள் 12 மில்லியன் இதில் 300 மில்லியன் நபர்கள் 'உடல் பருமன்' நிலையில் பாதிக்கப்பட்டவர்கள். ஒரு நாளைக்கு ஒரு மைல் நடந்தால் ஒரு
வருஷத்திற்கு பத்து பவுண்ட் கொழுப்பு குறைக்கப்படுகிறது. டியூக்
பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிற ஆய்வில் உடல் பருமன் உடையவர்களின் செக்ஸ் வாழ்வு கடும் பிரச்னைகளைச் சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. செக்ஸ் வாழ்விற்கான ஆர்வக் குறைவு, மெல்ல மெல்ல செக்ஸை தவிர்க்க முயல்வது என பருமன்கள் மற்றவர்களைவிட இருபத்தி ஐந்துக்கும் அதிகமான சதவிகிதத்தினர் செக்ஸ் தவிர்க்க முயல்வது .

***


சராசரியாக 150 பவுண்ட் எடை கொண்ட ஒருவர், ஒருமணிநேரம் கீழ்க்கண்ட வேலைகளை _ உடற்பயிற்சிகளைச் செய்தால் குறைக்கப்படுகிற கலோரி எவ்வளவு என்று கவனியுங்கள்.




டென்னிஸ் 425 கலோரி
சைக்கிள் ஓட்டுவது 415 கலோரி
ஏரோபிக் 350
நடனம் 350
ட்ரெட்பில்நடை (4னீஜீலீ) 345
கோல்ப் 270
வேக நடை 185
ஓடுவது 700
ஜாகிங் 655
நீச்சல் 540* *லைப்போ சக்ஷன்.


1. உடலில் சில குறிப்பிட்ட இடங்களில் தேவையில்லாமல்
தேங்கி விடுகிற கொழுப்பை குறைக்க இந்த அறுவை சிகிச்சை பயன்படுகிறது. யாருக்கு செய்யலாம்? இயல்பான எடையுடன் தேவையற்ற இடங்களில் சேர்ந்திருக்கிறவர்கள். எங்கு எங்கு எடுக்க முடியும்?

வயிறு, இடுப்பு, பின்பக்கம், தொடை மேல்கை, கன்னம்,
கழுத்து .உங்கள் மருத்துவர் இதை சரியாக முடிவு செய்வார்.

*

2. உடல் பருமனுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள நீங்கள் எடுத்து வைத்திருக்கும் இன்சூரன்ஸ் உதவி செய்யுமா? அல்லது உடல் பருமனால் ஏற்படுகிற நோய்களுக்கு இன்சூரன்ஸ் வழி சிகிச்சை
எடுத்துக் கொள்ள முடியுமா?

தற்சமயம் இருக்கிற கம்பெனிகளின் மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசி_களின்படி உடல் பருமனுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள அவற்றை பயன்படுத்த முடியாது. ஏற்கனவே இருக்கிற நோய் அல்லது நிலை என்கிற வகையில் உடல் பருமன் வருவதால் இன்சூரன்ஸ் வழி சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியாது. தற்சமயம் ஐசிஐசிஐ நீரிழிவு _ டயாபடிஸ் நோய்களுக்கான இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவரை எந்த மருத்துவ இன்சூரன்ஸ் அரவணைப்பிலும் உடல் பருமன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

*

3. உடல் பருமன் பற்றிய ஆய்வில் நிபுணர்கள் மேலும்
ஒரு புதிய தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். கொழுப்பு உற்பத்தி என்பது செல்களில் இருக்கிற ஒரு புரோட்டீனால் நடைபெறுகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்கு பெயர் கீஸீt. ஆய்வில் இந்த புரோட்டீன் அதிகமாக இருந்தால் அது செல்லில்
இருக்கிற கொழுப்பை தட்டி வெட்டி குறைக்க வைக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது. இது குறைவாக இருக்கிற செல்கள் பருத்துவிடுகின்றன. ஒரு வரியில் சொன்னால் கொழுப்பு செல்கள் உருவாக்கத்தைத் தடுக்கிறது. இந்த கண்டுபிடிப்பு மேலும் சில
வழிகளை உடல் பருமனை எதிர்த்துப் போராடாமல் உருவாக்கும் என்று நம்புகிறார்கள்.




***

நன்றி குமுதம் ஹெல்த்
http://groups.google.co.in/group/panbudan/msg/ef3f38d0874ab7be

***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "